அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 27, 2023, 10 tweets

#விசிஷ்டாத்வைதம் #ஸ்ரீவைஷ்ணவம் #த்வயம் என்பது
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ
திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின்

சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேண்டும் என்பதே ஆகும். எம்பெருமானின் இரு அவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாஸ்ரமத்தில் உபதேசித்தது. பகவானின் உடைமையான ஜீவாத்மா அவரின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன்

எளிய பொருள்.
#திருவாய்மொழி த்வயத்தின் பொருளை விளக்க ஆழ்வார்களின் தலைவரான #நம்மாழ்வார் நமக்கு அருளியது. ஆறாம் பத்தில் இறுதியில் நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார். ரகஸ்ய த்ரயத்திலே வீரு கொண்டு விளக்கும் மகா மந்திரம் முன் வாக்கியத்தாலே சரணாகதி அனுஷ்டிப்பதையும

பின் வாக்கியத்தாலே கைங்கர்யத்தை பிரார்த்திப்பதை விளக்க வந்தது. நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி த்வயார்த்த பிரதி பாதகம். #பிள்ளைலோகாச்சார்யார் #சாரசங்ரகம் என்ற நூலில் இதன் விளக்க உரையை அருளியுள்ளார். நம்மாழ்வார் மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழியில் கைங்கர்யத்தைப் பற்றி விளக்கி,

பின் ஆறாம்பத்தில் இறுதியில் சரணாகதி பற்றி சொல்கிறார். த்வய மந்திரத்தை மாற்றி விளக்குகிறாரே என்று நினைக்க வேண்டாம். முதலில் நாம் பெறப் போகும் பேறு என்ன எத்தகையது என்று விளக்கி, பின் அதை அடையும் வழிமுறையை விளக்கினால் நாம் வழிமுறையின் கடினமான பாதையைப் பற்றி கவலைப் பட மாட்டோம், ஏன்

என்றால் எத்தகைய பேற்றினை அடையப் போகிறோம் என்பது தெரிந்து விடுகிறது. அதனால் நம்மாழ்வார் இந்த உக்தியை கையாள்கிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம், தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே. (3.3.1)
மிக்க ஒலி

உடன் கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற அழகினைக் கொண்ட ஒளி உருவனான, தங்கள் குலத் தலைவனான, எம்பெருமானுக்கு எல்லையில்லாத காலமெல்லாம், எல்லா இடத்திலும், அவன் கூடவே உடன் இருந்து, ஒன்றும் குறையாதபடி எல்லா தொண்டுகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது பாடலின் பொருள்.

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி. நெடியாய் அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குல தொல் லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. (6.10.1)
பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் அமுது செய்த பெரிய வாயை உடையவனே, தேஜோ

மயமான திவ்ய விக்ரகத்தை உடையவனே, மிகப்பெரியவனே, அடியேனுக்கு உயிராய் இருப்பவனே, உலகுக்கெல்லாம் திலகம் போன்ற திருமலையிலே விளங்குகின்ற எம்பெருமானே, பரம்பரை பரம்பரையாக எம்பெருமானுக்கு அடிமையான அடியேன், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேரும்படி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.

பகவானிடம் சரணாகதி செய்வோம். பிறவியற்று, வைகுண்டத்தில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வோம்.
ஆழ்வார் ஆச்சார்யன் திருவடிகளே சரணம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling