Thread!
திமுக அரசின் தொடர் முயற்சியின் விளைவாக, நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்!
திருச்சி மாவட்டம்,தேவராய நேரியில் நரிக்குறவர்கள் வசிப்பதற்காக 1970ம் ஆண்டிலேயே திமுக அரசு தனியாக குடியிருப்புகளை கட்டி கொடுத்தது.
(1/6)
2008-2009-ல் திமுக அரசால் நரிக்குறவர் நல வாரியம் அமைக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அன்றைய ஒன்றிய அமைச்சராக இருந்த வி.கிஷோர் சந்திர டியோவுக்கு கடந்த 11.08.2013 அன்று கலைஞர் கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
(2/6)
கலைஞரின் அறிவுரைப் படி மாநிலங்களவையில் 2016ம் வருடம் திமுக MP @tiruchisiva அவர்களின் முயற்சியால் நாடோடி வாழ்க்கை வாழும் #நரிக்குறவர் சமூகத்தினரை #பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் பிறகு பாஜக அரசு அதை கிடப்பில் போட்டது
(3/6)
2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும் என்று முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வலியிறுத்தி இருந்தார்
(4/6)
அதன் பிறகு மக்களவையிலும் மாநிலங்கவையிலும் திமுக தொடர்ந்து நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திருச்சி சிவா @tiruchisiva , அக்கா @DrKanimozhiSomu & பலர் வலியுறுத்தினர்.
(5/6)
அதன் பயணாக தற்போது சட்டம் நிறை வெறி இருக்கிறது. இது திமுகவின் நீண்டகாலம் போராட்டம். அதை முன்னின்று ஒன்றிய அரசிடம் போராடி பெற்றுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏 வாழ்த்துகள்💐
(6/6)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.