அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 5, 2023, 16 tweets

இன்று #பங்குனி_உத்திரம்
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும்

மிகப் பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமபிரான்-சீதா

தேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் இன்று நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள்

தான். செல்வத்தின் அதிபதியான #ஸ்ரீமகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். காக்கும் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்த ஸ்ரீமகாலட்சுமிக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான்

என்கிறது #விஷ்ணுபுராணம். நம் செல்வ வளம் சிறக்க இந்நாளில் ஸ்ரீமகாலட்சமியை வேண்டி விரதம் இருந்தால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும். ஸ்ரீஆண்டாள்-ரங்கமன்னார், நந்திதேவர்-சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். எம்பெருமான் சொக்கநாதர்-அன்னை மீனாட்சி திருக்கல்யாணம்

நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில் தான். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெருமான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளியதும் இந்த நன்னாளில் தான். பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான். அது மட்டுமா,

பிரம்ம தேவர் தன்னுடைய நாவில் கல்விக் கடவுளான சரஸ்வதியை அமர்த்திக் கொண்டதும் பங்குனி உத்திரத் திருநாளில் தான். பிரம்மச்சாரிய கடவுளான ஸ்ரீசபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் அவதரித்ததும், பூரணா-புஷ்கலாவை மணம் செய்து கொண்டதும் இந்நன்னாளில் தான். அதேபோல் மன்மதன் ரதிதேவியை மணம் செய்து கொண்டதும்

இந்த நாளில் தான். #ஶ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் – மட்டையடி, ப்ரணயகலஹம் மற்றும் பெரிய பிராட்டியார் சேர்த்தி நிகழ்வுகள் மிக விசேஷம். பங்குனி உத்திரம் பெரிய பிராட்டியாரின் திருநட்சத்திரம். திருவங்கத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே தாயாருக்கும் பெருமாளுக்கும் சேர்த்தி நடைபெறும்.

*பெருமாள் 8 வீதிகள் எழுந்தருள்வார்
*தாயார் சன்னதியில் மட்டையடி நடைபெறும்
*பெருமாளுக்கும் தாயாருக்கும் நடைபெறும் வாக்குவாதம் – பிரணய கலஹம்
*பெரிய பிராட்டியார் சேர்த்தி
*ஸ்வாமி இராமானுஜர் சரணாகதி அனுஷ்டித்த கத்யத்ரய பாராயணம்
*வருடத்தில் ஒரு முறை கொள்ளிடகரையில் சின்ன பெருமாள்

தீர்த்தவாரி மற்றும் கத்யத்ரயம் சாற்றுமுறை
*பெருமாளுக்கும் தாயாருக்கும் ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம்
இதுவே ஸ்ரீரங்கத்தில் நடக்கும் சேர்த்தி உட்சவத்தின் நிகழ்ச்சியாகும்.
#ஸ்வாமி_இராமானுஜர் இதே பங்குனி உத்திர நாளில் சேர்த்தியில் சரணாகதி அனுஷ்டித்தார். கத்யத்ரயம் சொல்லி இருவரிடம்

சரணாகதி அடைந்தார். இதற்காக கத்ய த்ரயம் பாராயணம் செய்யப்படும். இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடை

பெறுகிறது.
நாம் என்னதான் வாழ்க்கையில்
வசதியாக இருந்தாலும், சுப நிகழ்வுகள் நடக்க இறைவனின் திருவருள் அவசியம் வேண்டும். அதற்கு கைகொடுப்பது பங்குனி உத்திர விரதம் தான். சிலருக்கு திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம்

திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதோடு, மனதுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

ஸ்ரீரங்கம் மேட்டழகியசிங்கர் சன்னதி எதிரில் நடந்த கம்பராமாயணம் அரங்கேற்றமும் இன்று தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling