அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 27, 2023, 13 tweets

#ராமநவமி_ஸ்பெஷல்
#சப்தரிஷி_இராமாயணம்
ஏழு மகரிஷிகளால் இயற்றப் பெற்றதால் சப்தரிஷி ராமாயணம் என பெயர் பெற்ற சப்தரிஷி ராமாயணம் சுருக்கமானது.

#காஷ்யப_மகரிஷியின் பால காண்டம்

வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார்
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார் விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார்

அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார் கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார்
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார்
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார் அகலிகா கல்லின் மேல் அவர் பாத துளி பட்டது
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார்
சிவபெருமானின் வில்லை

வகுந்தார்
மண்ணின் மகளாம் சீதையை மணந்தார்
ஜானகி ராமனாய் ஊர்வலம் நடந்தார்
வழியில் பரசுராமருக்கு பணிவை தந்தார்
அயோத்தி திரும்பினார் நலமாக
பல்லாண்டு வாழ்ந்தார் வளமாக

#அத்ரி_மகரிஷியின் அயோத்யா காண்டம்
ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வேளையில்
சூழ்ச்சி தோன்றியது கூனியின் மூளையில், அதை

கைகேயி புத்திக்குள் திணித்தாள்
இரண்டு வரங்களை கேட்கும்படி பணித்தாள்
கைகேயி ஆசையால் ராமர் பாசத்தை மறந்தாள்
மன்னனிடம் இரண்டு வரங்களையும் இரந்தால்
உன் ராமன் காடாள வேண்டும்
என் பரதன் நாடாள வேண்டும்
இதை கேட்டதும் தசரதர் கலங்கினார்
துக்கத்தால் தரையில் விழுந்து மயங்கினார்

#பரத்வாஜ_மகரிஷியின் ஆரண்ய காண்டம்
தந்தை சொல் காக்க மனம் உகந்தார்
சீதா லக்ஷ்மண சமேத ராமர் வனம் புகுந்தார்
பாவம் போக்கிடும் கங்கையை கடந்தார்
வேடன் குகனின் நட்பை அடைந்தார் மரவுரி சடை முனி போல தரித்தார்
சித்ரகூடத்தில் சில நாள் வசித்தார்
காண வந்த பரதனை அணைத்தார் தந்தைக்கான

ஈமக்கடன் முடித்தார்
வனத்தில் வசித்தோர்க்கு நன்மை செய்தார்
பின் அகஸ்திய முனிவரின் ஆசிரமம் எய்தார்
முனிவரிடம் பெற்றார் இனிதான அருளும்
அக்ஷ்யவில் எனும் அரிதான பொருளும்

#விஸ்வாமித்திர_மகரிஷியின் கிஷ்கிந்தா காண்டம்
அகஸ்தியர் சொல்படி பஞ்சவடி சென்றார்
பஞ்சவடியின் முனிவர்களிடம்

அபயம் என்றார்
சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் சிதைத்தார்
திறம் மிக்க கர தூஷணர்களை வதைத்தார்
மாயம் செய்த பொன்மானை அதம் செய்தார்
வானர தலைவன் வாலியை வதம் செய்தார்
வன ராஜ்யத்தை குண தாரையோடு சுக்ரீவனுக்கு வழங்கினார்
ஆபத்தில் உதவும் நண்பனாக விளங்கினார்

#கௌதம_மகரிஷியின் சுந்தர காண்டம்
ஆஞ்சநேயர் விளையாட்டாக கடல் தாண்டி குதித்தார்
அசோகவனத்தில் அன்னையை கண்டு துதித்தார்
ஸ்ரீ ராமர் தந்த மோதிரத்தை எடுத்தார்
ஜனகன் மகள் ஜானகியிடம் கொடுத்தார்
அக்ஷன் முதலான அரக்கரை ஒழித்தார்
இலங்கையை நெருப்பால் எரித்தார்
பின் ஸ்ரீ ராமரிடம் வேகமாக

பறந்தார்
கண்டேன் சீதையை என மகிழ்ச்சியோடு பகர்ந்தார்

#ஜமதக்னி_மகரிஷியின் யுத்த காண்டம்
ஸ்ரீ ராமர் நளன் மூலமாக சேது அணை செய்வித்தார்
வீரம் மிக்க வானரருடன் இலங்கை சென்று கர்ஜித்தார்
கும்பகர்ணன் முதலான அசுரருக்கு எமனாக நின்றார்
ராவணன் அழிந்த அப்பெரும்போரில் வென்றார்
இலங்கை

அரசை விபீஷணன் தலையில் முடிந்தார்
ஜெய ராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் பறந்தார்
அயோத்யாவின் சிம்மாசனத்தில் மன்னனாய் அமர்ந்தார்

#வசிஷ்ட_மகரிஷியின் உத்தர காண்டம்
சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமர் மன்னனாய் சிறந்தார்
லக்ஷ்மண பரத சத்ருக்கனரோடு நல்லாட்சி புரிந்தார்
அவர் ஆட்சியில்

அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடந்தன
மக்கள் மட்டுமல்ல அணில் போன்ற ஜீவன்கள் கூட மகிழ்ந்தன
ஊரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பிழைக்கச் செய்தார்
உயிர்களின் தலைவனான் ஸ்ரீ ராமர் தர்மத்தை தழைக்கச் செய்தார்
பல்லாண்டுகளுக்குப் பின் தம் ராஜ்யத்தை இரண்டாக்கினார்
தம் புதல்வரான லவ குசரை

அவற்றுக்கு அரசனக்கினார்
தன்னை நேசித்த மக்களோடு சரயு நதியில் இறங்கினார்
மீண்டும் பரம பதம் சென்று மீண்டும் மஹாவிஷ்ணுவாக விளங்கினார்

#பாராயண_பலன்
அமுதம் நிகரான ராம காதை ஜபித்தவர்
செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தவர்
அறம் பொருள் இன்பம் மூன்றையும் வெல்வர்
தேவர்கள் விஷ்ணுவை

துதிக்கும் வைகுண்டம் செல்வர்

ராம ராம ராம ராம நாம தாரகம்🙏🏻
ஜய ஶ்ரீராம்🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling