குளிர் காலத்தில் இருந்து வெயில் காலம் வரும்போது நடக்கும் ஒரு நிகழ்வு தான் இந்த #koslap. Arla என்ற பால் நிறுவனம் சுவீடன் முழுவதும் உள்ள பால் பண்ணையில் இதை செய்கிறார்கள். ஒரு மாட்டு பண்ணை கூட இவ்வளவு தொழில்நுட்ப கட்டமைப்பு வைத்து இருப்பது பிரமிக்க வைத்தது.
மாடுக்கு சொரிந்து விட கூட மெஷின் என்பது சிரிப்பா இருந்தது. பால் கறக்க அதுவே வரிசையில் இருக்கு. கழிவுகளை தள்ளிவிட எல்லாமே automatic தான் 😁💪
சாதாரணமாக 100 மாடுகள் இருக்கும் இடத்தில் கொஞ்ச ஆட்க்களை வெச்சே நிர்வாகம் செய்கிறார்கள். உணவும் காஞ்ச புல் தான் குளிர் காலத்தில்.
செனையான மாடுகளுக்கு தனி பிரிவு, அதே போல இளம் கன்று குட்டிகளுக்கு தனி அறை என்று சொர்க பூமி தான் 😁💪
அவிழ்த்து விடும்போது துள்ளி வருவதே அழகு தான்@
ஒவ்வொரு நாடும் நம்ப ஊரு மாட்டை விட 1.5 -2 மடங்கு பெரியது. சும்மா சொல்லக்கூடாது கொழு கொழுன்னு இருக்குப்பா ♥️😍
இலவசமாக kanelbullar மற்றும் பால் தந்தாங்க. குழந்தைகளுக்கு நெறைய சொல்லி கொடுக்குறாங்க. நெறைய நண்பர்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க இதை பற்றி நாங்க ஒரு வீடியோ எடுக்க முயல்கிறோம் 🙌♥️
இன்னும் ஒரு சில பண்ணைகளில் இந்த நிகழ்வு நடக்கிறது சுவீடன் வாசிகள் தவறாமல் போங்க 🙌♥️
சொல்ல மறந்துவிட்டேன் இங்கு பண்ணையில் கிடைக்கும் முட்டை கூட வாங்கலாம். ஆளில்லா ஃப்ரிட்ஜ் ஒன்று இருந்தது. அங்கு நாமே swish (upi) போல ஒன்று அதன் மூலம் 80 kr அனுப்பணும். வந்த கூட்டம் அனைத்தும் அடிச்சுகிட்டு வாங்கிட்டு போனாங்க. 30 முட்டை 130 kr கடையில். இங்கு 80 kr மட்டுமே.
அருகில் பண்ணை சார்ந்த விஷயங்கள் கூட இருந்தது. உதாரணததிற்கு மாட்டு சானியில் இருந்து எடுக்கும் biogas unit மற்றும் பல research unit இருந்தது.Uppsalaவில் படிக்கும் மாணவர்கள் கூட இருந்தார்கள் அவர்கள் தான் car ticket கொடுப்பது, கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்
வெட்டியா இருக்குமே ஏதாச்சும் புதுசா செய்யலாம் என்று நினைத்து நேற்று #AWSSummit போனேன் 😳😳😳 ஒவ்வொரு விஷயமும் பிரமிக்கும் அளவுக்கு இருந்தது. குறிப்பா எனக்கு மிகவும் பிடித்தது #serverlesscoffee #thread
இந்த கவுண்டரில் server இல்லாமல் காபி கடையில் எப்படி ஆர்டர் செய்யலாம் என்று டெமோ போல வைத்திருந்தனர். அந்த qr code scan செய்தால் நம்ப தொலைபேசி எண் கேட்டாங்க. அதன் மூலம் otp மூலம் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு நமக்கு என்ன காப்பி வேணுமோ அதை தேர்வு செய்யலாம்
அதற்கு பின் நம்ப ஆர்டர் இந்த டிஸ்ப்ளே இல் update ஆகிறது.
இதே போல நானும் ஸ்வீடிஷ் மக்களிடம் எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் தான் பேசணும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்? 😂🤪 வெளில போ என்று சொல்வார்களா இல்லை நான் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்கிராம் என்று சொல்வார்களா? இது ஏன் சொல்லி வெச்சது போல அவர்களுக்கு புரிவதில்லை? 🤦🤔
Translation : If I say the same thing to a Swede here to use English only while mentioning that it is the universal language. what would be their reply? Ok we will learn and speak in English or move to the country where they speak English? Of course they say to get out.
திருச்செங்கோடு மக்களே உங்களால் முடிந்த உதவிகளை இந்த வயதானவர்களுக்கு தந்து உதவுங்கள். உணவு பொருட்கள் கிடைக்காமல் 22 வயதானவர்கள் கஷ்டப்படுகின்றனர். நன்றி!
#Verified உங்கள் உதவியை மளிகை பொருட்களாகவோ பணமாகவோ கொடுக்கலாம். முகவரி+ வங்கிக்கணக்கு👇
சொந்தம் அறக்கட்டளை Madhi- 9788648335
கொரோனாவின் கோறத்தாண்டவம் தலை விரித்து ஆடுகிறது. 2 நாள் முன் எனது அக்கா (பெரியம்மா மகள்) இறந்தார். சிறுவயதில் இருந்தே மாற்றுத்திறனாளி (போலியோவால் பாதிக்கப்பட்டவர்). தனியாக வெளியே போக மாட்டார். நல்ல திறமைசாலி அமேசானில் மேலாளராக பணிபுரிந்தார்.
இவருக்காக நிருவமணமே வீட்டில் வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் கொரோனா விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருப்பவர் மூலமாக பரவியுள்ளது என நினைக்கிறேன். மக்களே உஷாரா இருங்க... பாதிப்பு உங்களுக்கு வராமல் இருக்கலாம் வீட்டில் உள்ளவர்களுக்கு அப்படியில்லை. Stay safe 😭
அதே போல நெருங்கிய உறவில் தாத்தா 73 வயது, போனவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த 6 மாதமாக தண்டுவளதில் எலும்பு முறிவு மற்றவர் உதவி இல்லாமல் எந்த வேலையும் செய்ய இயலாது. வீட்டிலேயே இருந்த அவருக்கு கொரோனா வந்ததும் பெரும் அதிர்ச்சி 😭😞
தமிழ்நாடு: கொரோனா பாதிப்பால் அவசர உதவி தேவை (bed, o2 bed, ventilator bed) எனில் முதல்லில் செய்யவேண்டியது இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ucc.uhcitp.in/publicbedreque…
இதில் முக்கியமாக தேவைப்படும் தகவல் நோயாளியின் பெயர், விலாசம், கொரோனா பரிசோதனை முடிவு, ct scan செய்திருந்தால் அதன் முடிவு, saturation level எவ்ளோ இருக்கு, உறவினர் பெயர் மற்றும் தொலைபேசி எண் எல்லாம் கொடுத்தால் போதும். பின்னர் பதிவு செய்தப்பின் பதிவு எண் எங்காவது குறித்து வைக்கவும்.
எடுத்துக்காட்டு 10720 இது போல இருக்கும். இந்த எண்ணை வைத்துத்தான் அரசு/அவசர உதவிக்கு உதவியை நாட முடியும். இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்ய செய்யதெரியாதவர்களுக்கு 104/1077 அழைத்து உதவி கேக்கலாம். நீங்களே பூர்த்தி செய்திருந்தால் அந்த எண்ணை கொடுத்தால் போதும் அவர்களே பெட் கிடைத்தவுடன்
தோழர்களே வெற்றிகரமாக 2 வருடம் கழித்து இந்தியா வந்தாச்சு. கும்பலா சுத்துவோம் 2 மாசத்துக்கு இந்தியால இருந்து செயல்படும். இந்தியா வந்த கதையை சிரிப்பு கலந்து பார்ப்போம்.(Thread) #Sweden#gumbalasuthuvom#tamilyoutuber
முதல் நாள்: தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் இந்தியா பக்கம் போலாமா இல்ல இங்கேயே இருந்து கஷ்டபடவானு ஒரு நல்ல சீட்டா போது ராசா 😂😂😂
சரி இந்தியா பக்கமே போலம் என்று முடிவு செஞ்சு covid rules பற்றி பார்க்கலாம் என்று முடிவு செஞ்சா இவ்ளோ பெரிய rules சொன்னாங்க...