அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jun 17, 2023, 10 tweets

#நமது_கலாச்சாரத்தை_பின்பற்றுவோம்

#நமஸ்காரம்
நமஸ்காரம் செய்வது இந்தியர்களின் உன்னதமான சைகையாகும். மரியாதை அளிக்கும் சைகை.

#மெட்டி
திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவதை விட்டுவிட வேண்டாம்.

#பொட்டு_விபூதி_குங்குமம்_திருமண்_சந்தனம்
ஒவ்வொரு பெண்ணும் ஆணும் நெற்றியில் ஏதேனும் ஒரு

சின்னம் அணிவது நம் இந்து தர்மம். பாழ் நெற்றியாக ஆணும் பெண்ணும் இருப்பது பாவம்.

#கோவில்_மணிகள்
கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை. கோவில் மணியை செய்ய

ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். மணி ஒலிக்கும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். மணி அடித்த அடுத்த கணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் நீடிக்கும். மணி ஒலி நம்மை வெறுமையாக்கி மெய்மறக்கச் செய்யும். கோவில்

மணியோசையை நின்று கேட்போம்.

#துளசிவழிபாடு
இந்தியாவில் உள்ள முக்கால்வாசி இந்துகளின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அதனை

தொடர்ந்து செய்வோம்.

#அரசமரம்
பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். புத்தர் ஞானம் அடைந்ததும் ஓர் அரச மரத்தின் அடியில் தான். பல கோவில்களில் இம்மரமே தல விருட்சமாக

அமைந்துள்ளது. மற்ற மரங்களை விட அதிக பிராண வாயுவைத் தரும் மரம் இது. போற்றி பாதுகாப்போம்.

#உணவருந்தியபின்_இனிப்பு
இந்தியாவில் காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது

காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ணுவதை தொடர்வோம்.

#கைகளில்_மருதாணி
திருமணங்கள், மற்றும் சுப நிகழ்ச்சிகளில் மருதாணி போட்டுக் கொள்ளும் வழக்கத்தைத் தொடர்வோம். அழகிற்கு, அழகு, குளிர்ச்சிக்குக் குளிர்ச்சி!

#தரையில்_அமர்ந்து_உண்ணுவது
நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன தோரணையில் அமர்ந்து உண்ணுவதைத் தொடர்வோம். இது மேஜை நாற்காலியில் அமர்ந்து உண்ணுவதை விட மிக நல்லது.

#காலையில்_சூரியனை_வழிபடுதல்
விடியற்காலையில்

சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துககளிடம் உள்ளது. விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்ணுக்கும் நன்மை, விடி காலையில் எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. கடைபிடிப்போம்.

#கோவிலை_வலம்_வருதல்
வெறும் பாதத்தில் மேடும் பள்ளமுமாக இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் பழக்கத்தைக்

கைவிட வேண்டாம். பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வர, புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling