கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தை காத்த இருபெரும் தலைவர்களில் ஒருவருக்கு இன்று ஜெயந்தி தினம். நம் தாயோ/சகோதரியோ/தோழியோ/காதலியோ/மனைவியோ கோபப்படும் போது ‘இதுக்கு மேல பேசுன.. நான் #ஜெயலலிதா வாக மாறுவேன்… ஜாக்கிரதை..’ எனச் சொல்லும் போது சட்டென அரை நோடியில் பயமும்+பீதியும் கலந்து ஓர் ~1
உணர்வு வரும், அது தான் அந்த #அம்மா வோட ஆளுமை. ‘எவனா இருந்தா என்ன?’ங்குற ஒரு self confidence; ‘நீ எனக்கு கெடுதல் செஞ்சா அதை வட்டியும் முதலுமா கொடுப்பே’ங்கற ஒரு valour; சுண்டு விரல்ல எந்த விஷயத்தை பத்தியும் தெரிந்து வைத்துக் கொண்ட intellect; இதெல்லாத்தையும் விட தன்னை ~2
தமிழகத்தின் தாயாக நிறுத்திக் கொண்ட self positioning எல்லாம் சேர்ந்து தான் அவரைச்சுற்றி இருக்கும் இந்த Charismatic Aura. தனி மனிதனுக்கே உரித்தான சில நேகடீவ்ஸ் இருந்தாலும், அதையெல்லாம் தன்னோட ப்ளஸால் மழுங்கடித்தார். பரமவைரியான கருணாநிதி கூட தன்னால் இப்படி கட்டுக் கோப்பாக கட்சியை ~3
நடத்த முடியவில்லையே எனக் குமுறும் வகையில் ஆண்கள் கோலேச்சும், துரோகங்கள் நிறைந்த அரசியலில் பெண் சிங்கமாக; சிம்ம சொப்பனமாக வலம் வந்து தன் தலைவர் #எம்ஜிஆர் #MGR போலவே ஓர் Mythical Leader ஆக மக்களால், எதிர்தரப்பினர் உட்பட ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவர் ~4
மறைந்த போது எதிரிகள் கூட வடித்த கண்ணீரே அதற்கு சாட்சி. தமிழகத்தில் எங்கோ.. யாரோ ஒருவர்.. ‘ #அம்மா ’ என அழைக்கும் போதும், அதில் என்றும் இந்த #இருப்புபெண்மணி யின் எண்ணம் இருக்கும். #அம்மா75 #JJayalalithaa #JJ #Jayalalithaa #Ironlady
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.