Decoding Threadists Profile picture

Jun 3, 2023, 11 tweets

ராஜேந்திர சோழன் வங்காள விரிகுடாவை ஏரியாக்கி குமரி முதல் இன்றைய கல்கத்தாவின் ஒரு பகுதியான தாமரலிப்தி வரை அரசாண்டதன் நினைவாக காக்கிநாடா வரை உள்ள கடலோரப் பகுதி சோழமண்டலக் கடற்கரை எனப்படுகிறது.

அதன் ஆங்கில திரிபான கோரமண்டல் பெயரிலான ரயில் சிதைந்து கிடப்பது கண்ணீர் வர வைக்குது

சின்னா பின்னமாகி கிடக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய கோர விபத்து நடந்தது இல்லை. அதுவும் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இல்லை.
விபத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய ரயில்வே மந்திரி பழியை ஸ்டேஷன் மாஸ்டர் மேல் போட்டு பதவியை காப்பாற்றுகிறான்

கொடியாட்டும் கோமாளியோ, வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என நம்ப வைத்துக்கொண்டு திரிகிறான்.

கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக சாதாரண ரயில்கள் இயக்குவதை நிறுத்தி, ஹம்சபர், தேஜா, போன்ற A.C. ரயில்களை மட்டுமே இயக்கி வருகின்றனர்.

மொத்த ரயில்வே படையும்

பிரதமர் கொடியாட்டும் நிகழ்ச்சிக்காக ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு ஓடிக்கொண்டே இருந்ததில் தேசத்தின் உயிர்நாடியான கோரமண்டல், நவஜீவன், தாதர், GT போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விரைவு ரயில்கள் பல்லாயிரக்கணக்கான மக்களால் பிதுங்கி வழிந்து கொண்டே நகர்கின்றன

நடந்தது விபத்து அல்ல.
கோமாளி கொடியாட்ட கூஜா தூக்கி ஓடும் இந்திய ரயில்வே அடித்தள மக்கள் மீது நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்.

மன்மோகன் ஆட்சி வரை ரயில்வேக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் புதியதாக 100 ரயில்கள் இயக்கப்படும்.
குறைந்தது 20 ரயில் தென்னக ரயில்வே பெறும்

அதிலும் காங்கிரஸ் திமுக எம்பிக்கள் தத்தம் மாவட்டங்களுக்கு குறைந்தது ஒரு ரயிலாவது கொண்டு வந்து விடுவார்கள்.

ஆனால் இப்போதோ
இந்தியாவில் ரயில்வே துறை ஒன்று இருப்பதும் அதற்கு ஒரு மந்திரி இருப்பதும் இந்த விபத்தின் மூலமே உலகிற்கு தெரிய வந்திருக்கு.

எல்லாம் கோமாளி மயம்

விமானத்தில் போக பயப்படும் ஒரு பத்து பேருக்காக 130 கோடி செலவில் இயக்கப்படும் வந்தே பாரத் பதிலாக எத்தனை கோரமண்டல்/நவஜீவன் விட்டிருக்கலாம்?

திருச்சி -சென்னை 5.30 மணி நேரத்தில் அடையும் எத்தனை பல்லவன்/ வைகை இயக்கி இருக்கலாம்?

இந்த நாட்டுக்கு புல்லட் ரயில் தான் இப்ப கேடு😡

அகமதாபாத்தில் நாலு பில்லர் களை ஊன்றி விட்டு, மும்பைக்கு 50 கிலோமீட்டர் அப்பால் ஒரு பத்து கிலோமீட்டர் ஜல்லி மணலை கொட்டி விட்டு, 2026ல் புல்லட் ரயில் வருது என 9 வருஷமா பரப்புறான்.

இங்கோ 72 பேர் அமர வேண்டிய பெட்டியில் 300 பேர் பயணிக்கிறார்கள்.

உயிர் பலி அதிகரிப்புக்கு காரணம் இதுவே

அடித்தள மக்களை மந்தையாக்கி அட்சே தின், டெவலப்மென்ட் கிரவுத் போன்ற வெற்றுக்கோசங்களால் ஒன்பது ஆண்டு உருட்டி கொண்டிருக்கும் இந்த முட்டாளுக்கு ஓரளவு மனசாட்சி இருந்தாலும் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து,
ரயில்வே மந்திரி மீது கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்

@magorarasigan @DrJayanThiyagu @job_anbalagan @JohnyBravo_2 @its_me_King1 @Pugal0405gmail4 @IlovemyNOAH2019 @vaalvaan @vasantalic @karikaalan555 @kparanjothi1976 #CoromandelExpress விபத்தில் மனதை நெகிழ வைத்தது, இரத்த தானம் செய்ய பாலசோரில் வரிசையில் நிற்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் தான்

பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தகவலை விட அதிகமாக இருக்கும் என்று களத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்

உயிரிழந்தவர் உறவினர்கள் குடும்பத்தினருக்காக,

@magorarasigan @DrJayanThiyagu @job_anbalagan @JohnyBravo_2 @its_me_King1 @Pugal0405gmail4 @IlovemyNOAH2019 @vaalvaan @vasantalic @karikaalan555 @kparanjothi1976 @CRammurthi @raghur1906 @Raja78322960 @robert_ruban @imgsthana @Saimanrajs @SaThi_Ya_PrIyAn @Stalinkumari @vedhaalan சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து இன்று இரவு (3/6/23) புபனேஷ்வருக்கு சிறப்பு ரயில் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயணம் செய்வோர் 044- 25330952, 044-25330953 & 044-25354771 என்ற உதவி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு ரயிலின் தற்காலிக நேரம் இன்று 18.30 மணி.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling