ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Mar 19, 2023, 8 tweets

#சர்க்காரியா_கமிஷன் 1

1972ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு தனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் அடுக்கடுக்காய் அபாண்டங்களை அடுக்கினார் அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர்.. சரியாக 4-11-1972ல் தலைவர் கலைஞர் மீது ஒரு அபாண்ட குற்றச்சாட்டை அன்றைய பிரதமர் இந்திராவுக்கு

அனுப்பினார் எம்.ஜி.ஆர்.. அவரைத் தொடர்ந்து 6-11-1972ல் இந்திய கம்யூன்ஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம். கல்யாணசுந்திரம், அக்கட்சியின் MLA திரு KTK தங்கமணி அவர்களோடு 5 கம்யூனிஸ்ட் தலைவர்களும் தலைவர் கலைஞர் மீது அபாண்டங்களை வரிசைப்படுத்தி குடியரசு அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்...

MGRஉடன் இணைந்து கொண்ட மந்திரகோல் மைனர் என்று தலைவர் கலைஞரால் அழைக்கப்பட்ட திரு.நாஞ்சில் கி.மனோகரன் மற்றும் ஜி.விஸ்வநாதனும் தங்களை தற்காத்து கொள்ள கலைஞர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள்.அவர்களின் பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:-

1. தமிழ்நாடு அரசின் மொத்த அமைச்சரவை மீது,

2. ஆளும் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மீது,

3. துறைசார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அவர்கள் வசம் உள்ளோர் மீது,

4.ஊழல் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனித்துறை செயலாளர்கள் மீது

இவை தான் பிரதான குற்றச்சாட்டுகள்.. இதற்கு பதிலளிக்குமாறு 15-11-1972ல் பிரதமர் அலுவலகம்

தலைவர் கலைஞருக்கு கடிதம் எழுதியது. ஏற்கனவே தலைவர் கலைஞர் 144-11-1972ல் பதில் கடிதத்தை இந்திராவின் அலுவலகத்திற்கு அனுப்பியது தான் சுவாரஸ்யம்.. மேலும் அதிமுகவின் MGR 10-1-1973லும், கம்யூனிஸ்ட்டின் கல்யாணசுந்திரம் 5-2-1973ல் மறுபிரதிகளை மாறி மாறி வெளியிட்டனர்.. சும்மா விடுவார கலைஞர்

அதற்கு சலிக்காமல் 28-5-1973 மறுபிரதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சாசனம் எழுதி அனுப்பி வைத்தார் தலைவர் கலைஞர்.
இருவரும் அளித்த குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் இல்லாததால் அது கிடப்பிலேயே போடப்பட்டது. சரியாக நான்காண்டுகள் கழித்து இந்திராகாந்தி அவசரநிலை பிரகடணத்தை வெளியிட அதை தன்

பதவியே போனாலும் கவலை இல்லை என எதிர்த்தார் தலைவர் கலைஞர். அந்த காலகட்டத்தில் பல திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறை கொடுமைகளை அனுபவித்தனர். இச்சமயத்தில் தான் அதிமுகவை அ.இ.அதிமுக என பெயர்மாற்றம் செய்து இந்திராவின் கோரபிடியிலிருந்து தப்பித்து கொண்டார் MGR. எப்படியாவது தலைவர் கலைஞர்

குற்றம் சுமத்தியே ஆக வேண்டும் என்று காலில் சலங்கை கட்டிக் கொண்டு தலைவர் மீது 3-2-1976ல் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ரஞ்சித் சிங் சர்காரிய தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தார் இந்திராகாந்தி. அதை தலைவர் கலைஞர் எப்படி தன் சுட்டு விரலில் கையாண்டார் என்பதை அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்...!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling