அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 30, 2023, 6 tweets

#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசை, மாட மாளிகையாக மாறியது. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.

திரௌபதியின் வஸ்திரத்தை துச்சாதனன் உருவிய போது சேலைகளைக் கொடுத்து

அவள் மானத்தைக் காத்தார்.

துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர்.
துரியோதனன் எல்லா படைகளையும்
கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார். கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு
தன்னையே கொடுத்தார்.

அவனுக்கு சாரதியாக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.

கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு அவர்களுக்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையால் அவர்களை மகிழ்வித்தார்.

பெரும் மழை வந்தபோது பயந்து நடுங்கிய இடைச்

சிறுவர்களுக்கு கோவர்த்தன மலையையே உயர்த்திக் குடை கொடுத்து காத்தார்.

பெரும் சண்டைகளுக்கும் உயிர்க் கொலைகளுக்கும் காரணமாக அமைந்த சியமந்தக மணியை அக்ரூரருக்குக் கொடுத்தார்.

அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மருக்கு, ஏற்கனவே அர்ஜுனனுக்கும் சஞ்சயனுக்கும்
காட்டிய விஸ்வரூப தரிசனத்தைக்

கொடுத்தார்.

இப்படி எவ்வளவோ நம் கிருஷ்ணரின் கொடைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மானிடப் பிறவி எடுத்த நமக்கு என்ன கொடுத்தார்?

பகவத் கீதை என்னும் மாபெரும் பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார். உபநிஷதம் எல்லாவற்றையும் சாறு பிழிந்து, அதை நமக்கு எளிதில் பருக வசதியாக ஒரு கோப்பையில் #பகவத்கீதை

என்னும் 700 ஸ்லோகங்களே மட்டும் உடைய, 1400 வரிகளே உடைய, அரிய பெரிய தத்துவத்தைக் கொடுத்து இருக்கிறார். நம் வாழ்வு மேன்மையடைய இதன்படி வாழ்ந்தார் போதும்.

பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல்
இருப்பதும் நம் கைகளில் தான்!
கண்ணன் மாபெரும்கொடையாளி.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling