#காலகாலேஸ்வரர்_கோவில் கோயம்புத்தூர். 1,000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. இங்குள்ள குரு பகவான் உலகிலேயே மிக உயரமானது. இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் வித விதமான அபிஷேகம் செய்து பூஜை
செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச் சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை
வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம்
எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார். அப்போது, நுரைபொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிடித்து வைத்தார். உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் (யமன்) இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து
வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பதால் இங்கு சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.
திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப்
பெருமை பெற்றாற்போல இத்திருத்தலம் திருக்கடையூருக்கு இணையாகக் கூறப்படுகின்றது. காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன். . கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய
நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார். கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் #கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் #திருநீற்றுமேடு என்று வழங்கப் படுகிறது. இங்குள்ள அம்பாள் பெயர் கருணாகரவல்லி. கொடிமரத்திற்கு அடுத்து
வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.
சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன்
பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில்
பிரம்மாவும் உள்ளார். இக்கோயிலின் உள்ளே #கரிவரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.
கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும்
தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. கோவையில் கோவில்பாளையத்தில் உள்ள ஈச்வரனை சென்று தரிசிப்போம். ஆசி பெறுவோம்.
காலகாலேசுவராய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.