அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jun 5, 2023, 15 tweets

#குறுங்காலூஸ்வரர்_கோவில் கோயம்பேடு (கோ - பசு, அயம் - இரும்பு வேலி, பேடு - காப்பிடம், வால்மீகி காலத்தில் பசுகள் சம்ரக்‌ஷணை செய்யும் இடமாக இருந்தது)
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே (நாதெள்ளா திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் இருந்து பிரியும் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு

தூரத்தில் இருக்கிறது கோயில். இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் 4 அங்குல உயரம் கொண்ட பாணம். லவனும் குசனுக்கு ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அறம் வளர்த்த நாயகி பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4

கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் வீற்றிருக்கிறார். சீதையை விட்டுவிட்டு வருமாறு இராமர் ஆணையிட இலட்சுமணர் சீதையை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதையை திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த

வால்மீகி முனிவர், அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். வால்மீகி ஆசிரமத்தில் லவ- குசர்களை சீதாவிற்கு பிறந்தனர். வால்மீகியின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க்கப் பட்டு, சிறந்த கல்விமான்களாகவும் வில் வித்தையில் சிறந்தும் விளங்கினர். இராமர் தன் தந்தை எனத் தெரியாமலேயே, லவ-குசர்

வளர்ந்தனர். அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க இராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். இராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி

முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். இதை அறிந்ததும் படை வீரர்களுடன் இலட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டி
அடித்தனர். இதனால் வெகுண்டு எழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு

வந்தார். அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க

ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர். அதற்கு வால்மீகி முனிவர், “சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்” என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள்

உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர். இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு #குசலவபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில்

உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது. அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். சீதை மேடிட்ட வயிறுடன் தலை முடி கோடாலி முடிச்சுடன் காட்டில் வாழும் கர்பவதியாகக் காட்சி அளிக்கிறாள். இங்கு வந்து சுக

பிரசவத்துக்கும், குழந்தை பேறு வேண்டியும் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். நேர்த்திக் கடனாக சீதைக்கு சீமந்தம் செய்து அழகு பார்க்கின்றனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.

இப்படி கோயம்பேடு பகுதியே இராமாயண காவியத் தொடர்பு உடையதாகவும், வால்மீகி ஆசிரமமாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்குவதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக்கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக

விளங்குகிறது. இரண்டு ஆலயங்களுக்கும் பொதுவாக ஒரே திருக்குளம் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இந்தக் குளத்தையும் லவ குசர்கள் தான் வெட்டியாகக் கூறப்படுகிறது. #குசலவதீர்த்தம் அருகிலேயே அனுமார் தனிக் கோவிலில் அருள் புரிகிறார். குறுங்காலீஸ்வரர் கோவிலில் ஒரு சனிப் பிரதோஷம், ஒரு கோடி

பிரதோஷத்துக்கு சமம் எனவும், கோயம்பேடு குறுங்கலீஸ்வரர் கோயிலில் தான் முதன் முதலாக பிரதோஷ வழி பாடு ஆரம்பித்ததாகவும் கூறுகிறார்கள். இதை ‘ஆதி பிரதோஷத் தலம்’ என்பார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் இங்குள்ள குறுங்காலீஸ்வரரை தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தின வேளையில் தரிசித்த பலன் கிடைக்கும். ஒரு

சனிப் பிரதோஷத்தன்று ஈஸ்வரனை தரிசித்தால் ஒரு கோடி பிரதோஷத்தை தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். சென்னையில் இருப்பவர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோவில்கள் இவை. வெளியூரில் இருப்பவர்கள் சென்னை வரும்போது மறக்காமல் சென்று தரிசித்து வேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling