திருவாவடுதுறை ஆதீனம் சித்தாந்த சைவ மடங்களில் மிகத் தொன்மையானது.பொயு 15 ம் நூற்றாண்டின் இறுதியில் மூவலூரில் பிறந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரால் துவங்கப்பட்டது.(1)
#Sengol #NewParliamentMyPride
ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார்.இன்று 24 வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.(2)
விஜயநகர அரசு,நாயக்கர் அரசு,தஞ்சாவூர் மராட்டிய அரசு,திருவிதாங்கூர் ராஜ்ஜியம்,சேதுபதி மன்னர்கள் என எல்லா அரச குடும்பங்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு.(3)
வேதாகமத்தை - பண்டார சாத்திரங்களை - திருமுறைகளைக் கொண்டு சைவ சமயத்தை பரவச்செய்யும் பொறுப்பு ஆதீனங்களிடமே உள்ளது.ஆதீனம் மற்றும் இதர மடங்கள் எல்லாமே தங்கள் சம்பிரதாயத்தை காக்கிற அளவிற்கு இந்த பண்பாட்டையும்,நிலத்தையும் காக்கிற பொறுப்பையும் பெற்றுள்ளார்கள்.(4)
அரசர்களை வழிநடத்தவும்,அவர்கள் தர்மத்தை மீறும் போது சுட்டிக்காட்டவும்,இந்த நிலத்தில் வேதாகம தர்மம் நிலைத்து செழிக்கவும் மடாதிபதிகளின் பங்கு ஈடுஇணையற்றது..(5)
அரசர் காலங்களோடு ஆதீனங்களின் பணி அரசில் முடிந்துவிட்டது என்றில்லை.எந்த வழியில் ஆட்சி நடந்தாலும்,நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அதில் மடாதிபதிகளின் பங்கு பெரிது.இப்படித்தான் பாரதநாடு சுதந்திரம் பெற்று ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு நேரிடையாக இருந்தது.(6)
1947 ல் பாரதநாடு விடுதலை அடைந்தபோது அதை ஆங்கிலேயரிடம் பெற்றுக்கொள்வதில் ஒரு பாரம்பரிய அடையாளம் இருக்க வேண்டுமென சிந்தித்து,திரு.ராஜாஜி அவர்கள் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்பு கொள்கிறார்.(7)
விஷயத்தை சொன்னவுடன் சுவாமி புரிந்து கொண்டு,தன் உடல்நிலை முடியாத நிலையிலும் சில ஆணைகளை உடனே பிறப்பிக்கிறார்.சென்னையில் பிரபலமாக உள்ள உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னமான ரிஷப அமைப்புடன் கூடிய தங்கச் செங்கோலை செய்யச் சொல்கிறார்.(8)
உடனே,ஆதீன தம்பிரானான குமாரசாமி தம்பிரானையும்,ஆதீன ஓதுவார் மாணிக்க ஓதுவார் அவர்களையும்,ஆதீனத்தின் நாதஸ்வர வித்வான் திரு.ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும் அந்த செங்கோலுடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்.(9)
டெல்லியில் சுதந்திரம் பெற்றதை பறைசாற்றும் விதம்,அந்த செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து ஞானசம்பந்த பெருமானின் 'வேயுறு தோளிபங்கன்' என்கிற தேவாரப்பாடல் ஒலிக்க! "அரசாள்வர் ஆணை நமதே" என்ற வரிகள் மிகுந்தொலிக்க அந்தச் செங்கோல் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது.(10)
ஆகஸ்ட் 14 ந்தேதி இரவு 11 மணிக்கு இந்த பூஜைகள் நடந்து,அன்றிரவு சுதந்திரம் வழங்கப்பட்டதை அறிவித்த அடையாளமாக பண்டித நேரு செங்கோலை பெற்றுக் கொண்டார் என அனைத்து ஆங்கில பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.(11)
இந்த தகவலை உறுதி செய்யும் விதம் 31 - 1 - 1954 ம் வருடம்,திருவாவடுதுறை ஆதீனத்தில் 21 வது குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமண்ய தேசிகரால் துவங்கி வைக்கப்பட்ட திருமந்திர மாநாட்டின் நான்காவது நாள் நிகழ்வில் அன்றைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.வேங்கடசாமி நாயுடு கலந்து கொண்டு பேசினார்..(12)
வேங்கடசாமி நாயுடு அவர்கள் 3 - 2 - 1954 அன்று மாலை திருமந்திர மாநாடு பற்றியும்,திருவாவடுதுறை ஆதீன சமய மற்றும் தேசப்பணிகளை பற்றி வியந்து போற்றி பேசியுள்ளார்.அவர் பேசியதாவது..👇(13)
மேற்கண்ட உரையில் அறநிலைத்துறை அமைச்சர் வேங்கடசாமி நாயுடு அவர்கள் மிகத்தெளிவாக நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதையும்,அந்த செங்கோலை வைத்துதான் தேசத்தை வழிநடத்துகிறோம்,நீதிப்பரிபாலனம் செய்கிறோம்.எனவே,அது சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலையும் முன் வைக்கிறார்.(14)
பாரதநாடு ரிஷிகளாலும்,முனிவர்களாலும்,சித்த புருஷர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.எந்த கேடும் நமை வீழ்த்தாமல் தடுக்க கேடயமாக இருப்பது நமது ஆன்மீக அருட்கொடையே..(15)
ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்த அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் அதன் பின் எங்கே போனது எனத் தெரியாமலே இருந்தது.(16)
ஆனால் தற்போது,பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கண்டறிந்து புதிய நாடாளுமன்றத்தை திறக்கும் 28 - 05 - 2023 அன்று அந்த செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் நமது ஆதீனங்கள் வழங்குவார்கள் என அறிவிப்பு வந்துள்ளது.(17)
இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அறிவித்திருப்பது சிறப்பு..(18)
பாரதநாட்டின் சுதந்திரத்திற்கு அடையாளமாக இருந்த 'செங்கோல்' திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது என்பதும்,அந்த செங்கோல் பாரதத்தின் பண்பாட்டு மீட்சி நடக்கும் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் மீண்டும் புதிய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது என்பதும் நமக்குப் பெருமையே..(19)
காலனித்துவ அடிமைத்தனத்தையும்,அதன் நீட்சியென பரவும் குற்ற உணர்வுகளையும் உடைத்தெறிந்த பாரதிய அரசு,இந்த நிகழ்வை உலகம் சிறக்க கொண்டாடும்.நேருவின் இந்தியாவை விட மோடியின் இந்தியாதான் அந்தச் செங்கோலை தாங்க தகுதியானது..(20)
ஒரு நாள் அந்த ராஜாதிராஜ நரேந்திரன் வருவான்,அவன் கையிலே இந்த செங்கோல் மிளிரட்டும் என்ற தீட்சண்யத்திலேதான் ராஜாஜி அன்று இதை செய்திருப்பார் எனக் கருதத்தோன்றுகிறது..
"அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே..!"
ஹர ஹர!
ஜெய்ஹிந்த்! 🇮🇳🇮🇳(21)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.