DECODING BJP Profile picture

Mar 8, 2023, 7 tweets

#வரலாற்றில்_இன்று

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் கெப்ளர்,
கோள்களின் சுற்று வட்டப்பாதையைப் பற்றிய தனது மூன்றாவது விதியை மார்ச் 8, 1618ம் ஆண்டு வெளியிட்டார்.

அதன் படி, கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியானது(square), சூரியனிலிருந்து அக்கோள்களின் நீள்வட்டப்பாதையில்

பெரிய விட்டத்தின் தொலைவின் மும்மடிக்கு(cube) நேர்விகிதத்தில் இருக்கும்.
என்பதாகும்.

இதன் மூலமாக பூமியின் உள் மையப்பகுதி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது. சூரியனின் ஈர்ப்பு விசையே கோள்கள் அனைத்தும் அதன் சுற்று வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணமாக அமைகிறது என கணித்தார்.

கெப்ளருக்கு வழிகாட்டியாக இருந்தவர் நிக்கோலஸ் கோபர் நிக்கஸ்.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்று நம்பிக்கொண்டிருந்த 16 ஆம் நூற்றாண்டில், அட மடப்பயலுகளா பூமி தான்டா சூரியனை சுற்றுகிறது. என்று ஓங்கி அடித்துச் சொன்னவர் அதற்காக போலந்து சர்ச்சுகளின் கண்டனத்தை எதிர்கொண்டார்

அவர் உயிரோடு இருந்த காலம் வரை இந்த கண்டுபிடிப்பு குறித்த புத்தகத்தை வெளியிட முடியவில்லை.
இதனால் சுதாரித்த கெப்ளர், தனது விஞ்ஞான கருத்துக்களை சோதிடத்துடன் இணைத்து கூறினார்
கலிலியோ காலம் வரை அரிஸ்டாட்டில் கொள்கைகளை கற்பித்துக் கொண்டிருந்த ஐரோப்பா யோசிக்க ஆரம்பித்தது

கெப்ளரின் இன்னொரு அட்வான்ஸ்டு வெர்ஷன் தான் சர் ஐசக் நியூட்டன்..

நியூட்டனது ஈர்ப்பியல் தத்துவத்துக்கு இன்ஸ்பிரேஷன் கெப்ளரின் கோள்களைப் பற்றிய மூன்று விதிகள் தான்

தன் முன்னோர்கள் போல் இல்லாமல் நியூட்டன் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற்றிருந்தார்

கோப்பர் நிக்கஸ் கோட்பாட்டை ஆதரித்த பாவத்திற்காக ஒரு விஞ்ஞானியை வாடிகன் சர்ச் விசாரணைக்கு அழைத்தது இது Roman inquisition என அழைக்கப்படுகிறது.
பல முறை கலிலியோ போப் பால் V அழைக்கப்பட்டு, கோப்பர் நிக்கசின் சூரிய மையக் கோட்பாடை மறுத்து அரிஸ்டாட்டிலின் புவி மையக் கோட்பாட்டை ஏற்கும் படி

வற்புறுத்த பட்டார்.
ஒவ்வொரு முறையும் கலிலியோ தனது முடிவில் முன்பு இருந்ததை விட அதிகப்பிடிவாதமாக இருந்தார்.
இதற்கு மூல காரணமான கோப்பர் நிக்கஸ் புத்தகத்தை
தடை செய்தது சர்ச்..
அந்தத் தடை நீடித்திருந்தால் இன்றைக்கு இருக்கிற விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமில்லாது போயிருக்கும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling