சாய் லட்சுமிகாந்த் பாரதி Profile picture
மருத்துவர்| Arakkan | Belongs to the Dravidian Stock🖤❤️ zero tolerance towards sanghis and NTK zombies. Football enthusiast.

Jan 16, 2023, 8 tweets

தூசி படிந்து, கால ஓட்டத்தில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருக்குறளை உலகிற்கு எடுத்துக்காட்டியது ஒரு வெள்ளையரான Lord Ellis.

அவரிடம் திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை கொடுத்தவர் Lord Harrington. தன்னிடம் திரு.கந்தசாமி (அயோத்திதாசரின் பாட்டனார்) கொடுத்த நூலை எல்லீஸிடம் வழங்கினார்

Lord Ellis தான் முதலில் திருவள்ளுவரின் உருவத்தை (கற்பனை) நாணயமாக வடித்தார்.

அவரே திருக்குறளுக்கான ஆங்கில உரை எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தார்.

தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்திலும் பாண்டித்துவம் பெற்ற எல்லீஸ் துரை தான் தமிழ் மொழி கலப்பின்றி தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்றது என்பதையும் நிறுவியுள்ளார். (Caldwell க்கு பிறகு)

இப்படி வெளியுலகுக்கு தெரியவந்த திருக்குறள் வெறும் ஆய்வாளர்கள் அறிஞர்கள் மத்தியில் மட்டுமே பேசு பொருளாக இருந்தது. அயோத்திதாச பண்டிதர் திருக்குறளுக்கு உரை எழுதியதோட அதிலுள்ள பௌத்த சித்தாந்தங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

இப்படி அறிஞர்களிடம் இருந்த திருக்குறளை பொது மக்களிடம் கொண்டு சென்றது திராவிட இயக்கம் தான். திருக்குறளில் உள்ள பெண் அடிமைத்தன கருத்துக்களை பெரியார் விமர்சித்தாலும் அதன் உட்கூறுகளை தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல அரும்பாடுபட்டார். திருக்குறள் மாநாடை முதலில் நடத்தியவரும் அவரே.

பெரியார் நடத்திய திருக்குறள் குறித்து அறிஞர் அண்ணாவும் திரு வி. கவும் விடுத்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

பெரியார், பேரறிஞர் அண்ணா வை தொடர்ந்து கலைஞர், நாவலர், பேராசிரியர் போன்ற திராவிட இயக்கத்தலைவர்கள் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதி மக்களிடம் கொண்டு சென்றனர்.

திருக்குறளை இதுநாள் வரை கொண்டாடாத கூட்டம் ஒன்று கடந்த பத்தாண்டுகளாக தங்கள் குலத்தொழிலான உறவாடி கெடுக்கு யுக்தியை பயன்படுத்தி செரிக்கப்பார்க்கிறது.

முதலில் தன் இன எம்பியான தருண் விஜய் மூலம் தொடங்கிய சூழ்ச்சியை நாகசாமி என்ற நச்சுபாம்பினை கொண்டு கபளீகரம் செய்ய பார்த்தது.

அந்த சூழ்ச்சிகளினால் திருக்குறளை வெல்ல முடியாததால் இப்போது திருவள்ளுருக்கு காவி வண்ணம் அடிக்கப்பார்க்கிறது.
இப்படி சிலர் வருவார்கள் என்று யூகித்து தான் தலைவர் கலைஞர் திருவள்ளுரை எம்மதமும் ஏற்கின்ற வண்ணம் உருவகப்படுத்தி திருவள்ளுவரை மதசாயம் பூசப்படாமல் காத்தார்.
#Thiruvalluvar

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling