VISWA Profile picture

Jan 10, 2023, 8 tweets

#Aestrix_Obelix.
கிபி 50க்குப் பிறகு ரோமப் பேரரசு பெருநிலங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மன்னன் ஜூலியஸ் சீஸர்.
ஆனால், அத்தனை பெரிய பேரரசால் ஒரு சிறிய Gaulish Villageயை மட்டும் தன் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. காரணம், அந்த மக்களிடத்தில் ஒரு Druid இருப்பார். .

அவர் தயாரித்துத் தரும் ஒரு மந்திர பானம் அளப்பரிய சக்தியைக் கொடுக்கும்.
அக்கூட்டத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஓப்ளிக்ஸ் என்று இரண்டு நண்பர்கள். அந்த மந்திரவாதி தயாரிக்கும் மந்திரபானத்தைப் பருகும் ஆஸ்ட்ரிக்ஸிற்கு பலமடங்கு superhuman பலம் வந்து எதிரிகளைப் பந்தாடுவார்.

ஓப்ளிக்ஸ் குழந்தையாக இருக்கும் போது, மந்திர பானம் தயாரித்துக் கொண்டிருக்கையில் அதற்குள் தவறி விழுந்து விடுவார். எனவே, அவருக்கு இயற்கையாகவே பன்மடங்கு சக்தி வந்துவிடும்.
ஆனால், அவர் ஒரு அப்பாவி. தன் சக்தி அவருக்கே தெரியாது. அதை வைத்து ஆஸ்ட்ரிக்ஸுடன் சேர்ந்து எதிரிகளைப் பந்தாடுவார்.

காலிஷ் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள். தங்களுக்கென்று தனிக்குணம் கொண்டவர்கள். யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. தாங்கள் உண்டு, பிழைப்பு உண்டு என்று இருப்பவர்கள். தங்களுள் வேறுபட்ட குணங்களைக் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்க்கையைக் கொண்டாடி வாழ்ந்து கொண்டிருப்பர்.

அவர்களை அடிமைப்படுத்த ரோமானியர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். ஜூலியஸ் சீஸரைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த காலிஷ் இன மக்களைச் சீண்டி, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய ரோமானியத் தளபதிகள் பலர் உண்டு.

இந்தியத் துணைக்கண்டத்தில், இன உணர்வோடு தனித்துவம் காட்டி மிளிரும் தமிழரின் பெருமை பாஜக ஒன்றிய அரசுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது. எப்படியேனும், அடிமைப்படுத்தி, தனித்துவத்தைச் சிதைத்து விடவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அல்லக்கை ஆட்கள்,அதிகாரத் தலைவர்கள் தமிழ்நாட்டை

சிந்தனைத்தனமான முறைகளில் சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழரோ ஒவ்வொரு முறையும் தக்க பதிலடி கொடுத்து மூக்குடைத்தே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காலிஷ் இனமக்களுக்கு மந்திரபானம் சக்தி தருகிறது என்றால், தமிழர்க்குத் தம் இன உணர்வு சக்தியும் எழுச்சியும் தருகின்றது.

சிந்தனைத் தனமான ❌
சின்னத்தனமான✅

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling