Deva Profile picture
#அன்பைவிதைப்போம் 🖤 #மனிதம்காப்போம் ❤️ ஐம்பெரும் காப்பியங்களா'ன 💐 #பெரியார் 🖤#அம்பேத்கர் 💙#அண்ணா #கலைஞர் #ஸ்டாலின் Neet விலக்கு Tbs இலக்கு 🖤❤️

Apr 3, 2023, 6 tweets

பெரியாரைப் பற்றி ‘#கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி .
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

1931 விகடனில் எழுதிய கட்டுரையிலிருந்து !

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசிங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல்

அளித்துவிடுவேன்.சாதாரணமாக,இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்கு குறைவது கிடையாது.இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார்.

ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால்

கேட்க முடியாது.பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிரர்ஜிதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை

தொடங்குவதில்லை.எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி

கண்டுவிடும்.எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது

தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லையென்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினாரென அறிகிறேன்.இருக்கலாம். ஆனால்,அவர் உலகாநுபவம் என்னும் கலா சாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்

என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!

[ நன்றி: விகடன் காலப் பெட்டகம் ]

#பெரியார் #Vaikom100 @DMKITwing

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling