தூசி படிந்து, கால ஓட்டத்தில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருக்குறளை உலகிற்கு எடுத்துக்காட்டியது ஒரு வெள்ளையரான Lord Ellis.
அவரிடம் திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை கொடுத்தவர் Lord Harrington. தன்னிடம் திரு.கந்தசாமி (அயோத்திதாசரின் பாட்டனார்) கொடுத்த நூலை எல்லீஸிடம் வழங்கினார்
Lord Ellis தான் முதலில் திருவள்ளுவரின் உருவத்தை (கற்பனை) நாணயமாக வடித்தார்.
அவரே திருக்குறளுக்கான ஆங்கில உரை எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தார்.
தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்திலும் பாண்டித்துவம் பெற்ற எல்லீஸ் துரை தான் தமிழ் மொழி கலப்பின்றி தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்றது என்பதையும் நிறுவியுள்ளார். (Caldwell க்கு பிறகு)
இப்படி வெளியுலகுக்கு தெரியவந்த திருக்குறள் வெறும் ஆய்வாளர்கள் அறிஞர்கள் மத்தியில் மட்டுமே பேசு பொருளாக இருந்தது. அயோத்திதாச பண்டிதர் திருக்குறளுக்கு உரை எழுதியதோட அதிலுள்ள பௌத்த சித்தாந்தங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.
இப்படி அறிஞர்களிடம் இருந்த திருக்குறளை பொது மக்களிடம் கொண்டு சென்றது திராவிட இயக்கம் தான். திருக்குறளில் உள்ள பெண் அடிமைத்தன கருத்துக்களை பெரியார் விமர்சித்தாலும் அதன் உட்கூறுகளை தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல அரும்பாடுபட்டார். திருக்குறள் மாநாடை முதலில் நடத்தியவரும் அவரே.
பெரியார் நடத்திய திருக்குறள் குறித்து அறிஞர் அண்ணாவும் திரு வி. கவும் விடுத்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
பெரியார், பேரறிஞர் அண்ணா வை தொடர்ந்து கலைஞர், நாவலர், பேராசிரியர் போன்ற திராவிட இயக்கத்தலைவர்கள் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதி மக்களிடம் கொண்டு சென்றனர்.
திருக்குறளை இதுநாள் வரை கொண்டாடாத கூட்டம் ஒன்று கடந்த பத்தாண்டுகளாக தங்கள் குலத்தொழிலான உறவாடி கெடுக்கு யுக்தியை பயன்படுத்தி செரிக்கப்பார்க்கிறது.
முதலில் தன் இன எம்பியான தருண் விஜய் மூலம் தொடங்கிய சூழ்ச்சியை நாகசாமி என்ற நச்சுபாம்பினை கொண்டு கபளீகரம் செய்ய பார்த்தது.
அந்த சூழ்ச்சிகளினால் திருக்குறளை வெல்ல முடியாததால் இப்போது திருவள்ளுருக்கு காவி வண்ணம் அடிக்கப்பார்க்கிறது.
இப்படி சிலர் வருவார்கள் என்று யூகித்து தான் தலைவர் கலைஞர் திருவள்ளுரை எம்மதமும் ஏற்கின்ற வண்ணம் உருவகப்படுத்தி திருவள்ளுவரை மதசாயம் பூசப்படாமல் காத்தார். #Thiruvalluvar
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது ஏன் என்று என் பலசரக்குக் கடை நண்பரிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் குஜராத் சேட்டுங்க தான் காரணம் என்றார் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மொத்த வியாபாரத்தை கையில் எடுத்துவிட்டார்கள்.
அதன் பிறகு பதுக்கல் செய்து விற்பதுதான் அவர்கள் தொழில் என்றாகிவிட்டது. அதனால் அவர்கள் சொல்வது தான் விலை என்றார்.
நம்மூர் கோல்ட் வின்னர் போன்ற சமையல் எண்ணெய்கள் சந்தையில் இருப்பதிலேயே குறைந்த விலையில் இருந்தது.
ஆனால் இவர்கள் கோல்டு வின்னரின் காளீஸ்வரி கம்பெனி மீது வருமான வரி சோதனை நடத்தி அதை அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். இப்போது அதே கோல்டு வின்னருக்கு அதிக விலை வைத்து அ. தா..னி வில்மர் என்கிற லேபிள் போட்டு விற்பனை செய்து வருகிறது.
ஜவுளி தொழில் வீழ்ச்சிக்கு காரணமாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதில் ஒரு அதிமுக்கிய காரணம் 11% SLF tax என்கிற ஸ்டெபிள் லென்த் ஃபைபர் பஞ்சுக்கான இறக்குமதி வரி. இந்த வரியை மத்திய அரசு விதித்து 1 வருட எட்டு மாதம் ஆயிற்று. 1/8
இந்த வரியினால் ஃபை கவுண்ட் ஜவுளி ஆர்டர்கள் நம் நாட்டுக்கு வருவது முற்லும் நின்று போயிற்று ஆகவே இந்த வரியை நீக்குங்கள் என்று மத்திய அரசிடம் கரடியாய் கத்தி பாத்தாயிற்று. ஆனால் மத்திய அரசு எங்கள் குரலை கண்டுகொள்ளவேயில்லை.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது கொங்கு மண்டலத்தின் திருப்பூர் கோவை ஈரோடு கரூர் நகரங்கள்தான். ஆனாலும் இங்குதான் பிJபி கொடி கட்டி பறக்கிறது. 3/8
திமுக ஆட்சிக்கு வந்த 1967ல் இருந்து பெண்கள் முன்னேற்றத்தில் திமுகவின் பங்கு.
Thread 👇
*அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் சுயமரியாதை திருமண சட்டம்.
1967 வரை பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடந்து வந்தாலும் அவை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
இதனால் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட பெண்கள் தங்களுக்கோ அத்திருமணத்தின் வழியாக பிறந்த தங்கள் குழந்தைகளுக்கோ கணவனிடம் இருந்து சட்டரீதியாக பெறக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.
பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது.
*காவல்துறை பணியில் பெண்கள்.
அண்ணாவின் எதிர்பாராத மரணத்திற்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற கலைஞர் அதுவரை ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வந்த காவல்துறையில் முதல் முறையாக பெண்களும் பணி புரியலாம் என்று 1973 சட்டமியற்றினார்.
அத்திட்டத்தின் தொடர்ச்சியே அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாகின
திமுக அரசு கொண்டு வந்த "ஸ்டாலின் பஸ்" என்று மக்களால் அழைக்கப்படும் இலவச பேருந்து பயணம் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வறிக்கை மாதில திட்டக்குழுவால் வெளியிடப்பட்டள்ளது. அதன் சாராமசங்களை பார்ப்போம்.
இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்று சென்னை மாநகரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கும் 3 வழித்தடங்களில் இந்த ஸ்டாலின் பஸ்ஸில் பயணிக்கும் பெண்களிடமும் (மஞ்சள் நிறம்),மூன்று வெவ்வேறு பொருளாதார நிலையில் உள்ள நாகை, மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு (நீல நிறம்) மேற்கொள்ளப்பட்டுளது.
வயது வாரியாக பார்த்தால் இச்சேவையை 40 வயதிற்குட்பட்ட பெண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது reproductive age group எனப்படும் இளம்பெண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதன் மூலம் நமக்கு தெரியவருவது இளம்பெண்கள் தங்கள் பொருளாதார தன்னிறைவு பெற இத்திட்டம் உதவுகிறது.
RSSஇன் முன்னெடுப்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நிடைவிடம் அமைக்கப்பட்டது.
இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் காவிக் கொடி பறக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்நினைவு சின்னத்தில் தற்போது வரை தேசியக்கொடி பறக்கவிடபடுவதில்லை. காவி கொடியே அங்கு பிரதானம்.
இன்று வரை RSSஇன் கட்டுப்பாட்டில் தான் அந்நினைவுச் சின்னம் இருக்கிறது.
இந்த சூழச்சியை முறியடிக்க 1975ம் ஆண்டு கலைஞர் அவர்களால் அப்பாறைக்கு அருகில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்க முற்பட்டார்.
அவசர நிலை காரணமாக திமுக அரசு கலைக்கப்பட்ட பின் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
1979ஆம் ஆண்டு இத்திட்டத்தை கிடப்பில் போட்டதற்காக எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பிறகும் சிலை எழுப்ப அதிமுக அரசு முற்படவில்லை. காரணம் எல்லோரும் அறிந்ததே.