கழுகு 🦅🇮🇳 Profile picture
#பெரியார்_திராவிடப்படை 🇮🇳I.N.D.I.A🇮🇳 சமூகநீதி,சுயமரியாதை, பெண்களுக்கான முன்னேற்றம், அனைவருக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி🦅

Apr 23, 2023, 8 tweets

#Pm_Cares_Scam

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து சுமார் 4 மில்லியன் இந்து மற்றும் சீக்கிய அகதிகள் இந்தியா வந்தனர்,
பல முக்கிய நகரங்கள் அவர்களின் வருகையால் திக்கு முக்காடின, இடைக்கால இந்தியஅரசின் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் இல்லமும் புலம்பெயர்ந்த..

(1)..

அகதிகளால் நிரம்பி வழிந்தது 24.01.1948 அன்று பத்திரிகை தகவல் பணியகம் ஒரு  செய்தி குறிப்பை வெளியிட்டது,

 "எந்தக் காலத்திலும் நமது துன்பத்தில் தவிக்கும் ஏராளமான நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் இன்றைக்கு இருப்பது போல் மிகஅதிகமாகவும் அவசரமாகவும் இருந்ததில்லை"

(2)..

என்று ஜவஹர்லால் நேரு அவர்களின் குறிப்பு அது..

“எந்தவிதமான துயரத்தின் அவசர நிவாரணத்திற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு மத்திய நிவாரண நிதியை வைத்திருப்பது விரும்பத்தக்கது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது இப்போது குறிப்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளின் நிவாரணம்..

(3)..

மற்றும் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்  எனவே, நான் "பிரதமரின் தேசிய நிவாரண நிதி" என்ற பெயரில் ஒரு நிதியைத் தொடங்குகிறேன்,
மேலும் இந்த நிதிக்கு நன்கொடைகளை அளிக்க மக்களை அழைக்கிறேன்"
என்றும் இருந்தது..

இதுதான் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு இதை முக்கிய கட்டத்தில் மட்டும்..

(4)..

உபயோகிக்க முடிவு செய்து கவனமாக #pmcares ஏற்படுத்தபட்டது..

ஆனால் ஊழலை ஒழிப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி செய்த ஊழல் சாதனையோ சொல்ல முடியாத அளவு பெருசு..

PM Cares மூலம் நாட்டு மக்களிடம் நன்கொடை செய்து அந்த கணக்கை யாரிடமும் சொல்ல முடியாது என்று அரசு நிர்வாகத்தின்..

(5)..

வெளிப்படைத் தன்மைக்கு மிகசிறந்த உதாரணத்தை
பார்த்தோம்..

ஒரு அரசு துறையில் ஊழல் நடந்ததாக புகார் வந்தால் அந்த புகாருக்கு உள்ளான அரசு ஊழியரை விசாரிக்க அந்த துறையின் மேல் அதிகாரியின் எழுத்துபூர்வமான அனுமதி வாங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஊழல் ஊழியர்களுக்கு..

(6)..

பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்தார், தேர்தல் பத்திரங்கள் மூலம் அடையாளம் தெரியாதவர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம் என்று சட்டம் இயற்றி கருப்பு பணத்தை பல்வேறு ஷெல் கம்பெனிகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்க வைத்து வெள்ளையாக மாற்ற பெரும் உதவி செய்தார்..

(7)

ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்க அமைக்கப்பட்ட லோக்பால் நியமனத்தை எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்ற காரணம் சொல்லி பலவருடங்கள் இழுத்தடித்து
ஊழலுக்கு ஆதரவா?
இது ஊழல் ஒழிப்பா? இல்லை ஊழலை எதிர்ப்பவர்களை மட்டும் ஒழிப்பா?😡😡

#Pmcares_Scam

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling