தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Mar 26, 2023, 16 tweets

#ராகுலைவிரும்பும்_தமிழ்நாடு

ராகுலுக்குள் கொஞ்சூண்டு #கலைஞர் இருக்கிறார்

நரேந்திராவுக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் என்று தமிழ்நாடு 2018லயே உணர்த்திருந்தது.

காங்கிரஸ் உள்ளேயும் வெளியேயும் ராகுல் குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு மூர்க்கத்தனமாக தமிழ்நாடு பதிலடி கொடுத்தது

#காங்கிரஸ்_மென்சங்கிகள்
ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் போன்ற பழம் தின்னு கொட்டை போட்ட சுயநலவாதிகள் ராகுலை எதிர்த்து வெளியேறிய போது அவர்கள் தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்தது போல் தமிழர்கள் சமூக வெளியில் காறி துப்பினார்கள். கார்த்தி சிதம்பரம் இப்ப வரை troll செய்யப் படுகிறார்

#ராகுலுடன்_உடன்பிறப்புகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் திமுக உடன் பிறப்புகள் சமூக வெளியில் பகிர்ந்த மீம்கள், கோபப் பதிவுகள் வைரலாகின. பழைய கசப்புணர்வுகளை மறந்து மூத்த திமுகவினரே ராகுலுடன் நின்றனர்

#ராகுலுடன்_பொதுமக்கள்
திமுக கூட்டணி கட்சி. எனவே திமுகவின் தார்மீக ஆதரவு தொண்டர்களின் கோபம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் மலப்புரம், கேரளாவைச் சேர்ந்த பொதுஜனம் ஒருவர், ராகுலின் தகுதி நீக்கத்தை எதிர்த்து பொதுநல ன் வழக்கு தொடுத்து இருக்கிறார்.
அந்த மனிதர் மீது ஏன் இவ்வளவு அக்கறை?

#அரசியலுக்கு_அப்பாற்பட்டவர்
சில அரசியல்வாதிகள் அடிபட்டு ரோட்டில் சாகக் கிடந்தாலும் பொது மக்கள் கண்டு கொள்ளார்
சில வயதான அரசியல்வாதிகளைப் பற்றி எப்படா இவன் சாவான்? என சமூக வலைதளங்களிலேயே கும்மியடிப்பவர்களும் உண்டு.
வழக்கு போட்ட நபர் ராகுலின் கட்சியை சேர்ந்தவர் கூட இல்லை

#குஜராத்_MLA
மோடியை திருடன் என்று சொல்லிவிட்டார் என ராகுல் மீது வழக்கு போட்ட பிஜேபி எம்எல்ஏ மோடி என்ற ஓபிசி சேர்ந்தவர் அல்ல. குஜராத்தி பனியா. ராகுல் மீதான தமிழ்நாடு, கேரளா மக்களின் அன்பு தான் இன்று அவரை ஒரு OBC மக்களுக்கு எதிராக நிறுத்த பிஜேபி போலி செய்தி கும்பலை நிர்பந்திக்கிறது

#பஞ்சாப்_சம்பவம்
பிரதமரையே பஞ்சாப்புக்குள் நுழைய விடாமல் தடுத்தார்கள் பொதுமக்கள். Z+ பாதுகாப்பாலும் வழி உருவாக்க இயலவில்லை. பிரதமர் திரும்பி பாதுகாப்பாக டெல்லி வந்து சேர்ந்தேன், நன்றி என்று பஞ்சாப் முதல்வருக்கு எழுதினார். இந்த மாதிரி உலகின் எங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

#ஒற்றுமை_யாத்திரை
அதே நாட்டில்தான் எம் பிக்கான பாதுகாப்பு தவிரப் பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லாமல் ராகுல் கேஷூவல் ட்ரெஸ் கோடில் சர்வ சாதாரணமாக குமரியில் தொடங்கி உச்சிக் காஷ்மீர் வரை வெறுமனே நடந்தே கடந்தார். பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்களில் நூற்றுக் கணக்கான ஊர்களில் யாருமே அவர்

நுழையத் தடை சொல்லவில்லை. பிரபல முதல் சாதாரண மக்கள் வரை பலரும் அவருடன் நடந்தார்கள். தங்கள் சோகங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்தார்கள். செல்பி எடுத்துக் கொண்டார்கள். குழந்தை குட்டிகளுடன் வந்தார்கள். குழந்தைக்கு பெயரையும் வைக்கச் சொன்னார்கள்.
குழந்தைகளை கொஞ்சவும் சொன்னார்கள்

அவர் பாட்டுக்கு விவசாயிகளுடன் ரோட்டில் உட்கார்ந்து உரையாடுவார். கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கல்வி மேடைகளில் அரட்டையடிப்பார். எளிய குடும்பத்துப் பொதுஜனங்களுடன் சேர்ந்து அமர்ந்து சமபந்தியில் உரையாடிக் கொண்டே உணவருந்துவார். 'சார்' என்று அழைத்த மாணவிகளை 'ராகுல் என அழையுங்கள்' என்றார்

அதைக் கேட்டு அவரை ராகுல் என அழைத்த மாணவியின் முகத்தில் தோன்றிய வெட்கம் அன்றைக்கு அன்றை பிக் ஆப் த டே என சமூக வெளிகளில் வைரலானது. மாற்றுத் திறனாளிகளும், விளிம்புநிலை மனிதர்களும் அவரை தங்கள் ரட்சகராக எண்ணி பல நூறு கிலோமீட்டர் பயணித்து, ராகுலுடன் சிறிது நடந்து புளங்காகிதம் அடைந்தனர்

பப்பு என்றார்கள். திருமணம் செய்துகொள்ளாததைப் பற்றிக் கிண்டலடித்தார்கள். சகோதரியுடன் விளையாடும் போட்டோவைப் போட்டுத் தற்குறித்தனமாக நக்கலடித்தார்கள். தாயாரை பார் டான்சர் என்றார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் யார் மீதும் அவதூறு வழக்குப் போடாமல் எல்லா அவமானங்களை ஸ்போர்ட்டிவாகக் கடந்தார்

#ராகுலில்_கலைஞர்
"கருணாநிதியின் தலையைச் சீவி விடுவேன்" என்று கொலை மிரட்டல் விடுத்த வடக்கிந்திய சாமியாரையே 'என் தலையை நான் சீவியே பதினைஞ்சு வருஷமாச்சு, விடுங்கய்யா அவராவது வந்து சீவி விடட்டும்' என்று புன்னகையுடன் கடந்த கலைஞரை ராகுலின் செயல்களும் நினைவுபடுத்துகின்றன.

#தகுதிநீக்கம் பற்றி எனக்குக் கவலையே இல்லை, நிரந்தரமாகக் கூடத் தகுதி நீக்கம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். பதவி என்பது டயர் நக்கிகள், தரை நக்கிகள், பதவி சுகத்தை அடைவதற்காக ரயில் எரிப்பவர்கள், முதுமையைக் கிண்டல் செய்து பதவி அடைந்தவர்கள் போன்றோருக்கு வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம்

#உத்திரபிரதேசம்_கேரளா எல்லாவற்றுக்கும் மேலாக 'என் தந்தையைக் கொன்றவர்கள் செய்தது பெரிய குற்றம்தான். ஆனால் அவர்களை நான் மன்னித்து விட்டேன்' என்று அறிவித்த பரந்த மனதுக்காரர். உபிக்காரர் அவர் எங்கோ கேரளாவில் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் எம் பியாக வெற்றியும் பெற்றார்.

#அன்பை_விதைப்போம்
ஒருவருக்கான மரியாதை அவர் வகிக்கும் பதவியால் மட்டும் இல்லை. அரசகுமாரனாக வளர்க்கப்பட்டவர். எனினும் பல்வேறு மொழிகள் மதங்கள் கலாச்சாரம் கொண்ட மக்களுடன் அவரை இரண்டற கலக்க நேரு வாரிசு என்ற முத்திரை அவரை தடை செய்யவில்லை.
அவர்கள் குடும்பத்தில் யாரையும் தடை செய்யவில்லை

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling