#அறிவோம்கடை :
Shree Anandhaas,Near Lakshmi mill Junction, Coimbatore
ஆனந்தாஸ் பற்றி நிறைய முறை எழுதிட்டேன், இவங்க ஸ்வீட் கடை பற்றியும் எழுதி இருக்கேன். ஆனா இந்த branch பற்றி இன்னும் எழுதல. சமீபத்தில் டின்னர் சாப்பிட போயிருந்தேன். மெனு எல்லாம் பார்க்கவே அவ்ளோ tempting😍
பட்டாணி பரோட்டா : 4.75/5
இப்படி ஒரு Soft and Tasty பரோட்டா நான் veg ல இப்ப வரை சாப்பிட்டது இல்லை.. பட்டாணி சும்மா பேருக்கு போடாம, ஒவ்வொரு வாய்க்கும் வர மாதிரி நிறையவே இருந்திச்சு👌 இது தினமும் கிடைக்குமா னு தெரியல..அன்றைய special மெனு இது இருந்திச்சு னு try செஞ்சேன். செம worth💖
மாங்காய் மசாலா ரோஸ்ட் : 4.25/5
இதுவும் அன்றைய special தான். பேரே கேட்க புதுசா இருக்கு..சரி எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம் னு ஒரு ஆர்வதுல வாங்கினோம். பச்சை மாங்காயை சாப்பிட்டா என்ன ஒரு புளிப்பு இருக்குமோ அந்த சுவை ல காரமான மசாலா.. ஒரு புது வகையான சுவையா இருந்திச்சு😊
முருங்கை கீரை மோர் குழம்பு இட்லி: 4.5/5
இதுவும் முதல் முறையா சாப்பிடறேன். அவ்ளோ நல்லா இருந்திச்சு👌 முருங்கை கீரை உடம்புக்கு அவ்ளோ நல்லது.. குழந்தைகள் உடன் சென்றால் நிச்சயம் இதை வாங்கி கொடுங்க😊
ஆப்பிள் கேசரி : 4.5/5
நெய் சொட்ட சொட்ட அப்படி ஒரு சுவை😍 ஆப்பிள் சிறு சிறு துண்டுகளாக உள்ள இருந்திச்சு👌👌 அளவான இனிப்பு தான்.. அது தான் அந்த ஆப்பிளின் சுவையை கூட்டி இருந்திச்சு. விலையும் முப்பது ரூபாய் தான்🤗 கண்டிப்பா try செஞ்சு பாருங்க
பண்ணீர் டிக்கா : 4/5
BBQ ல கொடுப்பாங்க ல அந்த மாதிரி ஓவர் coating செய்யாமல்..அளவான மசாலா, அளவான காரம். இதுக்கு கூட கொடுத்த mint சட்னி யும் நல்லா இருந்திச்சு.
பில்டர் காபி : 4.75/5
ஒரு கடையில் பில்டர் காபி இருக்குனா அதை try செய்யாம வந்ததே இல்லை.. அந்த அளவுக்கு காபி பிரியன்💖
இவங்க பில்டர் காபி எப்பவுமே நல்லா இருக்கும். அன்னபூரானா காபி மாதிரி Bitterness dominating ஆக இருக்காது..ஆனா அளவான கசப்புத்தன்மை இருக்கும்🤩
இது தான் நாங்க சாப்பிட்ட bill🤗ஒரு தரமான veg dinner சாப்பிட இங்க போகலாம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🤩🌅 🤩
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.