ராஜேந்திர சோழன் வங்காள விரிகுடாவை ஏரியாக்கி குமரி முதல் இன்றைய கல்கத்தாவின் ஒரு பகுதியான தாமரலிப்தி வரை அரசாண்டதன் நினைவாக காக்கிநாடா வரை உள்ள கடலோரப் பகுதி சோழமண்டலக் கடற்கரை எனப்படுகிறது.
அதன் ஆங்கில திரிபான கோரமண்டல் பெயரிலான ரயில் சிதைந்து கிடப்பது கண்ணீர் வர வைக்குது
சின்னா பின்னமாகி கிடக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய கோர விபத்து நடந்தது இல்லை. அதுவும் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இல்லை.
விபத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய ரயில்வே மந்திரி பழியை ஸ்டேஷன் மாஸ்டர் மேல் போட்டு பதவியை காப்பாற்றுகிறான்
கொடியாட்டும் கோமாளியோ, வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என நம்ப வைத்துக்கொண்டு திரிகிறான்.
கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக சாதாரண ரயில்கள் இயக்குவதை நிறுத்தி, ஹம்சபர், தேஜா, போன்ற A.C. ரயில்களை மட்டுமே இயக்கி வருகின்றனர்.
மொத்த ரயில்வே படையும்
பிரதமர் கொடியாட்டும் நிகழ்ச்சிக்காக ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு ஓடிக்கொண்டே இருந்ததில் தேசத்தின் உயிர்நாடியான கோரமண்டல், நவஜீவன், தாதர், GT போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விரைவு ரயில்கள் பல்லாயிரக்கணக்கான மக்களால் பிதுங்கி வழிந்து கொண்டே நகர்கின்றன
நடந்தது விபத்து அல்ல.
கோமாளி கொடியாட்ட கூஜா தூக்கி ஓடும் இந்திய ரயில்வே அடித்தள மக்கள் மீது நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்.
மன்மோகன் ஆட்சி வரை ரயில்வேக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் புதியதாக 100 ரயில்கள் இயக்கப்படும்.
குறைந்தது 20 ரயில் தென்னக ரயில்வே பெறும்
அதிலும் காங்கிரஸ் திமுக எம்பிக்கள் தத்தம் மாவட்டங்களுக்கு குறைந்தது ஒரு ரயிலாவது கொண்டு வந்து விடுவார்கள்.
ஆனால் இப்போதோ
இந்தியாவில் ரயில்வே துறை ஒன்று இருப்பதும் அதற்கு ஒரு மந்திரி இருப்பதும் இந்த விபத்தின் மூலமே உலகிற்கு தெரிய வந்திருக்கு.
எல்லாம் கோமாளி மயம்
விமானத்தில் போக பயப்படும் ஒரு பத்து பேருக்காக 130 கோடி செலவில் இயக்கப்படும் வந்தே பாரத் பதிலாக எத்தனை கோரமண்டல்/நவஜீவன் விட்டிருக்கலாம்?
திருச்சி -சென்னை 5.30 மணி நேரத்தில் அடையும் எத்தனை பல்லவன்/ வைகை இயக்கி இருக்கலாம்?
இந்த நாட்டுக்கு புல்லட் ரயில் தான் இப்ப கேடு😡
அகமதாபாத்தில் நாலு பில்லர் களை ஊன்றி விட்டு, மும்பைக்கு 50 கிலோமீட்டர் அப்பால் ஒரு பத்து கிலோமீட்டர் ஜல்லி மணலை கொட்டி விட்டு, 2026ல் புல்லட் ரயில் வருது என 9 வருஷமா பரப்புறான்.
இங்கோ 72 பேர் அமர வேண்டிய பெட்டியில் 300 பேர் பயணிக்கிறார்கள்.
உயிர் பலி அதிகரிப்புக்கு காரணம் இதுவே
அடித்தள மக்களை மந்தையாக்கி அட்சே தின், டெவலப்மென்ட் கிரவுத் போன்ற வெற்றுக்கோசங்களால் ஒன்பது ஆண்டு உருட்டி கொண்டிருக்கும் இந்த முட்டாளுக்கு ஓரளவு மனசாட்சி இருந்தாலும் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து,
ரயில்வே மந்திரி மீது கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது