Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Mar 13, 2023, 10 tweets

#தமிழ்நாட்டு_கலவரங்கள்_வெகுஜன_ஊடகம்

#மொழிப்போர்_1965
மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது .
மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப் பட்டனர் .
அப்பொழுது முதல்வர் #பக்தவச்சலம் .

சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி #கக்கன் இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு.
இது சாதி போராட்டம் இல்லை.

#விவசாயிகள்போராட்டம்_1978
மின் கட்டண உயர்வை எதிர்த்து 77 ல் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
#எம்ஜிஆர் முதல்வர்

#வன்னியர்போராட்டம்_1987
இந்தித் திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்னியர் சங்கம் 1987 ம் ஆண்டு முன்னெடுத்த தனி இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம்..அப்பொழுது முதல்வர் #MGR
18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் .
70 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

#மாஞ்சோலைபோராட்டம்_1999
ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தில் விஷமிகள் கல் வீசி (#அந்தமுதல்கல் என்று ஆவணப்படம் உள்ளது) தாக்க , போலிஸ் தடியடி நடத்த பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 17 தொழிலாளிகள் நீரில் மூழ்கி இறந்தனர்

எதிர்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், போலீஸ் கற்களை கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல்
நடத்தியதாக குற்றம் சாட்டினார். தோட்ட வேலைக்கு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் போகவில்லை.
பல சாதி, மதத்தினர் கலந்து கொண்டனர். இறந்தவர்களில் எல்லா சாதியினர் உண்டு. சாதி பிரச்சனை இல்லை

#பரமகுடிதுப்பாக்கிச்சூடு_2011
செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொலப்பட்டனர்.
மறைந்த தலைவர் இம்மானுவேல் சேகரனார்க்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி நடந்த போராட்டத்தில் போலிஸ் ஆடிய தாக்குதல். சாதி பிரச்சனையா இல்லயான்னு பொது சமூக பார்வைக்கு விடுகிறேன்

#கூடன்குளம்_துப்பாக்கிசூடு எஸ்.பி. உதயகுமார், எம். புஷ்பராயன் மற்றும் எம்.பி.ஜேசுராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது 2012,செப்டம்பர் 10 ஆம் தேதி தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் காயமடைந்தனர்
துப்பாக்கி

வாச்சாத்தி உள்ளிட்ட பல தலித் ஒடுக்கு போராட்டங்களின் போது இரும்பு மனுஷி தான் முதல்வர்
#ஜல்லிகட்டு_போராட்டம்2017
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜனவரி 23 ஆம் தேதி காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடந்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
முதல்வர்

அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம்.

#ஸ்டெர்லைட்போராட்டம்_2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 பேர் உயிரிழந்தனர்.. முதல்வர் யார்னு நான் சொல்லி அறிய அவசியமில்லை.
தமிழகத்தில்

நடந்த மக்கள் போராட்டத்தில் மிக முக்கியமானவை இவை..இதில் ஒரு நிகழ்வின் போது மட்டுமே கலைஞர் முதல்வர் .
கலைஞரை குற்றம் சாட்டி 10 படம் எடுப்பவர்கள் அதிக குற்றம் செய்தவர்களை பற்றி ஒரு படம்கூட எடுப்பதில்லையே ஏன் ?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling