அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 27, 2023, 11 tweets

#கல்வி_வரம்_அருளும்_ஆலயங்கள்
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.

தேனி வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்

இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.

நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.

சென்னை செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவ

மூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள

இன்னம்பூர் திருத்தல ஈசன் கல்வி வளம் சிறக்க அருள்புரிபவர். இவர் திருநாமம் எழுத்தறிநாதர்!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் கலைமகளுக்கென ஓர் ஆலயம் உள்ளது. அந்த சரஸ்வதி ஞான சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

கடலூர் மாவட்டம், திருவஹீந்திபுரம் தலத்தில் ஔஷதகிரியில் அருளும் ஹயக்ரீவ

மூர்த்தியை வணங்க, கல்வியில் முன்னேற்றம் பெறலாம்.

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த பீடத்தை தரிசித்தால் படிப்பு நன்றாக வரும்.

பாண்டிச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், பக்தர்களால் கல்வி, கலைகளில்

சிறக்க வைக்கும் மூர்த்தியாக வணங்கப்படுகிறார்.

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்தில் அருளும் கலைகளுக்கு எல்லாம் அதிபதியாகத் திகழும் ராஜமாதங்கியை வணங்கி வேண்டிட, கல்வியில் மேன்மை பெறலாம்.

சென்னை போரூர், மதனானந்த புரத்தில் உள்ள துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆலயத்தில் அன்ன வாகனம்

முன் நிற்க, சரஸ்வதி தனி சந்நதியில் அருள்கிறாள். இவளை வணங்கி, சகலகலாவல்லி மாலை துதியை பாராயணம் செய்ய அறிவுத்திறன் அதிகரிக்கும்.

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு முகமாய் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்தருளிய தட்சிணாமூர்த்தி கல்விச்
செல்வத்தை வாரியருளும்

வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறார்.

தஞ்சாவூரில் உள்ள கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயத்தில் தன் நாயகனான நான்முகனுடன் அருளும் சரஸ்வதியை தரிசிக்கலாம். இந்த சரஸ்வதியை மனமாற வணங்கி கல்வி வரம் பெறலாம்.

சென்னை பாடி திருவலிதாயநாதர் ஆலய குருபகவான் ஞானம் வேண்டும் பக்தர்களுக்கு

தப்பாமல் ஞானம் தந்து காப்பார்.

சென்னை சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா ஆலயத்தில் அருளும் நீல சரஸ்வதி, கல்வியைப் பெருக்கி, வாக்கு வன்மையை அருள்பவள்.

முழையூரில் எட்டுப்பட்டை லிங்க வடிவில் அருளும் பரசுநாதரையும் அறிவுக் கண்களைத் திறக்க அருள் புரியும் ஞானாம்பிகையையும் தரிசித்து பக்தர்கள்

கல்வி வரம் பெறுகின்றனர்.

வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கொலுவிருக்கும் சரஸ்வதியை தரிசிக்க
கல்வியில் சிறக்கலாம். இந்த அன்னை கையில் வீணை இல்லை என்பது தனிச் சிறப்பு.

ஆந்திர மாநிலம் பாஸர் எனுமிடத்தில் சரஸ்வதிக்கென்று தனிக்கோயில் உள்ளது. இந்த சரஸ்வதி வரப்பிரசாதியாக

மாணவர்களுக்கு அருள்கிறாள்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling