#தொல்லியல் ஆர்வலர்களுக்கு வணக்கம்!
தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த மக்களால் குகையின் சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள், செதுக்கு ஓவியங்கள் மற்றும் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் பற்றிய தனித்துவமான தகவல்கள் ஒரு நீள் பதிவாக #உங்களுக்காக!
1) பாறை ஓவியம் இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது
கற்கருவிகளால் பாறையின் மேல் செதுக்குவது "கற்பாறைச் செதுக்கு ஓவியம்"
குச்சியினால் மஞ்சட்காவி மண் கலந்து சிவப்பு/வெள்ளை வண்ணங்களால் பாறைகளில் வரைவது "கற்பாறை வரைவோவியம்"
சிவப்பு நிறம், வெள்ளை நிறத்தைவிட பண்டைக்காலத்தைச் சேர்ந்தது!
2) இந்தியாவிலுள்ள மூன்று கற்பாறைச் செதுக்கு ஓவிய இடங்களுள் தமிழ்நாட்டில் ஒன்றான #விழுப்புரம் மாவட்ட #பெருமுக்கல் ஓவியம் இது!
இச்செதுக்குச் சிற்பங்கள் பல்வேறு மக்களால் பல்வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளன!
இந்த உருவங்களை, இராமாயணத்துடன் சிலர் ஒப்பு நோக்கிக் கூறியுள்ளனர்!
3) #நீலகிரி மாவட்ட #இடுஹட்டி பாறை ஓவியத்தில் வரையப்பட்டுள்ள #சூரியன் #நட்சத்திரம் #நிலா நமது மூதாதையர் வானுலக வழிபாட்டினை கற்றாய்ந்து வழிபட்டுள்ளதைக் காட்டுகிறது!
வரலாற்றுக் காலத்திற்கு முந்தையக் காலத்திலேயே சோதிடர், வானியல் நிபுணர், மதகுரு இருந்திருக்கக்கூடும் என காட்டுகிறது!
4) #நீலகிரி மாவட்டம் #கோத்தகிரி கீழே #வெள்ளெரிக்கொம்பை என்னுமிடத்தில் மலைகளுக்குள்ளே அமைந்துள்ள பாறை முகப்பில் உள்ளது #எழுத்துப்பாறை!
வழிபாட்டின்போது செய்யப்படும் யாகம் அல்லது, வேள்வியினைக் காட்டும் சமய ஓவியமாக இக்காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது!
5) #விழுப்புரம் மாவட்ட #கீழ்வாலை பாறை ஓவியம்! இதில் #இடுகுறிகள் காணப்படுகின்றன.
வரலாற்று ஆய்வு வல்லுநர்கள் சிலர் இக்குறியீடுகளை சிந்துசமவெளி எழுத்துக்கள் (ம) குறியீடுகளின் முன்னோடியெனவும், இக்குறியீடுகளிலிருந்தே "பிராமி கைப்படியெழுத்து" பின்னர் வளர்ச்சியடைந்தது என கூறுகின்றனர்!
6) வெண்மை நிற பாறை ஓவியங்கள்!
இவை நாம் முன்னால் பார்த்த #நீலகிரி மாவட்ட #வெள்ளெரிக்கொம்பை விட சற்றே பிற்காலத்தைச் சார்ந்ததாகும்!
இதில் செம்மறியாடு (ம) மனித உருவம் தடியுடன் காணப்படுகின்றன.
இம்மனித உருவம் ஆடுகளை மேய்க்கும் ஆட்டிடையன் உருவமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது!
7) #விழுப்புரம் மாவட்டம் #ஆலம்பாடி பகுதியில் காணப்படும் #ஊடுகதிர்
X-RAY ஓவியங்கள்!
விலங்குகளின் உட்புற உறுப்பு தெரியும் வண்ணம் அமைந்துள்ள பாறை ஓவியங்கள்
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தமிழர்கள் #உடற்கூற்றமைப்பு #Anatomical குறித்து அறிந்திருந்தனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
8) வரிவடிவ அமைப்புகளைக் காட்டும் இப்பாறை ஓவியம் இருப்பது #வேலூர் மாவட்டம் #சென்ராயன்பள்ளி
ஓவியம் வெள்ளை வண்ணதில் தீட்டப்பட்டுள்ளதால் பிற்காலத்தைச் சார்ந்தவை!
இதிலுள்ள கூட்டல் குறி வளமையின் சின்னமாக #வெள்ளெரிக்கொம்பை #நீலகிரி மற்றும் #ஹரப்பா நாகரீக கால இடங்களில் காணப்படுகின்றது!
ஓவியத்தின் அடியில் இரு பறவைகளும், மையத்தில் ஒரு மனித உருவமும் உள்ளது!
இந்த் வரைவுகளை பிற்காலத்தில் வேதகாலத்து வடிவியல் சக்ர வடிவங்களின் அமைப்புக்கு முன்னோடியாக இருக்கலாம்!
#சென்ராயன்பள்ளி
9) செந்நிறமி ஓவிய வரைவு!
இது பறக்கும் பறவையின் உருவினை உயிரோட்டமாகக் காட்டுகிறது!
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய #தமிழர்கள் கண்ணால் காணும் காட்சிகளைப் பதிவு செய்யும் ஓர் முயற்சியாக அமைந்துள்ளது!
#விழுப்புரம் மாவட்டம் #ஆலம்பாடி!
10) #விழுப்புரம் மாவட்டம் #ஆலம்பாடி பாறை ஓவியம்!
ஒரு பறவையின் உள்ளுறுப்புத் தோற்றமாக இருக்கக்கூடும்!
பறவையின் உள்ளுறுப்பு அமைப்புத் தோற்றத்தின் #ஊடுகதிர் ஒவியம் X-ray இங்கு வரையப்பட்டுள்ளது!
11) இங்கு நாம் காணும் செந்நிறமி வண்ண பாறை ஓவியமும் #விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடியைச் சார்ந்ததாகும்!
வரையப்பட்ட பறவைகள், விலங்குகளின் தொடர்ச்சியினையே இது குறிக்கின்றது!
மையத்தில் பறக்கும் பறவையின் உருவம் பெரிதாக தோற்றமளிக்கிறது!
12) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண மூன்று ஓவிய உருவங்கள்!
மதகுருவால் அழைத்துச் செல்லப்படும் ஒரு ஆண், பெண் உருவங்கள்! நடுவில் உள்ள மத சமய குருவின் தலையில் இரு சிறகுகள்!
அவர் தன் கையால் ஒரு நபரை அழைத்துச் செல்ல, மற்றொருவர் அதனைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்!
இக்காட்சி மனிதன் அல்லது விலங்கின் உயிர்ப்பலி அல்லது வழிபாட்டு சடங்காகவோ இருக்கக்கூடும்!
13) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண பாறை ஓவியம்!
ஏதோ ஒன்றின் மேல் ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்துள்ளனர்!
அது விலங்காகவோ அல்லது கல்மேடையாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
14) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண பாறை ஓவியம்!
வலதுபுறமுள்ள இரு வடிவியல் அமைப்புகள், இரு கூட்டல்குறிகள் எங்ஙனம் இணைந்து வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மங்கலக் குறி (சுவஸ்திகை), அல்லது வளமைச் சின்னத்தை உருவாக்கின என்பதைக் காட்டுகிறது!
15) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண பாறை ஓவியம்!
இக்காட்சி அலகுபோன்ற மூக்கமைப்புடன் கூடிய முகத் தோற்றமுடைய நான்கு உருவங்கள் கைக்கோர்த்து நடனமாடும் காட்சியினைக் காட்டுகிறது!
16) #நீலகிரி மாவட்ட #இடுஹட்டி ஓவியத்தில் சூரியகாந்தி போன்றதொரு பூ உள்ளது! இதனை தென்னிந்தியாவில் பொதுவாகக் காணப்படும் கோலம் வடிவியல் அமைப்பு எனக் கூறலாம்.
நீலகிரியில் சூரியகாந்திப் பூ வளர்வது இல்லை. ஆதலால், இது சமவெளியிலிருந்து மக்கள் நீலகிரி மலைக்கு இடம்பெயர்ந்ததை குறிக்கின்றது
17) இந்த #நீலகிரி மாவட்ட #இடுஹட்டி பாறை ஓவியம் #சிந்துசமவெளி கைப்படியெழுத்தின் முன்னோடியாக வல்லுநர்கள் கூறுகின்றனர்!
இடதுபக்க ஓரத்தின் மேல்புறத்தில் பழமையான திரிசூல வடிவ உருவமும், கீழ்ப்புற வலதுகை மூலையில் சைவச் சின்னமான மூன்று பட்டை விபூதியினைக் காணலாம்!
18) #நீலகிரி மாவட்ட #வெள்ளெரிக்கொம்பை ஓவியத்தின் காட்சி!
மேல்புற வலது கை மூலையில் சமயகுரு பலிபீடத்திற்குச் செல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது!
இதன்மேல் "வளமைச் சின்னமாக" ஓர் கூட்டல் குறி காணப்படுகிறது!
வளமை பெற யாகத்தில் ஒர் மனிதனை பலிகொடுக்க அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது!
19) #வெள்ளெரிக்கொம்பை
வெண்நிறமி ஓவியம்! இதிலிருக்கும் ஓர் உருவத்தை 6வது படத்துடன் ஆடு, செம்மறியாட்டுடன் தொடர்புபடுத்திக் காண வேண்டும்
இரு உருவங்களை ஆண் பெண் என சிலர் வலியுறுத்துகின்றனர். இவற்றை இரு நட்சத்திரங்களை கொண்ட #அருந்ததி என அழைக்கப்படும் #விண்மீன்குழு எனவும் விளக்கலாம்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.