Surya Born To Win Profile picture
Mechanical Engineer | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | I belong to the Dravidian Stock | Tweets are My Personal |
vishnu Profile picture 1 added to My Authors
6 Aug
Thread!

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகம் இது வரை காணாத களம்!

வழக்கமாக ஆளும் கட்சிக்கே நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதும் 10 வருடங்கள் ஆண்டு கொண்டிருக்கிற கட்சி பல தரப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர வேண்டும், ஊடகங்களின் தாக்குதல்கள் இருக்கும்.

(1/7)
அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டியே எதிர்கட்சி ஸ்கோர் செய்யும் நிலை இருந்தது. தன் குஞ்சுகளை பருந்திடமிருந்து காக்க கோழி ஓடி ஓடி காப்பது போல் கடைசி வருடத்தில்
ஆளும்கட்சி, ஆட்சியை தக்க வைக்க போராட வேண்டும். மக்களிடம் மண்டியிட வேண்டும்.

(2/7)
ஆனால் இன்று ஆளும் கட்சியின் நிலையே வேறு. அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை, ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் கூட பெரிதாக இல்லாமல் கேவலமான துக்ளக் தர்பார் நடத்தி வருகின்றனர். ஆனால் அவை எதுவும் விவாத, பேசு பொருள் ஆகாமல் மாறாக எதிர்கட்சியின் மீது அத்தனை வன்மங்கள்,

(3/7)
Read 7 tweets
3 Aug
Thread!

#NewEducationPolicy2020

ஆ.ராசா 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள்.

#TNRejectsNEP

(1/8)
ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். ஒட்டுமொத்த நாடும் தனக்கு திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில்,

#TNRejectsNEP

(2/8)
ஆ.ராசா வாதாடிய விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படிப்பட்ட அறிவுச்சுடர் ஆ.ராசா , "3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால்,"

#TNRejectsNEP

(3/8)
Read 8 tweets
3 Aug
Thread! Must Read!

ஒரு 42நிமிட நேர்காணல்.
கேள்வி பதில்கள்.
பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், கலைஞர், நேரு, வல்லபாய் படேல், வில்லியம் ஜோன்ஸ், ராஜேந்திர பிரசாத், விபி சிங், மண்டல் கமிஷன், புருஷோத்தம தாஸ் டாண்டன், இட ஒதுக்கீடு வரலாறு,

(1/7)
வர்ணாஷ்ரமம், இந்துத்துவ அரசியல், திருக்குறள், சமூக நீதி என்று அத்தனை குறிப்புகளையும் செய்திகளையும் தனது ஒவ்வொரு பதிலிலும் மேற்கோள்களாக ஒரு தேர்ந்த வரலாற்றாளரைப்போல் மிகத்தெளிவாக நிறைத்திருக்கிறார் ராசா. திராவிட இயக்க கொள்கை விளக்க குரல்களாக

(2/7)
நாவலரையும், பேராசிரியரையும் சொல்வார்கள். இன்றைய தேதிக்கு நம்மிடம் இருக்கும் மிக மிக மிக சொற்பமான கொள்கையாளர்களில் முக்கியமான குரல் ராசாவினுடையது.

புதிய கல்விகொள்கையினைப் பற்றி குறிப்பிடும்போது

(3/7)
Read 7 tweets
30 Jul
Thread!
#NewEducationPolicy2020

புதியகல்வி கொள்கை படி மத்திய அரசாங்கம் உயர்கல்வி இலக்கான
GER(Gross Enrollment Ratio) 2035க்குள் 50% எட்ட வேண்டுமென்கிறது

காரணம் இந்தியாவின் தற்போதைய GER 26%

🔹தமிழ்நாட்டின் தற்போதைய GER என்ன தெரியுமா?

49%

#TNRejectsNEP2020
#NEP2020
(1/5)
🔹இதில் தமிழக பெண்களின் GER மட்டும் எவ்வளவு தெரியுமா?

46%

🔹தமிழ்நாட்டின் அடுத்த 5ஆண்டுக்கான இலக்கு என்ன தெரியுமா?

60%

🔹இந்த GER 46%, 60% எல்லாம் என்ன தெரியுமா?

பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.

#TNRejectsNEP2020
#NEP2020
(2/5)
பள்ளிக்கல்வியைப் பொறுத்த அளவில் தொடக்கப் பள்ளிகளிலிருந்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்பவர்களின் GER 100 % என்ற இலக்கை 2030ல் எட்டவேண்டும் என்று மத்தி அரசின் கொள்கை சொல்கிறது.

இந்த 100% இலக்கையும் தமிழ்நாடு 2010லேயே அடைந்துவிட்டது.

#TNRejectsNEP2020
#NEP2020
(3/5)
Read 5 tweets
23 Jul
Thread!

அன்புள்ள @Udhaystalin
@EzhilarasanCvmp
@ptrmadurai

இந்த எளியவனின் கருத்தை தவறாக எடுக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் நாம் இன்னும் வீரியமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு

இங்கு இன்னும் பெரிய அளவில் ஒருங்கிணைப்பு வர இது ஒரு சின்ன கணக்கீடு தான்

(1/5)
திமுக இளைஞரணி, மாணவரணி, IT Wing என மூன்றும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் அதன் வீச்சு அதிகம் இருக்கும்

திமுக இளைஞரணியில் ஒரு லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் குறைந்த பட்சம் 50ஆயிரம் பேர் என எடுத்துக் கொள்வோம்.

(2/5)
அதில் வெறும் 10% ஆட்களை தேர்வு செய்தால் 5 ஆயிரம் பேர்

அதே போல மாணவரணியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் இருப்பார்கள். அதில் 10% கணக்கிட்டால் 5 ஆயிரம் பேர்

அதே போல் திமுக IT Wingல் 25ஆயிரம் பேர், அதில் 10% என்றல் 2500 பேர்

(3/5)
Read 5 tweets
22 Jun
Thread!

இலவசத்தை விமர்சிக்கும் கூமுட்டைகளுக்காக, #Jeyaranjan சாரின் நறுக் பதில்கள்

நிருபர்: அரிசியை இலவசமாக வாங்கி வெளியில் விக்கிறாங்களே, சரியா?

#ஜெயரஞ்சன் : விக்கிற அரிசியை நீங்க வாங்குறீங்களா, இல்லை உங்க கூட வேலை செய்றவங்க யாராவது வாங்கறாங்களா?

நிருபர்: இல்லை

(1/6)
ஜெ.ர : யார் வாங்கறாங்க தெரியுமா? அரசு கொடுக்கும் அரிசி ஒருகுடும்பத்து தேவையில 30%தான். மீதம் தேவையான 70%த்துக்கு அவன் எங்க போவான்?அதனாலதான் தேவையில்லன்னு விக்கிறவங்க கிட்ட குறைஞ்ச விலையில் வாங்கி, தன் குடும்ப தேவையை பூர்த்திசெய்து கொள்கிறான். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?

(2/6)
#நிருபர்: அரிசியை வாங்கி கோழிக்கு போடறாங்களே?

#ஜெயரஞ்சன் : கொடுக்கிற அரிசில சாப்பாடு மட்டும் தான் செஞ்சி சாப்பிடனும், இட்லி, தோசை, பொங்கல் வைத்து சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா?

#நிருபர் : இல்லை

(3/6)
Read 6 tweets
18 Jun
Thread!

#திமுக #இந்தியா #சீனா

1962ல் இந்திய சீனப் போரின் போது தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டடு,"வீடு இருந்தால் தான் ஓடு மாற்றலாம், நாடு இருந்தால் தான் கட்சி நடத்தலாம்" என்றும்,

(1/7)👇
"நாட்டிற்கு ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அவனுக்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும். நாம் அப்படி நடந்து கொண்டால் வருங்கால தலைமுறை நம்மை சபிக்கும்" என வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த உடன் பேரறிஞர் சொன்னது.

(2/7)👇
"ஆகாஷ்வாணி என்ற பெயரை உச்சரிப்பதை நிறுத்தும் வரை வானொலி நிலையம் செல்ல மாட்டோம்" என்ற திமுகவின் முடிவைக் கூட ஒத்தி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு போர் நிலை குறித்து, சென்னை வானொலி நிலையத்தில் இரண்டு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்.

(3/7)👇
Read 7 tweets
8 Jun
Thread!
ராமசுப்பு: தமிழ்நாடு முழுக்க நாங்கள் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் சர்வே எடுத்தோம்,அவங்க தேர்வு வைக்கணும்ன்னு சொன்னாங்க

நெறியாளர்: சர்வே யார் எடுத்தாங்க?அந்த அமைப்பின் பெயர் சொல்லமுடியுமா?

ராமசுப்பு : அதெல்லாம் சொல்லமுடியாது.சர்வே எடுத்தோம்னா நம்புங்க

(1/3)
நெறியாளர்:- சர்வே எப்போ எடுத்தீங்க?

ராமசுப்பு: இரண்டு மாசம் முன்னாடி எடுத்தோம்.

நெறியாளர்:- இரண்டுமாசம் முன்னாடி யாரும் வீட்டைவிட்டே வெளியில் வரமுடியாது. தமிழ்நாடு முழுக்க எப்படி சர்வே எடுத்தீங்க?

ராமசுப்பு :- அதெல்லாம் எல்லாருக்கும் இமெயில் அனுப்பி சர்வே எடுத்தோம்

(2/3)
நெறியாளர்:- சரி இப்ப சொல்லுங்க ? சர்வே யார் எடுத்தாங்க? அந்த அமைப்பின் பெயர் சொல்லுங்க.

ராமசுப்பு :- அதெல்லாம் சொல்லமுடியாது. சீக்ரெட். சர்வே எடுத்தோம்ன்னா நம்புங்க

எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க.. 😡😡😡

(3/3)
Read 3 tweets
30 May
Thread!

2006-11 திமுக ஆட்சி காலத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் பொறுப்பு வகித்தபோது உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை கவனித்து வந்தார். திடீரென சட்டசபையில் ஒருநாள், "1000ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு மேல்நிலை தொட்டி அமைத்து, பாதுகாக்கப்பட்ட"

(1/6)👇
"குடிநீர் வழங்கப்படும்" என்று ஸ்டாலின் அறிவித்தார். அதிகாரிகள் அலறி அடித்துக் கொண்டு வந்து அவரிடம் முறையிட்டு "இந்த அறிவிப்பு வேண்டாம் என்று சொன்னேமே நடைமுறைப் படுத்துவதில் துறைசார்ந்த சிக்கல் இருப்பதை சொன்னோமே, Norms படி 1000 தொட்டிகள் கட்டமுடியாதே" என வாதிடுகிறார்கள்

(2/6)👇
தளபதி சிரித்துக்கொண்டே அதிகாரிகளைப் பார்த்து "அப்படியா என்ன உங்கள் norms படி 350 பேர் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மட்டுமே மேல்நிலை தொட்டி அமைக்கவேண்டும் என்பதுதானே? Norms ஐ மாற்றுவோம்" என கேட்கிறார். கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அதிகாரிகள் வாயடைத்து நிற்கிறார்கள்

(3/6)👇
Read 6 tweets
28 May
Thread!

திருட்டு திராவிடம் என்ன கிழித்தது?

1989ம் வருடம் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது திமுக. கலைஞர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சமூக நலத்துறை அமைச்சர் தேர்தல் வாக்குறுதியின் படி "ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நிதியுதவி" வழங்கும்

(1/5)👇
மூவலூர் மூதாட்டியார் திருமண நிதி உதவி திட்ட வரைவை கலைஞரின் பார்வைக்கு வைக்கிறார். படித்துப்பார்த்த கலைஞர், படிப்பை பற்றி ஏதும் குறிப்பிடாமலிருந்த அதில் "எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நிதியுதவி" என்று திருத்தம் செய்கிறார்.

(2/5)👇
அமைச்சரிடம் துறை அதிகாரி காதை கடிக்கிறார். துறை அமைச்சர் கலைஞரைப் பார்த்து," அண்ணா, எட்டாம் வகுப்பு வரை என்று போட்டால் எட்டாம் வகுப்பு வரை படித்த அந்த பெண்களை தவிர படிக்காதவர்கள் இந்த நிதி உதவியை வாங்க முடியாதே" என்று தயங்கி தயங்கி சொல்கிறார்,..

(3/5)👇
Read 5 tweets
27 May
Thread!
#இலவச_மின்சாரம்

அடிமை அரசு இலவச மின்சாரத்தை மோடி அரசின் மிரட்டலுக்கினங்கி தாரை வார்க்கப் பார்க்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான போராட்டமும் அனுமதியும் வரலாறு.. அவசியம் படியுங்கள்
👇👇👇

(1/10)👇
1984, MGRஆட்சி காலத்தில் இலவச மின்சாரம் வேண்டி உழவர் கட்சியின் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் இலட்சக்கணக்கான உழவர்கள் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தை ஒடுக்க, MGRன் காவல்துறையின் துப்பாக்கிசூட்டில் 64பேர் தங்கள் இன்னுயிரை இழந்ததும் விவாசாயிகளுக்கு எதுவும் நடக்கவில்லை

(2/10)👇
அதே வருடம் ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநில திமுக விவசாயிகள் மாநாடு நடந்தது. சுப்புலட்சுமி செகதீசனும், NKK பெரியசாமியும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றியுடன் நடத்திக் காட்டிய அந்த மாபெரும் இரண்டு நாள் மாநாட்டில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

(3/10)👇
Read 10 tweets
26 May
Thread!

#ஸ்டாலின்

கலைஞருக்கு பிறகு அந்தக் கட்சி இரண்டா மூணா உடைஞ்சுடும்ன்னு சொன்னாங்க. அப்படி நடக்கலை. ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பு இல்லை, அவ்வளவுதான் என்றார்கள். கட்சியை உடையாமல் கட்டுக்கோப்பாக வழி நடத்தினார்.

(1/5)👇
தேர்தல் வியூகம் அமைக்க தெரியலை என்றார்கள். கலைஞர் இல்லாத முதல் பாராளுமன்ற தேர்தல். இந்தியளவில் சாதனை. இவ்வளவு எம்பிக்கள் கொண்ட முதல் எதிர்க்கட்சி என்ற சாதனை. மத்தியில் பிஜேபி மெஜாரிட்டி. திமுக ஜெயிச்சும் வேஸ்ட் என்றார்கள். பாராளுமன்றத்தில் தெறிக்கவிட்டார்கள்.

(2/5)👇
அவருக்கு பேசவே தெரியாது என்று கிண்டல் செய்தார்கள். தொண்டையில் குண்டுபாய்ந்து பேசவே முடியாத ஒருத்தரை முதலமைச்சராக்கிய தமிழக மக்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை.

(3/5)👇
Read 5 tweets
22 May
Thread!

#அண்ணா

போப்பாண்டவரை சந்திக்க 5நிமிடம் ஒதுக்கப்பட்டது பேரறிஞர் அண்ணாவுக்கு

"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ்நாட்டின் முதல்வர் நான்" என ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி 5நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார்

(1/8)
போப்பாண்டவர் சொன்னார், "அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.

அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

(2/8)
"என்ன கேட்டாலும் தருவீர்களா?" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.

"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்ததை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கு போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்"

(3/8)
Read 12 tweets
20 May
Thread!
சங்கி என்பவர் யார்?

சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுகவேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குறியவர். அவர் சுயசிந்தனையற்று, தனக்குவரும் whatsapp& Facebook msgகளை உண்மை என உளமாற நம்பி பலகுழுக்களில் பகிர்பவர். 99%சுயமாக எழுத இயலாதவர்

#Decoding_sangi

(1/15)
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப் பற்றிய சுயபெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும் , மதத்தின் வழியாகவும் எப்படியாவது ஒரு பெருமிதத்தை அடையலாம் என நம்பும் ஒரு பரிதாபத்திற்குரியவர்.

#Decoding_sangi

(2/15)
சங்கி என்பவர் ஒரு புத்தகத்தைகூட முழுவதுமாக வாசித்து அறியாத அபலை. அவருடைய மொத்த தகவகலறிவும் அவனை இயக்கும் மாரிதாஸ் போன்ற ஒருசிலரால் கட்டுப்படுத்தப்பட்டது. அவருடைய அனைத்து கேள்விகளும்,பதில்களும் அவர்களிடமிருந்து இவரது மண்டைக்குள் copy& paste செய்யப்பட்டது

#Decoding_sangi

(3/15)
Read 15 tweets
19 May
Thread?

#கலைஞர் திருட்டு ரயிலேறி வந்தாரா?

உண்மையை தேடி அலைவதில் அயர்வு இருந்தாலும் என்ன ஒரு திருப்தி!!

மாயாவதி படம் 1949 ல் ரிலீஸ் அகிறது. அந்த காலத்து பாகுபலி ரேஞ்சுக்கு செலவு செய்கிறது தயாரிப்பு நிறுவனம் (மாடர்ன் தியேட்டர் சுந்தரம்)
en.m.wikipedia.org/wiki/Mayavathi

(1/7)
படத்தின் கதையும் வசனமும் சரியில்லை என்பதால் படம் வசூலில் பயங்கர அடி. ஆனால் அதே நேரத்தில் ரிலீஸ் ஆன இன்னொரு படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியிருக்க, கதை அப்படி இபப்டி இருந்தலும் வசன வீச்சுக்காக கலெக்‌ஷன் கல்லா கட்டுகிறது. பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடிக்கிறது.

(2/7)
மாயவதிக்கு பின் ரிலீஸாகி இருந்த மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தின் மற்ற படங்களும் சரியாக ஓடவில்லை. அதனால் விட்ட காசை திரும்ப மீட்டெடுக்க, வாங்கிய கடன் சுமையில் இருந்து வெளியே வர, Producer TR சுந்தரம் கலைஞரை தேடிக்கண்டு பிடித்து அவரின் அடுத்த படத்திற்கு வசனம் எழுத சொல்கிறார்

(3/7)
Read 7 tweets
17 May
Thread!

#அவதூறுகள்

கலைஞர் மேல் பலரும் பலவித குற்றச்சாட்டுகளை வைக்கும் போது அதன் உண்மையை அறிந்து கொள்ள நானும் முயற்சிப்பேன். அப்படி சொல்லப்பட்ட அனேக குற்றச்சாட்டுகள் வெறும் அவதூறுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன்.

அவற்றில் சில👇

(1/14)
1. ஒருமுறை கனிமொழி அவர்கள் இந்திமொழி திணிப்புக்கு எதிராக மேலவையில் பேசும்போது கலைஞர் அவர்கள் தனது 14 வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு வரலாறு அறியாத பலரும்

(2/14)
"இந்தி எதிர்ப்பு என்பதே 1967 ல் தான் நடந்தது அப்போது கலைஞருக்கு வயது 43" என்று கிண்டலடித்தார்கள். ஆனால் அந்த முட்டாள்களுக்கு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ல் நடந்தது அதில் மாணவராக இருந்த கலைஞர் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார் என்று தெரிய வாய்ப்பில்லை.

(3/14)
Read 14 tweets
17 May
கீழகண்ட 100சொற்கள் & சொற்றொடர்களில் எதை ஒன்றை சொன்னாலும் "ஒரு சொல்" தான் நினைவுக்கு வரும்

அது எமையெல்லாம் ஆட்டுவிக்கும் "மந்திரச் சொல்"
"கலைஞர்"

1. வள்ளுவர் கோட்டம்
2. பராசக்தி
3. 108
4. அண்ணா நூற்றாண்டு நூலகம்
5. திராவிடம்
6. எழுத்து
7. சமத்துவபுரம்

(1/10)
8. பூம்புகார் கலைக்கூடம்
9. முரசொலி
10. உழைப்பு
11. அண்ணா அறிவாலயம்
12. பெண்கள் சொத்துரிமை சட்டம்
13. மனோகரா
14. குறளோவியம்
15. கோயம்பேடு பேருந்து நிலையம்
16. கண்ணொளி திட்டம்
17. குளித்தலை
18. உழவர் சந்தை
19. குடிசை மாற்று வாரியம்
20. செம்மொழி
21. திருக்குவளை

(2/10)
22. திருமண உதவி திட்டம்
23. தொல்காப்பிய பூங்கா
24. கைரிக்‌ஷா ஒழிப்பு
25. அய்யன் வள்ளுவர் சிலை
26. இந்தி ஆதிக்க எதிர்ப்பு
27. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
28. சிற்றுந்து
29. விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
30. இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு

(3/10)
Read 10 tweets
16 May
Thread!

#இடஒதுக்கீடு #கவுண்டர்

திமுக எதிர்ப்பு கல்லூரி நண்பர் ஒருவரிடம் இடஒதுக்கீடு பற்றிய பேச்சில், "உங்க கவுண்டர் இனத்தையும் FCயிலிருந்து BCக்கு மாற்றியது கலைஞர் தான். அது தெரியுமா?" என்று சொன்னவுடனே மறுத்த அவர்,

(1/5)
"6மாசத்துக்கு முன்ன எங்க கொங்கு கவுண்டர் சங்கத்தோட விழா நடந்தது, அதில் தமிழக அரசால் FCலிருந்து BCக்கு நம்ம சமுதாயம் வந்த வருடம் 1973ன்னு சொன்னாங்க, கலைஞர் தான் செய்தார்ன்னு சொல்லல, நீ பொய் சொல்ற" ன்னு கோவப்பட்டார்.

(2/5)
நான் சிரித்துக் கொண்டே அவரிடம், "1973ல் யாரோட ஆட்சி?", என்றேன். அவர் உறுதியாக, " எம்ஜிஆர் ஆட்சி" என்றார்.. "அப்படியா, நல்லா தெரியுமா?" என திரும்பவும் சிரித்துக் கொண்டே கேட்டேன்.

(3/5)
Read 5 tweets
16 May
Thread!
கலைஞர் யாரென்று தெரியுமா இளைஞர்களே?

1942ல் முரசொலி பத்திரிகைய தொடங்கிய கலைஞருக்கு
அப்போ வயது வெறும் 18தான் இளைஞர்களே!

MGR துணைநடிகராக நடித்த அபிமன்யூ(1948) படத்துக்கு ASAசாமி என்பவருடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதினார்.அப்போ அவருக்கு வயது வெறும் 24தான் இளைஞர்களே!
1/3
மருதநாட்டுஇளவரசியில் MGRரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்தப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியபோது
கலைஞருக்கு வயது 26தான் இளைஞர்களே!

பராசக்திபடத்தில் தனது செல்வாக்கால் சிவாஜி, SSராஜேந்திரன் என்ற 2நடிகர்களை தனது படத்தில் அறிமுகப்படுதிய கலைஞருக்கு அப்போது வயது 28தான் இளைஞர்களே!
2/3
இணையத்தில் அமர்ந்து அவரைபற்றி ஏதும் அறியாமல் எழுதுகிறீர்களே, உங்கள் வயது என்ன? இந்த வயதில் நீங்கள் சாதித்தது என்ன?

உங்களை போல கலைஞர் ACரூமில் வசதியாய் உட்காரவில்லை இளைஞர்களே!

கலைஞரின் காலம் காசில்லாவிட்டால் எளிதில் படிக்கவேமுடியாத காலம் இளைஞர்களே!

கலைஞர் ஒரு சகாப்தம்!
3/3
Read 3 tweets
30 Apr 19
Thread👇👇👇
ஈழம் திமுக அதிமுக வரலாறு!

"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும்"
விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பால சிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா.
அந்த ஜெயலலிதாவுக்குதான் தமிழ் தேசிய ஆதரவாளர்களால் ஈழத்தாய் பட்டம் கொடுத்து "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று வக்கணையாக பேசி இலை மலர்ந்து 7 வருடங்களாகியும் இன்னும் ஈழம் மலராமல் இருக்கிறது!
Read 11 tweets
31 Jul 18
Thread!
பிறந்து வளர்ந்தது குக்கோ குக்கிராமம். 10 ம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளி. போஸ்ட் பாக்ஸ் டவுசரில் அங்கங்கே ஒட்டி மஞ்சப்பையுடன் முடித்தேன்.

#சமூகநீதி #இடஒதுக்கீடு #கலைஞர்
12 ம் வகுப்பு வெளியூர். பேண்ட் போட்டே ஆகவேண்டும் என்பதால் முதன் முறையாக ஒரே ஒரு பேண்ட் எடுத்து இரு வருடமும் அதே தான். முதன் முதலாக செருப்பும் அப்போதுதான்.. ரப்பர் செருப்பு

#சமூகநீதி #இடஒதுக்கீடு #கலைஞர்
1989 ம் வருடம்.. 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். Engineering, Medicine பற்றிய பெரிய அறிவு இல்லை. கலைஞர் மீண்டும் முதல்வராகிறார். 20 சதவீதம் MBC இடஒதுக்கீடு அளிக்கிறார். இட ஒதுக்கீடு என்றால் என்னெவென்றே தெரியாத வயது.. அதாவது ஊர்

#சமூகநீதி #இடஒதுக்கீடு #கலைஞர்
Read 7 tweets