Gumbala Suthuvom, Sweden Profile picture
The official handle for Gumbala Suthuvom YT channel. We share informative and travel videos of Tamil people from Sweden- Multiple admins♥️ https://t.co/v8eAvuVfxm

May 12, 2023, 12 tweets

குளிர் காலத்தில் இருந்து வெயில் காலம் வரும்போது நடக்கும் ஒரு நிகழ்வு தான் இந்த #koslap. Arla என்ற பால் நிறுவனம் சுவீடன் முழுவதும் உள்ள பால் பண்ணையில் இதை செய்கிறார்கள். ஒரு மாட்டு பண்ணை கூட இவ்வளவு தொழில்நுட்ப கட்டமைப்பு வைத்து இருப்பது பிரமிக்க வைத்தது.

மாடுக்கு சொரிந்து விட கூட மெஷின் என்பது சிரிப்பா இருந்தது. பால் கறக்க அதுவே வரிசையில் இருக்கு. கழிவுகளை தள்ளிவிட எல்லாமே automatic தான் 😁💪

சாதாரணமாக 100 மாடுகள் இருக்கும் இடத்தில் கொஞ்ச ஆட்க்களை வெச்சே நிர்வாகம் செய்கிறார்கள். உணவும் காஞ்ச புல் தான் குளிர் காலத்தில்.

செனையான மாடுகளுக்கு தனி பிரிவு, அதே போல இளம் கன்று குட்டிகளுக்கு தனி அறை என்று சொர்க பூமி தான் 😁💪

அவிழ்த்து விடும்போது துள்ளி வருவதே அழகு தான்@

ஒவ்வொரு நாடும் நம்ப ஊரு மாட்டை விட 1.5 -2 மடங்கு பெரியது. சும்மா சொல்லக்கூடாது கொழு கொழுன்னு இருக்குப்பா ♥️😍

இலவசமாக kanelbullar மற்றும் பால் தந்தாங்க. குழந்தைகளுக்கு நெறைய சொல்லி கொடுக்குறாங்க. நெறைய நண்பர்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க இதை பற்றி நாங்க ஒரு வீடியோ எடுக்க முயல்கிறோம் 🙌♥️

இன்னும் ஒரு சில பண்ணைகளில் இந்த நிகழ்வு நடக்கிறது சுவீடன் வாசிகள் தவறாமல் போங்க 🙌♥️

சொல்ல மறந்துவிட்டேன் இங்கு பண்ணையில் கிடைக்கும் முட்டை கூட வாங்கலாம். ஆளில்லா ஃப்ரிட்ஜ் ஒன்று இருந்தது. அங்கு நாமே swish (upi) போல ஒன்று அதன் மூலம் 80 kr அனுப்பணும். வந்த கூட்டம் அனைத்தும் அடிச்சுகிட்டு வாங்கிட்டு போனாங்க. 30 முட்டை 130 kr கடையில். இங்கு 80 kr மட்டுமே.

அருகில் பண்ணை சார்ந்த விஷயங்கள் கூட இருந்தது. உதாரணததிற்கு மாட்டு சானியில் இருந்து எடுக்கும் biogas unit மற்றும் பல research unit இருந்தது.Uppsalaவில் படிக்கும் மாணவர்கள் கூட இருந்தார்கள் அவர்கள் தான் car ticket கொடுப்பது, கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling