அன்பெழில் Profile picture
Jun 5, 2023 15 tweets 5 min read Read on X
#குறுங்காலூஸ்வரர்_கோவில் கோயம்பேடு (கோ - பசு, அயம் - இரும்பு வேலி, பேடு - காப்பிடம், வால்மீகி காலத்தில் பசுகள் சம்ரக்‌ஷணை செய்யும் இடமாக இருந்தது)
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே (நாதெள்ளா திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் இருந்து பிரியும் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு Image
தூரத்தில் இருக்கிறது கோயில். இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் 4 அங்குல உயரம் கொண்ட பாணம். லவனும் குசனுக்கு ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அறம் வளர்த்த நாயகி பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 Image
கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் வீற்றிருக்கிறார். சீதையை விட்டுவிட்டு வருமாறு இராமர் ஆணையிட இலட்சுமணர் சீதையை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதையை திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த Image
வால்மீகி முனிவர், அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். வால்மீகி ஆசிரமத்தில் லவ- குசர்களை சீதாவிற்கு பிறந்தனர். வால்மீகியின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க்கப் பட்டு, சிறந்த கல்விமான்களாகவும் வில் வித்தையில் சிறந்தும் விளங்கினர். இராமர் தன் தந்தை எனத் தெரியாமலேயே, லவ-குசர் Image
வளர்ந்தனர். அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க இராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். இராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி
முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். இதை அறிந்ததும் படை வீரர்களுடன் இலட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டி
அடித்தனர். இதனால் வெகுண்டு எழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு
வந்தார். அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க
ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர். அதற்கு வால்மீகி முனிவர், “சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்” என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள்
உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர். இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு #குசலவபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் Image
உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது. அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். சீதை மேடிட்ட வயிறுடன் தலை முடி கோடாலி முடிச்சுடன் காட்டில் வாழும் கர்பவதியாகக் காட்சி அளிக்கிறாள். இங்கு வந்து சுக ImageImage
பிரசவத்துக்கும், குழந்தை பேறு வேண்டியும் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். நேர்த்திக் கடனாக சீதைக்கு சீமந்தம் செய்து அழகு பார்க்கின்றனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. Image
இப்படி கோயம்பேடு பகுதியே இராமாயண காவியத் தொடர்பு உடையதாகவும், வால்மீகி ஆசிரமமாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்குவதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக்கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக
விளங்குகிறது. இரண்டு ஆலயங்களுக்கும் பொதுவாக ஒரே திருக்குளம் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இந்தக் குளத்தையும் லவ குசர்கள் தான் வெட்டியாகக் கூறப்படுகிறது. #குசலவதீர்த்தம் அருகிலேயே அனுமார் தனிக் கோவிலில் அருள் புரிகிறார். குறுங்காலீஸ்வரர் கோவிலில் ஒரு சனிப் பிரதோஷம், ஒரு கோடி
பிரதோஷத்துக்கு சமம் எனவும், கோயம்பேடு குறுங்கலீஸ்வரர் கோயிலில் தான் முதன் முதலாக பிரதோஷ வழி பாடு ஆரம்பித்ததாகவும் கூறுகிறார்கள். இதை ‘ஆதி பிரதோஷத் தலம்’ என்பார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் இங்குள்ள குறுங்காலீஸ்வரரை தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தின வேளையில் தரிசித்த பலன் கிடைக்கும். ஒரு Image
சனிப் பிரதோஷத்தன்று ஈஸ்வரனை தரிசித்தால் ஒரு கோடி பிரதோஷத்தை தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். சென்னையில் இருப்பவர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோவில்கள் இவை. வெளியூரில் இருப்பவர்கள் சென்னை வரும்போது மறக்காமல் சென்று தரிசித்து வேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 22
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்Image
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம் Image
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
Read 30 tweets
Jul 20
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டுImage
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, Image
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
Read 25 tweets
Jul 20
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர், Image
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்Image
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது. Image
Read 18 tweets
Jul 19
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்றImage
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் Image
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை Image
Read 16 tweets
Jul 19
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன் Image
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் Image
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் Image
Read 21 tweets
Jul 18
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3 Image
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(