#கீழப்பாவூர்_நரசிம்மர்_கோவில்
இந்தியாவில் உள்ள நரசிம்மர்
கோவில்களில் அபூர்வமானதும்,
வேறெங்கும் காண இயலாத பல்வேறு
சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, அவர் நாமத்தை சொன்னாலே போதும், ஓடோடிவந்து
காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் #பொய்கையாழ்வார். முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர். அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பி விட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச்
சுற்றிச் சுற்றியே வந்ததாம். கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக்
காக்க வேண்டுமெனத் தவித்தார் திருமால். அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பிவிட்டார்
ஆகவே மீண்டும் பூலோகம் செல்ல வேண்டும் என்று கருதினார் எம்பெருமான். அதே நேரத்தில் இங்கு பூலோகத்தில், சில ரிஷிகளுக்கு அவதார நரசிம்மரின் உக்கிர சொரூபத்தைத் தரிசிக்கும் ஆவல் மேலோங்கியது. தவம் புரிந்து தானே திருமாலை தரிசிக்க முடியும். எனவே, காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர்
ஆகியோர் கடுந்தவம் புரியத் தொடங்கினர். ரிஷிகளின் தவத்திற்கு மனமிரங்கினார் மாலவன். பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந்தால்
நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக்
கூறினாராம் மகா விஷ்ணு. ரிஷிகளும் அவ்வாறே செய்ய, ரிஷிகளின் தவபூமி வைகுண்டமாக மாறியது. காரணம் மகா உக்கிரமூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் நரசிம்மர், தேவியுடன் காட்சி கொடுத்தார்.
அர்ச்சாவதாரத் திருமேனியில் எழுந்து அருளினார். இரணியனை தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில்
நரசிம்மர் காட்சி கொடுக்கும் கீழப்பாவூரை #தட்சிண_அகோபிலம் என்று போற்றுவர். திருநெல்வேலி தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ளது பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ளது கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர்
#க்ஷத்திரிய_சிகாமணி_நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது இவ்வாலயம். தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது என்கிறார்கள். இத்தல பெருமாளுக்கு #முனைஎதிர்_மோகர்_விண்ணகர் என்னும் பெயர் உண்டு. முனைஎதிர் மோகர்’
என்பதற்கு போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர் என்பது பொருளாகும். 16 கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிரசாதி. வேண்டிய வரங்களை அருள்பவர். செவ்வாய்க் கிழமைகளில் சுவாமியை தரிசித்து, நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அதாவது, தாம்பூலத்
தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய் நிரப்பி, தீபம் ஏற்றி வைத்து, 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும். மன்னர்கள் கோயில் எழுப்பி இந்த நரசிம்மரை ஆராதிக்கத் தொடங்கினர். புராணப் பெருமை பெற்ற பூலோக வைகுண்டமாக விளங்கும் இந்த
புண்ணிய ஸ்தலம்தான் தற்போதைய கீழப்பாவூர் ஆகும். இங்கே உக்கிரமாக இருக்கும் நரசிம்மரை சாந்தப் படுத்த, அவரது சன்னதிக்கு எதிரே மகாலட்சுமி அம்சமாகச் சதுர வடிவில் தெப்பக் குளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கங்கா நர்மதா சம்யுக்த நரசிம்ம புஷ்கரணி என்பது திருநாமம். நரசிம்மர் அவதரித்த
சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் இங்கே விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் 16 வகை மூலிகைகளால் நரசிம்மரின் மூல மந்திர ஹோமமும் திருமஞ்சனமும் நடைபெறும். 16 திருக்கரங்களுடன் காட்சி தரும்
நரசிம்மர் கோயில்கள் 3 இடங்களில்
உள்ளன. ராஜஸ்தான் மாநிலம், புதுச்சேரி அருகே
சிங்ககிரி மற்றும் கீழப்பாவூர். இத்தலத்தில் நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமிதேவியை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதிகம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து சிங்க கர்ஜனை சத்தம் கேட்கும். நரசிம்மருக்கு இளநீர், பால், பானகம் ஆகியவை நைவேத்தியம் செய்து
வழிபட வேண்டும். நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும்.
தரிசன நேரம்
காலை 07.30 - 10.30
மாலை 05.00 - 07.30
கோவில் முகவரி
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி -627806.
+91-9442330643
ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.