#ராமாயணம் #ஜடாயு_சிலை கழுகு பார்வையில் பிரமாண்டமான ஜடாயு சிலை, இறக்கை வெட்டுப்பட்டு ஜடாயு விழுந்த இடத்தில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது. மகா விஷ்ணுவுக்கு வாகனமாக விளங்கும் கருடனின் சகோதரனான அருணனின் மகன் தான் ஜடாயு. வனத்தில் ராமனோடு இருந்த சீதையை, ராவணன் இங்கே
நயவஞ்சகமாக தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்தான். அப்போது ஜடாயு, ராவணனோடு போரிட்டார். அப்போது ஏற்பட்ட சண்டையில், ராவணன் தன் வாளால், ஜடாயுவின் இறக்கைகளில் ஒன்றை வெட்டினான். படுகாயம் அடைந்த ஜடாயு, ராமனிடம் சீதையை தூக்கிப் போன திசையை காட்டி விட்டு உயிரிழந்தது. இறக்கை வெட்டுப்
பட்டு ஜடாயு விழுந்த இடம், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் (ஜடாயுமங்கலம்) என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் தான் பிரமாண்டமான ஜடாயு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மலையேற்ற பயிற்சி எனப்படும் ‘டிரெக்கிங்’ மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த
சாகச விளையாட்டு உள்பட 20 வகையான சாகச விளையாட்டுக்களை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறது. #ஜடாயு_எர்த்_பார்க் என்று அழைக்கப்படும் இந்த இடமானது கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ளது. இந்த சுற்றுலா தலம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஜடாயு விழுந்து
இருந்த இடம் பாறை பகுதி. அது ‘ஜடாயு பாறை’ என்று அழைக்கப் படுகிறது. அந்த ஊர் #சடையமங்கலம் என்ற பெயரில் விளங்குகிறது. ஜடாயு பாறை மீது தான் பிரமாண்டமான ஜடாயு சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் திரைப்பட இயக்குனர் ராஜீவ் அன்சல் ஆவார். இவர் தனக்குள் உண்டான எண்ணத்தை இப்படி
உருவமாக மாற்ற 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. வீரம் மற்றும் துயரத்தின் உருவம் தான் இந்த ஜடாயு சிலை. சீதையை காப்பாற்றும் முயற்சியில் உயிர் தியாகம் செய்த ஜடாயு, பெண்களின் கௌரவத்திற்கும், பாதுகாப்புக்கும் சமர்ப்பணம் செய்யும் வகையில் வடிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜடாயு
சிலை, ஒரு இறக்கை இல்லாமல், பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நீளம் 200 அடி (61 மீட்டர்)
அகலம் 151 அடி (46 மீட்டர்)
உயரம் 69 அடி (21 மீட்டர்) அளவு கொண்டது.
15 ஆயிரம் சதுர அடியில் இந்த ஜடாயு சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. 52 இறகுகள் கொண்டதாக இந்த பறவை இருக்கிறது. இதன் செலவுத
தொகை ரூ.100 கோடி ஆகும். மொத்த பரப்பளவு 65 ஏக்கர் கொண்ட இந்த பூங்காவில், 3 டி அருங்காட்சியகம், தொலைநோக்கி கருவியைக் கொண்டு பாா்வையிடும் வசதி, 6 டி திரையரங்கம், மலை உச்சிக்குச் செல்ல ரோப் கார் வசதி,
மலையை மேற்பகுதியில் இருந்து கழுகு பார்வை எனப்படும் ஏரியல் வியூவில் பார்க்க
ஹெலிகாப்டர் வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.