#NewProfilePic
சமூக ஊடகங்களில் செயல்படும் மகளிர் அனைவருக்கும் #மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் #மகளிர்தினம் வந்தாலே அம்மையார் நினைவு கூறல் ஒரு சடங்கு ஆகிவிட்டது @tamilselvam2k3 பதிவு கண்டபின் ஒன்று புரிந்தது..
அது..
கலைஞரின் பங்களிப்பை முழு வீச்சில் பரப்ப வேண்டும்
மகளிர் வாழ்க்கை வளம்பெற கலைஞர் செய்த 25 திட்டங்கள் இங்கே பட்டியலாக உள்ளது.
இதுபோல ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா பெண்களே?
திமுக ஆட்சியால்தான் பெண்கள் முன்னேற்றம் கண்டனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்.
1) 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தை 1989இல் தொடங்கியது கழக ஆட்சி.
2) பெண்கள் 10ஆம் வகுப்பேனும் படிப்பதை ஊக்கப்படுத்திட வேண்டும் எனும் உணர்வோடு 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப்
பெண்களின் திருமணங்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியது கழக ஆட்சி.
ஆனால், 2001இல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த இத்திட்டத்தின் நிதி உதவியை 2006இல் பொறுப்பேற்ற கழக அரசு 15,000 ரூபாய் என்றும், 2008இல் 20,000 ரூபாய் என்றும், 2010இல் 25,000
என்றும் படிப்படியாக உயர்த்தி கிராமப்புறங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற வழிவகுத்தது கழக ஆட்சி.
3) டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டத்தை 1975இல் தொடங்கி, இளம் விதவை மகளிரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது கழக ஆட்சி.
4)அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்.
5)அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்.
6) ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம்.
திருமண உதவித் திட்டங்களின் நிதி உதவியையும் படிப்படியாக
25,000 ரூபாய் வரை உயர்த்தி, இலட்சக்கணக்கான ஏழை மகளிர் நலம்பெற வழிவகுத்தது கழக ஆட்சி.
7) ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை 2009ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி.
8) கிராமப்புற மகளிர்க்கு மகப்பேறு உதவிகள் எந்த
நேரமும் கிடைத்திடும் வண்ணம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு 24 மணிநேர மருத்துவச் சேவையை உருவாக்கியது கழக ஆட்சி.
9) கிராமப்புற ஏழை மகளிர் கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக 1969ஆம் ஆண்டில், பெரும்பாலும் கிராமப்புறப்
பகுதிகளிலேயே அரசு சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் பலவற்றைத் தொடங்கியது கழக ஆட்சி.
10) ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக 1989இல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின் பயன்களை
2008 முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான ஏழை மகளிர் உயர்கல்வி பெற ஆவன செய்தது கழக ஆட்சி.
11) 1974ல் இந்தியாவிலேயே முதன்முறையாகக் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்து காவல்துறையில் உயர் பதவிகள் பெற்றுப் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிவதற்கு வித்திட்டது
12) ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியது கழக ஆட்சி! விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட
1998இல் ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி.
13) தருமபுரியில் 1989ஆம் ஆண்டில் மகளிர் திட்டத்தைத் தொடங்கி அதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் தோன்றிடவும், அவற்றின் வாயிலாகக் கிராமப்புற மகளிரின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்திடவும் வழிவகுத்தது கழக ஆட்சி.
14) 1998இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட்படப் பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களை மேம்படுத்தியது கழக ஆட்சி.
15) அரசுத் துறைகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீட்டினை 1990ஆம்
ஆண்டில் வழங்கிட சட்டம் கண்டு; இன்று தமிழக அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பெருவாரியாகப் பணிபுரியும் வாய்ப்புகளை உருவாக்கியது கழக ஆட்சி.
16) பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களை ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என 1997இல் ஆணையிட்டது கழக ஆட்சி.
17) சமூக நிலைகளில் பெண்களுக்கு உரிய சிறப்புகள் கிட்டிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக 1990இல் பெண்களுக்குப் பரம்பரைத் சொத்தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கண்டது கழக ஆட்சி.
18) அரசின் தொழில்மனைகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 10 விழுக்காடு மனைகளை
ஒதுக்கிட வகை செய்து, பெண்கள் தொழில் முனைவோராகிட ஊக்கம் தந்தது கழக ஆட்சி.
19) திருக்கோவில்களின் அறங்காவலர் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சட்டம் கண்டது கழக ஆட்சி.
20) 1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.