அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 29, 2023, 14 tweets

#தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ், வடமொழி

ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப் போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர்

அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள்

உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியந்தனர். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்று சொல்வதுண்டு. மட்டுவார்

குழலி என்னும் மங்கையை மணந்து கனகசபாபதி என்ற மகனையும் பெற்று வாழ்ந்தார். மனைவி இறந்த பிறகு, துறவு வாழ்க்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். அரசவை பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். 1736-ஆம்

ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் #தாயுமானவசுவாமிகள்_திருப்பாடற்றிரட்டு என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும். இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள்

கண்ணிகளாகவும், (இரண்டடிப் பாடல் வகை) 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களை, பூசல்களை கண்டு மனம் வெறுத்துச்

சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. தான் செய்யும் இறை வழிபாட்டை, 'நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே' (பராபரக்கண்ணி -151) என்று பாடியுள்ளார். சும்மா இருக்க அருளாய்

என்று இறைவனிடம் வேண்டுபவர். இவருடைய #பராபரக்கண்ணி மிகவும் புகழ் பெற்றது. இதில் 389 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன. 'அண்டகோடி புகழ்காவை வாழும்அகிலாண்ட நாயகி என் அம்மையே!' என்று அம்பாளைப் பாடியுள்ளார். மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும், பழமொழிகளும் மிகுந்துள்ளன. 'சினம் அடங்கக் கற்றாலும்

சித்தியெலாம் பெற்றாலும் மனம் அடங்கக் கல்லார்க்கு #வாயேன் பராபரமே' என்பது இவரின் இன்னொரு தத்துவ பாடல் வரிகள். தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் 1742-ல் (தை விசாகம்)

சமாதி அடைந்தார். 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்னும் இவருடைய வரிகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. (பராபரக்கண்ணி - 221)
ஒருசமயம், பூக்களைப் பறிக்கு நந்தவனம் சென்றவர் நந்தவனத்தில் முல்லை, பாரிஜாதம், இருவாட்சி, வில்வம், துளசி என பல

மலர்களும், இலைகளும் நிறைந்திருந்தாலும், எதையும் பறிக்காமல், காலி கூடையுடன் திரும்பினார். ஏன் காலி கூடையுடன் திரும்பியுள்ளாய் என்று பெற்றோர் கேட்டதற்கு, அங்குள்ள மலர்கள், என் கண்களுக்கு மலர்களாகத் தெரியவில்லை. எல்லாம் சிவ உருவமாகவே தெரிகின்றன. சிவத்தைக் கிள்ளி எவ்வாறு சிவத்தில்

போட முடியும் என்று பதில் கேள்வி கேட்டார் தாயுமானவர். "பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்” என்று கூறிய தாயுமானவர், “ஆடாக, மாடாக, புழு, பூச்சியாகப் பிறந்திருந்தால் எவ்வாறு சிவபூஜை செய்ய முடியும்? அதனால் மனிதப் பிறப்பை நாம் அனைவரும் விரும்புவோம், மனிதப் பிறப்பை அளித்த இறைவனுக்கு நன்றி

சொல்வோம். அன்பு செய்வோம். பண்பு காட்டுவோம். மனக்குரங்கை அடக்க வேண்டும். மனதை அவனை நோக்கிச் செலுத்த வேண்டும்” என்று அருள்கிறார்.
அறிவோம் நம் மகான்களை. அவர்கள் அறிவுரைப் படி வழி நடப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling