திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். #அவிநாசி#தீண்டாமை#untouchability
அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இது, அப்பட்டமான தீண்டாமையை கடைப்பிடிக்கும் சட்ட விரோத, சமுதாய விரோத நடவடிக்கையாகும்.
சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து
இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடைபெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன.
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் இதுபோல எதுவும் நிகழாவண்ணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், இத்தகைய பூஜை, சடங்குகள் நடக்காதெனவும் உறுதி கூறியுள்ளதை ஏற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது.
தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டு - நன்றி!
நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், நீண்ட நாள் - மாணவப் பருவந்தொட்டு, கொள்கை, லட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும், எளிமையும், தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்
நேற்று (27.7.2021) நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய தொண்டற அங்கீகார விருதான ‘‘தகைசால் தமிழர் விருது’’ - முதல் விருதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16
ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, 3/16
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்!
மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.