இது தான் நாங்க போன resort. கோயம்புத்தூர்ல இருந்து 60km தான் வரும்.நான் இதுவரை கோவை சுற்றி போன resortலையே பெஸ்ட்னு சொல்லுவேன்.இங்க என்ன எல்லாம் இருக்கு, தங்க எவ்ளோ ஆகும் எல்லாம் பார்க்கலாம்
நாங்க 12 Adults+ 4 kids போயிருந்தோம். மொத்தம் 4 deluxe ரூம் எடுத்திருந்தோம். இது தான் நாங்க தங்கிய ரூம். ரொம்ப பெரிசு எல்லாம் இல்லை..ஆனா AC, Hot water, TV னு சகலமும் இருந்தது.
Swimming Pool: மற்ற resort compare செய்யும்போது நிச்சயம் அளவில் சிறியது தான்.ஆனா இங்க ரொம்ப பிடித்த ஒரு விசயம் என்னன்னா.குழந்தைகளுக்கு safety life jacket கொடுத்தாங்க. பயம் இல்லாம குட்டிஸ் swim செஞ்சு enjoy செய்யலாம். படத்தில் இருப்பது என் பையன் தான்.முதல் முறை அவனா நீந்தினான்😍
இங்க enjoy செய்த மற்ற விசயங்கள் :
Cycling : சிறு வயது முதல், பெரியவங்க வரை ஓட்டும் சைக்கிள் இருக்கு.
Play area : Indoor and Outdoor games iruku. நாங்க கிரிக்கெட், basket ball, Chess, snooker, Carrom னு எல்லாம் விளையாடினோம்.
குழந்தைகள் playarea ல ஊஞ்சல் ,slide எல்லாமே சூப்பர்👌
என்னுடைய பிறந்தநாள் கொண்டாட தான் resort க்கே போனோம். எங்களுக்கு இந்த Riverside hut arrange செஞ்சு கொடுத்தாங்க.. இங்க தான் cake வெட்டி celebrate செஞ்சோம். மறக்க முடியாத ஒரு அனுபவம்💖
இது தான் Restaurant. ஒரு கப்பல் வடிவில் இதை அமைத்திருந்தாங்க..உள்ள Ambiemce ம் ரொம்ப நல்லா இருந்திச்சு👌
இது நாங்க போன அன்னிக்கு Evening snacks
ஆனியன் பக்கோடா
சிக்கன் சமோசா
Pazham Pori
Tea
Coffee
இதெல்லாம் try செஞ்சோம். எனக்கு personal ஆக ஆனியன் பக்கோடா பிடித்தது..
Tea, coffee ரெண்டும் average தான்.
இது தான் நாங்க முயற்சி செஞ்ச Dinner. Buffet வேண்டாம் னு சொல்லிட்டோம்.
சப்பாத்தி
Egg Fried Rice
சிக்கன் fried rice
Gravy :
பெப்பர் சிக்கன், கேரளா சிக்கன், முட்டை மசாலா
White rice + ரசம்
எல்லாமே ரொம்ப நல்லா இருந்திச்சு👌👌👌
Night ரெண்டு மணி வரைக்கும் dance, பாட்டு னு ஆட்டம் போட்டோம். இது காலை simple Breakfast menu
Bread - Butter - Jam
Idly
Masala Dosai
Poori - Masala
Omlette
Pineapple juice
எல்லாமே நல்லா இருந்திச்சு👌
ரொம்ப அருமையான atmosphere👌 இங்க இன்னொரு முக்கிய activity - peddaling boat.. இங்கேயும் life jacket கொடுத்திடுவாங்க. Self peddaling தான்.
இது தான் எங்க மொத்த செலவு : Rs.26,765/-
நாங்க மொத்தம் 4 Deluxe ரூம் எடுத்திருந்தோம்.
Rs.5500 per room (We got discount : No extra charge for extra bed or person)
Food கொஞ்சம் costly தான்..நானா இந்த resort கொடுத்த அனுபவத்துக்கு நிச்சயம் worth 👌
இவங்க resort ல செம சூப்பர் ஆன நாய்கள் வெச்சிருக்காங்க. மாதம் ஒரு லட்சம் இதன் உணவிற்கு மட்டும் செலவு செய்வதாக இதன் பரமரிப்பாளர் சொன்னார். Husky, German Shepard, German Bernal னு மொத்தம் 10 நாய்கள் வெச்சிருக்காங்க😱 பார்க்க ஒவ்வொன்னும் செமையா இருந்திச்சு..
Resort 2 மணிக்கு தான் checkin னு போகும் போதே mazhapula க்கு போய் வின்ச் ல போனோம். அதுக்கு உண்டான bill இது.
எல்லாம் முடிச்சுட்டு மீண்டும் mazhapula போய் Acquarium போனோம். பெரியவர்களுக்கு : Rs.30/- | சிரியவர்களுக்கு : Rs.20/-
இதை எல்லாவற்றையும் விட நாங்க போகும் போதும், வரும் போதும் முயற்சி செய்த இரண்டு lunch தான் மறக்க முடியாத அனுபவம்.. இரண்டும் வெவ்வேறு கடை. Seafood வகைகளை வெளுத்து கட்டினோம்.. இந்த ரெண்டு கடை review தனி தனி ஆக எழுதறேன். ஏன் என்றால் இங்க மட்டும் நாங்கள் செலவு செய்தது Rs.12,000😢
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
AI TOOLS CAN NOW TEACH YOU ANY SKILL IN 40 DAYS FOR FREE.
எல்லாருக்குமே எதாவது கற்றுக்க ஆசை இருக்கும், ஆனா அதை எப்படி செய்வது னு தெரியாம நல்ல Guidance இல்லாமல் Stuck ஆகி தொடங்காமலையே இருப்போம். இந்த thread ல நம்ம skills வளர்திக்க பயன்படும் 7 Prompts கொடுத்து இருக்கேன் , நீங்க எந்த துறையில் உங்க skill வளர்திக்க விரும்பறீங்களோ அதை கொடுத்து கற்று கொள்ளுங்கள்.
ChatGPT, Gemini, Claude னு நல்ல நல்ல AI Platform இருக்கு. அதை வெறும் image generation க்காக மட்டும் இல்லாமல் இந்த மாதிரி உங்க Skills வளர்திக்க பயன்படுத்தலாம்.
Digital Marketing, Designing, Coding னு எது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனா தொடர்ந்து இதை follow செய்யனும். அப்ப தான் இது உங்களுக்கு உதவும்.
இந்த பதிவை arivom_tech னு Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . இன்னிக்கு இல்லைனாலும் ஒருநாள் கண்டிப்பா உதவும்.
1. Professional Skill Instructor
“Act as a professional instructor and practitioner with deep real-world experience in [skill]. Teach me this skill from beginner to advanced level in 30 days. Focus on practical understanding, correct fundamentals, and real application instead of theory or academic explanations.”
Example : நான் உங்களுக்கு புரிய வைக்க உதாரணத்துக்கு "Photoshop" னு கொடுத்து screenshot போட்டு இருக்கேன். இதே மாதிரி நீங்க எந்த software / tools வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
2. The 30-Day Skill Roadmap
“Create a detailed 30-day learning roadmap for mastering [skill]. Break it into daily or weekly stages, explain what to learn, what to practice, and what outcome I should achieve at each stage to progress correctly.”
Home Decor and Home Improvement Products - #arivomfreedom
இந்த மாதிரி sale ல குறைந்த விலைக்கு வாங்கிய Home Decor items தான் எங்க வீட்டில் அதிகமா இருக்கு . சின்ன வீடாக இருந்தாலும் சரி , பெரிய வீடாக இருந்தாலும் சரி ... வீட்ல இந்த மாதிரி products எல்லாம் இருந்தா நல்லா இருக்கும் , கூடவே வீட்டை அழகா காட்டும் என்கிற மாதிரியான Home Decor பொருட்களை எல்லாம் இந்த thread ல கொடுத்து இருக்கேன். கூடவே வீட்டு பயன்பாட்டுக்கு உதவியா இருக்கற Home Improvement products களும் இருக்கு . உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சுக்கங்க.
#AmazonFreedomFestival - Day 1 : Early Deals Revealed
Early Deals தொடங்கியாச்சு. நம்ம எப்பவும் போல #arivomfreedom என்கிற tag ல இந்த sale ல கிடைக்கும் உண்மையான offers மட்டும் இந்த பதிவுல thread ஆ பதிவு செய்யறேன். நீங்க ஏற்கனவே கேட்டு இருக்கும் பொருட்களை கண்டிப்பா reply செய்யறேன் . . இனிமேல் கேட்கும் நண்பர்கள் நீங்க என்ன பொருள் வாங்க போறீங்க ? என்ன பட்ஜெட் என்பதையும் தெரியப்படுத்தினால் reply செய்ய உதவியா இருக்கும் .
இந்த Early Deals Price எப்ப வேண்டுமானாலும் அதிகம் ஆகிடும் (Depends on Stock) . எனவே உங்களுக்கு இந்த thread ல எதாவது பொருள் பிடித்து இருந்தா உடனே வாங்கிக்கங்க . இல்லை என்றால் "Arivom Freedom" என்கிற Folder பெயரில் Bookmark செய்து கொள்ளுங்கள்.
1. Amazon Fire TV Stick HD | TV power & volume controls, Alexa voice search #ArivomFreedom
புது வீடு கட்ட போறீங்க ? அல்லது வீட்டில் Paint அடிக்கும் ஐடியா ல இருக்கீங்க என்றால் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . நான் இதை Facebook ல ஒரு பக்கத்துல (Credit : Homestitik) இருந்து save செஞ்சு வெச்சிருக்கேன்.
இந்த ஊருக்கு போய்ட்டு வந்த உடனே எழுத வேண்டும் என்று தான் இருந்தேன் . ஆனா வேலை , வீட்டு சூழ்நிலை னு இவ்ளோ நாள் ஆகிடுச்சு . சரி இந்த இரண்டு நாள் பயணத்தில் நான் எந்த கோயிலுக்கு எல்லாம் போனேன் , அதன் சிறப்பு என்னனு இந்த thread ல பார்க்கலாம் .
நான் Family யா போகும் போது எவ்வளவுக்கு எவ்வளவு luxury ஆ trip plan செய்வனோ , Solo trip போகும் போது அவளுக்கு அவ்வளவு budget ல தான் plan செய்வேன் . இந்த கும்பகோணம் trip ம் பட்ஜெட் ல தான் போய்ட்டு வந்தேன் . சரி எதுல போனேன் , எங்க தங்கினேன் , எங்க எல்லாம் சாப்பிட்டேன் மொத்தம் எவ்ளோ செலவு ஆச்சு னு detail ஆ பார்ப்போம்.
நான் கோயம்பத்தூர் ல இருந்து Train ல தான் போகனும் னு முதலிலே முடிவு செஞ்சிட்டேன் . அதற்காக சில வாரங்களுக்கு முன்னையே காலை 7.15 க்கு தினமும் கோவையில் இருந்து கும்பகோணம் செல்லும் Mayiladuthurai Jan Shatabdi Express ல டிக்கெட் எடுத்துட்டேன் . டிக்கெட் விலை Rs.193/- .
இது second sitting என்பதால் அமர்ந்து செல்லும் chair seat தான் , Train உண்மையாகவே அவ்ளோ neat ஆ இருந்திச்சு . கிட்டத்தட்ட 5.30 மணி நேரம் பயணம் . ஜன்னல் சீட் தான் Book செஞ்சிருந்தேன் . போகும் போதும் வரும் போதும் மனதுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதினேன். அதையும் சீக்கிரம் கண்டிப்பா பதிவு செய்யறேன்.
என்னுடைய Pondicherry trip organize செய்து கொடுத்த @rajeshm1228 இவங்ககிட்ட தான் என்னுடைய இந்த trip க்கு Cab மற்றும் room suggestion கேட்டு இருந்தேன் . இவர் தான் எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு கொடுத்தார் . சத்தியமா இவர் உதவி இல்லைனா கண்டிப்பா இவ்ளோ கோவிலுக்கு போயிருக்க முடியாது . அவ்ளோ planned and professional. நான் கும்பகோணம் போய் சேர்வதற்கு முன்னையே டிரைவர் அண்ணா எனக்கு call செஞ்சு எல்லா update கொடுத்துட்டார் . நான் பாபநாசம் ல இறங்கிட்டேன் . செம பசி. அங்க சாப்பிட ஒரு கடையுமே இல்லை . ஒரு டீயை மட்டும் குடிச்சுட்டு நேரா கும்பகோணம் ல போய் சாப்பிட்டுக்கலாம் னு கிளம்பிட்டோம்.