M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Dec 27, 2022, 6 tweets

#வராஹி_தேவி

இன்றைய பஞ்சமி வராஹி வழிபாடு

வராஹி தேவி வழிபாட்டை பொறுத்தவரை சுத்தம் என்பது மிக மிக அவசியம்.

மனதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

நாமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

நம்மை சுற்றி இருக்கக் கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வராஹி அம்பாளின் திருவுருவ படத்திற்கு சிவப்பு நிற அரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

வராஹி தேவியின் படம் இல்லை என்றால் ஒரு மஞ்சளைப் பிடித்து வைத்து அதை வாராகி அம்மனாக பாவித்து கொண்டு இந்த பூஜையை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

பூஜை அறையில் நீங்கள் ஏற்றி வைத்திருக்கு தீபத்திற்கு முன்பு வாராஹி அம்மனை மனதார நினைத்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

பின் கீழ கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.

#மந்திரம்

ஓம் நமோ பகவதி ரீம் ஹ்ரீம் ஜம் க்லௌம் மஹா
வராஹ முகி தாயே நமோ நமஹ.

ஒரு 10 நிமிடங்கள் பூஜை அறையிலேயே அமர்ந்து வராகி தேவியை நினைத்து மனதார தியானம் செய்யுங்கள்.

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை அம்பாளிடம் சொல்லி, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் படி வேண்டுதல் வைத்தால்

உங்களுடைய வேண்டுதல்களுக்காண பலன் அடுத்த ஒரு சில நாட்களிலேயே கிடைக்கும்.

இந்த பூஜையை இன்று மாலை 6.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு.

முழு நம்பிக்கையோடு வாராஹி தேவியின் பாதங்களை பற்றிக் கொண்டவர்கள் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling