#அறிவோம்கடை : The Mango County Resort, Palakkad.
Google map : g.co/kgs/pHQWk2
இது தான் நாங்க போன resort. கோயம்புத்தூர்ல இருந்து 60km தான் வரும்.நான் இதுவரை கோவை சுற்றி போன resortலையே பெஸ்ட்னு சொல்லுவேன்.இங்க என்ன எல்லாம் இருக்கு, தங்க எவ்ளோ ஆகும் எல்லாம் பார்க்கலாம்
நாங்க 12 Adults+ 4 kids போயிருந்தோம். மொத்தம் 4 deluxe ரூம் எடுத்திருந்தோம். இது தான் நாங்க தங்கிய ரூம். ரொம்ப பெரிசு எல்லாம் இல்லை..ஆனா AC, Hot water, TV னு சகலமும் இருந்தது.
Swimming Pool: மற்ற resort compare செய்யும்போது நிச்சயம் அளவில் சிறியது தான்.ஆனா இங்க ரொம்ப பிடித்த ஒரு விசயம் என்னன்னா.குழந்தைகளுக்கு safety life jacket கொடுத்தாங்க. பயம் இல்லாம குட்டிஸ் swim செஞ்சு enjoy செய்யலாம். படத்தில் இருப்பது என் பையன் தான்.முதல் முறை அவனா நீந்தினான்😍
இங்க enjoy செய்த மற்ற விசயங்கள் :
Cycling : சிறு வயது முதல், பெரியவங்க வரை ஓட்டும் சைக்கிள் இருக்கு.
Play area : Indoor and Outdoor games iruku. நாங்க கிரிக்கெட், basket ball, Chess, snooker, Carrom னு எல்லாம் விளையாடினோம்.
குழந்தைகள் playarea ல ஊஞ்சல் ,slide எல்லாமே சூப்பர்👌
என்னுடைய பிறந்தநாள் கொண்டாட தான் resort க்கே போனோம். எங்களுக்கு இந்த Riverside hut arrange செஞ்சு கொடுத்தாங்க.. இங்க தான் cake வெட்டி celebrate செஞ்சோம். மறக்க முடியாத ஒரு அனுபவம்💖
இது தான் Restaurant. ஒரு கப்பல் வடிவில் இதை அமைத்திருந்தாங்க..உள்ள Ambiemce ம் ரொம்ப நல்லா இருந்திச்சு👌
இது நாங்க போன அன்னிக்கு Evening snacks
ஆனியன் பக்கோடா
சிக்கன் சமோசா
Pazham Pori
Tea
Coffee
இதெல்லாம் try செஞ்சோம். எனக்கு personal ஆக ஆனியன் பக்கோடா பிடித்தது..
Tea, coffee ரெண்டும் average தான்.
இது தான் நாங்க முயற்சி செஞ்ச Dinner. Buffet வேண்டாம் னு சொல்லிட்டோம்.
சப்பாத்தி
Egg Fried Rice
சிக்கன் fried rice
Gravy :
பெப்பர் சிக்கன், கேரளா சிக்கன், முட்டை மசாலா
White rice + ரசம்
எல்லாமே ரொம்ப நல்லா இருந்திச்சு👌👌👌
Night ரெண்டு மணி வரைக்கும் dance, பாட்டு னு ஆட்டம் போட்டோம். இது காலை simple Breakfast menu
Bread - Butter - Jam
Idly
Masala Dosai
Poori - Masala
Omlette
Pineapple juice
எல்லாமே நல்லா இருந்திச்சு👌
ரொம்ப அருமையான atmosphere👌 இங்க இன்னொரு முக்கிய activity - peddaling boat.. இங்கேயும் life jacket கொடுத்திடுவாங்க. Self peddaling தான்.
இது தான் எங்க மொத்த செலவு : Rs.26,765/-
நாங்க மொத்தம் 4 Deluxe ரூம் எடுத்திருந்தோம்.
Rs.5500 per room (We got discount : No extra charge for extra bed or person)
Food கொஞ்சம் costly தான்..நானா இந்த resort கொடுத்த அனுபவத்துக்கு நிச்சயம் worth 👌
இவங்க resort ல செம சூப்பர் ஆன நாய்கள் வெச்சிருக்காங்க. மாதம் ஒரு லட்சம் இதன் உணவிற்கு மட்டும் செலவு செய்வதாக இதன் பரமரிப்பாளர் சொன்னார். Husky, German Shepard, German Bernal னு மொத்தம் 10 நாய்கள் வெச்சிருக்காங்க😱 பார்க்க ஒவ்வொன்னும் செமையா இருந்திச்சு..
Resort 2 மணிக்கு தான் checkin னு போகும் போதே mazhapula க்கு போய் வின்ச் ல போனோம். அதுக்கு உண்டான bill இது.
எல்லாம் முடிச்சுட்டு மீண்டும் mazhapula போய் Acquarium போனோம். பெரியவர்களுக்கு : Rs.30/- | சிரியவர்களுக்கு : Rs.20/-
இதை எல்லாவற்றையும் விட நாங்க போகும் போதும், வரும் போதும் முயற்சி செய்த இரண்டு lunch தான் மறக்க முடியாத அனுபவம்.. இரண்டும் வெவ்வேறு கடை. Seafood வகைகளை வெளுத்து கட்டினோம்.. இந்த ரெண்டு கடை review தனி தனி ஆக எழுதறேன். ஏன் என்றால் இங்க மட்டும் நாங்கள் செலவு செய்தது Rs.12,000😢
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.