DECODING BJP Profile picture

Apr 28, 2023, 6 tweets

#Decoding_BJP 5

#HateSpeeches

2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது

உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்

ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது

ஐபிசியின் பிரிவு 153A, 153B, 295A மற்றும் 506 போன்ற குற்றங்களை ஈர்க்கும் எந்தவொரு பேச்சு அல்லது எந்த நடவடிக்கையும் உடனடியாக, எந்த புகாரும் பதிவு செய்யப்படாமல், தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்புடைய மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்

வெறுப்பு பேச்சை/நடவடிக்கையை நிகழ்த்தியவரின்
மதத்தைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.

இதனால் அரசியலமைப்புச் சட்ட முகவுரையின் மூலம் எதிர்பார்க்கப்படும் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்படும் என்று நம்புகிறது

ஜெர்மனிய பேரழிவு, கேஸ் சாம்பர்களிலோ சித்திரவதை முகாம்களிலோ தொடங்கவில்லை.

யூதர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை, கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ

ஒரு முறையான அமைப்பு இல்லாததே Holocaust என்னும் பேரழிவை நோக்கி ஜெர்மனியை அழைத்துச் சென்றது

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் இந்த உத்தரவு வெறுப்புப் பேச்சு களுக்கு ஒரு கடிவாளம்.

நடவடிக்கை எடுக்க தாமதமானால் அதை நீதிமன்ற அவமதிப்பு என்பதால்

மாநிலங்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும்

தமிழ்நாடு போன்ற அமைதி மாநிலங்களில் வன்முறையை தூண்ட நினைப்பவர்க்கு இது எச்சரிக்கை

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling