Dr.Devi PhD Profile picture
Assistant Professor #Genetics Ping me for any Genetics related questions #அறிவோம்_மரபியல் #அறிவியல்_பேசுவோம்

Jan 7, 2023, 9 tweets

கோழிக்கு மாதவிடாய் வருமா?
கோழிமுட்டை மாதவிடாயின் எச்சமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்

1/9

Menstruationன்னதும் உங்களுக்கு இவங்க ஞாபகம் வந்தா அப்படியே அத கடந்து subjectகுள்ள வாங்க

2/9

மனித பெண்களின் கர்ப்பப்பை ஒவ்வொரு மாதமும் கரு உருவாகலாம் என்கிற எதிர்பார்ப்புடன் தனக்குள் epithelial செல்களை கொண்டு பல அடுக்குகளால் தடிமனான படுக்கை போல் தனது endometriumஐ உருவாக்கிக்கொள்ளும்.

3/9

கரு உருவாகாத பட்சத்தில் அந்த தடிமனான திசு படுக்கையை அழித்து ரத்தப்போக்குடன் வெளியேற்றுவதே ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாயாக நிகழ்கின்றது.

4/9

மனிதஇனம் தாண்டி சில மனிதகுரங்கினங்களிலும், வவ்வால் போன்ற சில பாலூட்டிகளிலும் மாதவிடாய் நிகழும். இன்னும்சில பாலூட்டிகளில் endometriumதிசு படுக்கை அழிக்கப்பட்டாலும் உதிரப்போக்கு இல்லாமல் உடம்பே அந்த திசுக்களை உறிஞ்சிக்கொள்ளும் (covert menstruation).

5/9

So சுருக்கமாக மாதவிடாய் கருவை தன் கர்ப்பப்பையில் முழுவதுமாக வளர்த்து குட்டியாக ஈனும் viviparous உயிரினங்களில் அதுவும் குறிப்பாக சில பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வு.

6/9

கோழி மற்றும் அனைத்து பறவை இனங்களும் கருவை கர்ப்பப்பையில் சுமப்பவை அல்ல; Oviparous எனப்படும் முட்டை ஈனுபவை. கோழியில் கருப்பையில் உருவாகும் முட்டை அதன் கர்ப்பப்பையை அடைந்ததும் அதற்கான கால்சியம் ஓடு தயார்செய்யப்பட்டு cloaca வழியாக வெளியேறும்.

7/9

ஆகையால் கருவின் வளர்ச்சி தாயின் உடலிற்கு வெளியே நடக்கும். எனவே endometrium என்கிற பேச்சுக்கே கோழியின் reproductive systemல் இடமில்லை; ஆகையினால் கோழிக்கு மாதவிடாயும் வராது. கோழி மட்டுமல்ல எந்த உயிரினத்தின் முட்டையும் மாதவிடாயின் எச்சமும் அல்ல.

8/9

அது சரி, முட்டையில மூக்குச்சளி இருக்குனு சொன்னது சரியா?

அப்போ கோழிக்கு ஜலதோஷம் புடிக்குமா? ன்னெல்லாம் கேக்காதீங்க 🤫🤫

9/9

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling