தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Mar 22, 2023, 20 tweets

#கச்சத்தீவும்_கலைஞரும்
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் குடி தேஷ்களும், அவர்களின் உரிமையாளர்களும் கூலாக பரப்புவது :
"கருணாநிதி மட்டும் கச்சத்தீவை..
அவ்வளவு ஏன் கடலையே காணாத காலை மட்டுமே கண்டவன் கூட எங்க இரும்பு லேடி மட்டும் இருந்திருந்தா.

#யாருக்குசொந்தம்
இந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர், உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொண்டு, 285 ஏக்கர் 20 சென்ட் என அளந்து சர்வே எண்.1250 என குறித்து கச்சதீவு அந்தோணியார் கோயில் முன்பு கல்லில் பொரித்து நட்டனர். 1956 வரை நில அளவை

ஆவணங்களில் கச்ச தீவு ஒரு பகுதியாக இருந்தது.
1920 இல் முதன் முதலாக இலங்கை அதில் உரிமை கோரியது
இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அது இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என பிரிட்டிஷ் இந்திய தரப்பில் ஆதாரம் காட்ட. இலங்கை ஏற்றுக்கொண்டது

#என்னபிரச்சினை
இந்தியா 1956 ல் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாகவும் மீன்பிடி உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கும் விரிவுபடுத்தியது. தனக்குரிய தீவுகளை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என கருதிய இலங்கை 1970ல் அதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது.

#இந்தியா_தாரைவார்த்தது_ஏன்
பங்களாதேஷ் போர் காரணமாக அமெரிக்க போர்க்கப்பல் எண்டர்பிரைசஸ் இந்தியப் பெருங்கடலில் நுழைவு. பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனை காரணமாக இந்தியாவின் மீது பொருளாதார தடை நெருக்கடி போன்றவற்றில் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்க இலங்கை நிபந்தனை

#ஒப்பந்தம்
28.06.1974-ல் டெல்லியில் இந்திரா மற்றும் இலங்கை பிரதமர் பண்டாரநாயகா கையெழுத்திட்டனர்.
‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடிக்கலாம், வலைகளை தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுக்கலாம். அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என இந்தியா விளக்கம் அளித்தது

#ஈழவியாபாரி
1974 இல் கச்சத் தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டபோது தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் நெடுமாறன்
இந்திராகாந்தி செய்தது தவறு என்று நெடுமாறன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா? மத்திய அரசு செய்தது தவறு என பத்திரிக்கை பேட்டி இருக்கா

#அதிமுக_அடிமைகள்
அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியாக இருந்தது அதிமுக.கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்ப்புக்கு எதிராக அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் வாயை திறக்கவேயில்லை.
தாரைவார்ப்புக்கு எதிராக கலைஞர் தீர்மானம் கொண்டு வந்த போது சபைக்கே வரவில்லை. அரங்கநாதனை அனுப்பி வைத்தார்

கச்சதீவு ஒப்பந்தம் #இந்திரா_காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என மக்களவையில் பாராட்டு பத்திரம் வாசித்தவர் பூபேஷ்குப்தா (வ.கம்.) இடது கம்யூனிஸ்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க, ஆதரவு. ராமநாதபுரம் சார்பில் பேசிய மூக்கையா தேவருக்கு துரோகி பட்டம்

24/06/1974 கலைஞர் தலைமையில் #அனைத்துக்கட்சி_கூட்டம்
ம.போ.சி,பழைய காங்கிரஸ் MLA பொன்னப்ப நாடார் , இந்திரா காங்கிரஸ் MLA ஏ.ஆர் மாரிமுத்து , முஸ்லிம் லீக் சார்பில் திருப்பூர் மொய்தீன்,பார்வர்ட் பிளாக் சந்தானாம் பங்கேற்பு.
அதிமுக அரங்கநாதன் தலைமையில் வெளிநடப்பு செய்தது

#கலைஞர்_டெல்லி_பயணம்
கச்ச தீவு தாரைவார்ப்பு எதிர்ப்பு தீர்மானங்களை எடுத்துக் கொண்டு கலைஞர் மற்றும் அமைச்சர் மாதவன் உடன் இந்திராவுடன் சந்திப்பு. நீர்வள துறை அமைச்சர் சுவரன் சிங் ஒன்னுக்கும் உதவாத தரிசுநிலம் நமக்கு எதுக்கு ? என பேச கோபப் பட்டு கலைஞர் சென்னை திரும்பினார்

#கண்டன_போராட்டம்
கலைஞரை சமாதானம் செய்ய டெல்லியில் இருந்த கேவல் சிங் வந்தார். தமிழ்நாடு முழுவதும் 29/07/1974 அன்று எழுச்சிக் கூட்டங்கள் நடத்தப் பட்டது. கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த பகுதி என்று மாவட்ட கேஜெட்டில் பதிவு செய்ய உத்தவிட்டார் கலைஞர்

#பறிபோன_உரிமை
எமர்ஜென்சி எதிர்த்ததால் கலைஞர் அரசு கலைக்கப் பட்ட பின்னர் 1976 மீன்பிடி உரிமை ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என முற்று புள்ளி வைத்தே விட்டது.

#இறுதி_அஞ்சலி
சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் எச்.2, 38482/81, நாள் 29.9.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது எச்.2, 38495/91 நாள் 11.9.1981 குறிப்பின்படி கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரைபடத்திலிருந்து நீக்குவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இராமேசுவரம் கிராமப்

புல எண்.1250 சர்க்கார் புறம்போக்கு கச்சத் தீவு ஆர்.சி.எப்.23, 75/83பி ஏ.சி. நாள் 6.2.1982 குறிப்பாணை படி உத்தரவிட்டார்.
இராமநாதபுரம் வட்டாட்சியரும் 118/82 நாள் 19.2.1982 மூலம் வரைபடத்திலிருந்து கச்சத் தீவை நீக்க டேராடூன் இந்திய வரைபட அலுவலகத்திற்குக் கடிதம் எழுதி நீக்க பட்டது

#பழிபோடும்_அரசியல்
தன் கையாலாகாத தனத்தை மறைக்க திமுக மீது பழி போட்ட எம்ஜிஆர் வழியில் பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லும் ஜெயலலிதா 1984ல் ராஜ்யசபாவில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டோம் எனப் பேசியது இன்றளவும் ராஜ்ய சபா ஆவணங்களில் உள்ளன

கச்சத் தீவு ஒன்னு மட்டும் இருந்தா போதும், தமிழ்நாட்டு மீனவர்களெல்லாம் கோடீஸ்வரனா ஆகிருப்பாங்க

சும்மா வரலாறு தெரியாதவன்லாம் பாத்ரூம் வரலேனா கூட கச்சத் தீவை கலைஞர் விட்டு கொடுத்ததுதான் காரணம்னு லேகியம் விக்குறான்.

சரிப்பா சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கலைஞர் கடலை வித்துட்டாரு.!!

ராமச்சந்திரனுக்கும் கோமல வள்ளிக்கும் என்ன கமிஷன் குறுக்க நின்னுச்சி அதை மீட்க.

மாசத்துக்கு ரெண்டு தடவை வெள்ளயும் சொல்லையும் மாட்டி

அடிமை சாமிகளின் அமைச்சர்கள் டெல்லி போனார்களே என்றாவது கச்ச தீவை மீட்பது பற்றி பேசினார்களா

இந்த விவரம் எதுவுமே தெரியாம அரைவேக்காடுகள் கூவுது

அன்பு 2k கிட்ஸ்களே
ஒரு மாநிலத்தின் கவுரவத்திற்கு இழுக்காக மத்திய அரசு செயல்படும் போது ஒரு பொழுதும் அதிமுக ஒற்றைத் தீர்மானம் கூட இயற்றாது.
அது அன்று மட்டும் அல்ல. இன்று எடப்பாடி எப்படி பிஜேபிக்கு பணிந்தாரோ அப்படித்தான் அன்று எம்ஜிஆர் இந்திராவிடம் இருந்த அமலாக்கத் துறைக்கு பயந்தார்

நீட் தேர்வு, 46 உயிர்களை பறித்த ரம்மி தடைச் சட்டம், தமிழ்நாட்டின் பெயரை ஆளுநர் மாற்ற முயன்றது எதிலாவது அதிமுக தமிழ் மக்களின் குரலை பிரதிபலித்ததா? ஆட்சி காலத்தில் அடங்கிக் கிடந்ததை விட எதிர்க்கட்சியாக இருந்தபோது பதுங்கிக் கிடந்தது அதிகம்..
1974 ழும் இதே கள்ள மௌனம் காத்தார்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling