அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jun 6, 2023, 7 tweets

#காஞ்சி_வரதராஜப்_பெருமாள்
வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம் திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் பாஞ்சராத்திரம்

ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1053ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். 14ஆம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும்

அமைக்கப்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர் ஸ்ரீ ஸ்ருங்கிபோர் எனும் முனிவரின் குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை

கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார். பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சிபுரம் சென்று வராதராஜ பெருமாளை தரிசித்தால் மன்னிப்பு உண்டு என்று கூறினார். பிறகு இருவரும் சப்த புரிகளையும் சுற்றி வந்து விட்டு காஞ்சீபுரம் சென்று வரதராஜப் பெருமாளை

தரிசித்து மோட்சம் கேட்டு வேண்டிக் கொண்டனர். பெருமாள் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்ல வேண்டும் என்றால் உங்கள் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருந்து, என்னை தரிசிக்கவரும் பக்தர்கள் உங்களையும் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று அருளினார். சூரியன் சந்திரன் இதற்கு

சாட்சி என்று மோட்சம் அளித்தார். ஆகையால் இந்த தரிசனம் இன்றும் முக்கியமானதாகும். #வையமாளிகை_பல்லி தரிசனம் சிறப்பானது. (தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது.) இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்பட கூடிய சகல தோஷங்களும்

பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.இன்றும் பக்தர்கள் பெருமாளை தரிசித்து பின்னர் பிரகாரம் சுற்றி வரும்போது இந்த பல்லிகளையும் தரிசித்து வருகின்றனர். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling