உண்மை கசக்கும் Profile picture
Dr. R.Venkatraghavan / Belongs to the Dravidian Stock / Political analyst / Writer / Traveller / #MKStalinEraBegins #Kalaignar #Anna #Periyar #Kumbakonam #TN68

Apr 26, 2023, 18 tweets

#சுற்றுலா
மனதை கொள்ளை கொள்ளும் மாவட்டமாக இருக்கும் தேனி அதிகம் செலவில்லாத சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் தான். தேனியில் மலைகள், அருவிகள், ஆன்மீக இடங்கள் என பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் தேனியை அடைவது எளிது. தேனியை பற்றி பார்ப்போம்

மேகமலை :
பச்சை பசேல் என கடல் மட்டத்திலிருந்து 1,500 மீ. உயரத்தில் உள்ள மேகமலைக்கு செல்ல தேனியிலிருந்து கார் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மற்றொரு வழியாக சின்னமனூரில் இருந்து, அதிகாலை 4.30, காலை 6, மற்றும் காலை 10 மணிக்கு புறப்படும் பேருந்து, தேனியிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்

சின்ன சுருளி அருவி :
மேகமலையிலிருந்து கீழே பாய்ந்து, புத்துணர்ச்சியை ஊட்டும் அருவியான சின்ன சுருளி அருவிக்கு செல்ல காலை 7 முதல் மாலை 5 வரை அனுமதி உண்டு. தேனியில் இருந்து 95 கி.மீ. தூரத்தில் கடமலைக்குண்டு அருகே கோம்பைத் தொழு கிராமத்தில் அமைந்துள்ளது.

சண்முகநதி அணை :
உத்தமபாளையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இராயப்பன்பட்டி ஊருக்கு அருகே இருக்கிறது 52 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை. இந்த அணைக்கு மேகமலை மலையில் இருந்து இந்த அணைக்கு தண்ணீர் வருகிறது.

கொழுக்குமலை தேயிலை தோட்டம் :
பட்ஜெட்டுக்கு ஏற்ற அற்புதமான சுற்றுலா தலமாக இருக்கும் கொழுக்குமலை போடி மெட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள சூர்யநெல்லி வழியாக செல்ல வேண்டும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அரசு அங்கீகரித்த ஜீப்புகளில் மட்டுமே செல்ல முடியும்.

கொழுக்கு மலையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டத்திற்குள் நுழைய கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும். காலை 7:00 முதல் மாலை 6:00 வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கொழுக்கு மலையில் இரண்டு கேம்பிங் இடங்கள் இருக்கின்றன. 2500.ரூ கொடுத்தால் போதும்.

கொழுக்குமலையிலேயே டென்ட் அடித்து தங்கலாம். இரவு-காலை உணவும் உண்டு. இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். கொழுக்குமலையை யொட்டியிருக்கும் மீசைப்புலி மலைக்குச் செல்லும் பயணத்தை கேரள சுற்றுலாத்துறையே ஒருங்கிணைக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்கலாம்.

சூரிய உதயத்தை பார்க்க விரும்புவர்கள் முதல் நாளே இடுக்கி அருகேயுள்ள சூர்யநெல்லியில் அறை எடுத்து தங்கி அதிகாலையிலேயே கொழுக்குமலைக்கு கிளம்பிவிடலாம். மூணாறு - தேனி பேருந்தில் பவர் ஹவுஸ் நிறுத்தத்துக்கு 16 ரூபாய் பயணக் கட்டணம். அங்கிருந்து சூர்யநெல்லிக்கு ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.

வைகை அணை
ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையைச் சுற்றி மிக அழகான பூங்கா உள்ளது. உள்ளூர் மக்களால் 'சிறிய பிருந்தாவனம்” என அழைக்கப்படும் வைகை அணை தமிழ்நாடு அரசால் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பென்னிகுவிக் மணிமண்டபம்

கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை கட்டிய அவரின் நினைவாக தமிழ்நாடு அரசால் இந்த மணிமண்டபம் நிறுவப்பட்டுள்ளது.

குச்சனூர் சனி பகவான் கோயில்

குச்சனூர் என்ற கிராமத்தில் ஸ்ரீசுயம்பு சனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சின்னமனூருக்கு அருகே உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.

குரங்கனி

அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.

சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் நடைபெற்ற வணிகப்பாதை மற்றும் தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட கூடங்கள் இப்பகுதியில் உள்ளது. தீ விபத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில்

வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் வீரபாண்டியன் அம்மனை பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் கௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார்

மேகமலை

ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் கோல்டு ஃபிஸ்களை அங்கேயே சூடாகச் சமைத்துக்கொடுப்பார்கள்.

இறைச்சல் பாறை அருவி

ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவி ஒன்றைக் காணலாம். வருடம் முழுவதும் தண்ணீர் வரும் இந்த அருவித் தண்ணீர் மருத்துவக் குணம் கொண்டது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

சொந்த வாகனத்தில் செல்பவர்கள், மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேகலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு எனத் தனியாக காட்டேஜ்கள் இருந்தாலும், பேரூராட்சியின் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. எனினும் போதுமான விடுதிகள் இல்லாததால் நன்கு விசாரித்து செல்ல வேண்டும். அப்புறம் என்ன தேனி மாவட்டத்திற்கு ஜம்முன்னு ஒரு விசிட் போடலாமே?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling