யுத்தம் என்று வந்தால் வியூகம் முக்கியம்,படைகளின் பலத்தினை விட வியூகம் மகா முக்கியம். எதிரியின் வியூகத்தை நொடிபொழுதில் அறிந்து,தங்கள் வியூகத்தில் இறங்கி,
வியூகம் என்பது பெரிய விஷயமல்ல, எதிரியின் பலமறிந்து திட்டமிடுவது, திட்டமிட்டது போல போரிடுவது. ஆனால் கவனமாக செய்யவேண்டும்,கொஞ்சம் பிசகினாலும் கழுத்திற்கு கத்தி
மிக எளிதாக அந்நாட்டை வென்றான் அலெக்ஸாண்டர்,
எந்த மன்னரிடம் இல்லாத விஷேஷ குணம் அலெக்ஸாண்டரிடம் இருந்தது, தோற்ற நாட்டை அவன் அடிமை போல் நடத்துவதில்லை.
தன்னை ஏற்றுகொண்டால் அவர்களை மாசிடோனியா மக்களை போலவே சுதந்திரமாக நடத்தினான்,அந்த வீர்களை தன் படையிலே இணைத்தான்,
ஆனால் அடிபணிய மறுத்தால் அலெக்ஸாண்டரின் கோரமுகம் தெரியும்
சிர்மஸ் மன்னனை அலெக்ஸாண்டர் அடித்த அடியினை கண்ட பின்னாலும்,கிரேக்க வைகோ சத்தம் அடங்கவில்லை, "ஏ சிறுவனே,இது வீழா வீரம்,மண்டியிடா மானம்,
பாய்ந்து வந்தான் அலெக்ஸாண்டர்,மிக மூர்க்கமான யுத்தம்.
அந்த நாடு அப்படி ஒரு அடியினை அலெக்ஸாண்டரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.மொத்தமாக பிடித்தான் , மண்டியிட்ட நாடு அவன் முன் குனிந்து நின்றது
கண்ணசைத்தான் அலெக்ஸாண்டர், நொடிபொழுதில் சரிந்தன தலைகள்.மரண பயத்தில் விழித்துகொண்டிருந்தார் டெமஸ்தனிஸ்
அலெக்ஸாண்டர் என்பவன் யார் எனற செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள இவர் உயிரோடு இருக்கட்டும் என சொல்லிவிட்டு
அதன் பின் கிரேக்க வைகோ டெமஸ்தனிஸ் கீச்சுகுரல் கூட எழுப்பவில்லை,கேட்க மட்டும் செய்தார்
மொத்தமாக கிரேக்கத்தை அடக்கி ஒடுக்கி தனிபெரும் அரசனாக நிமிருந்து நின்றான் அலெக்ஸாண்டர்,ஆனாலும் மற்ற கிரேக்க நாடுகளை அவன் நேச நாடாகத்தான் நடத்தினான்
அரிஸ்டாட்டில் சொன்னதும், தந்தை சொன்னதும் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.
நாம் கிரேக்கர்கள்,மிக உயர்ந்த வீரமும் தத்துவமும் அறிவும் பெருமையும் கொண்டவர்கள்,இது இங்கே மட்டும் வாழகூடாது, உலகமே
என்ன செய்யலாம்? நமக்குள் சண்டையிட்டோம்,இப்பொழுது வாள்முனையில் அடக்கி வைத்திருக்கின்றேன்,நிச்சயம் இனி எவனும் வாலாட்டமாட்டான். ஆனால் சொல்லமுடியாது வந்தாலும் வரலாம்
தமக்குள் அடித்துகொள்ளும் கிரேக்கர்கள்,மொத்த கிரேக்கர்கள் மானபிரச்சினை என்றால் ஒன்றுபடுவார்கள், அதற்கு பிரச்சினை கிரேக்கத்திற்கு அப்பால் இருந்து வரவேண்டும்
(என்னதான் காங்கிரஸ்,பிஜேபி, திமுக என நமக்குள் அடித்து
தங்களுக்குள் அடித்து கொண்டாலும் திமுக என்றவுடன் ஒன்றாகி விடுகின்றார்கள் அல்லாவா அதிமுகவினர்,அப்படி)
அந்த பாரசீகர்கள் பெரும் தொல்லை,200 ஆண்டு காலமாக அசைத்து
பல அரசர்கள் உள்ள பாரசீகம் தான்,சில சிற்றரசுகள் உட்பட அசைக்கமுடியாத பாபிலோன் மன்னர் டார்சியஸ் வரை பெரும் அசுரர்கள் வாழும் நாடு
எப்படி எல்லாம் தோற்றோம்,ஒரு வெற்றியினை கொண்டாட ஒருவனை எப்படி எல்லாம் ஓடவிட்டு,அவனும் செத்து அவன் நினைவாக
இனி அதுதான் சரி,கிரேக்கத்தின் தலைசிறந்த நாடாக மாசிடோனியா ஆகிவிட்டது,இனி உலகின் மிக சிறந்த நாடாக கிரேக்கத்தை ஆக்கினால் என்ன?
மிரட்டி திரட்டலாம் அது நிச்சயம் ஒரு நாள் காலைவாரிவிடும் அப்படி நடந்தால் பாரசீகர் வாய்விட்டு சிரிப்பார்கள்
உடனே கிரேக்க சபையினை கூட்ட உத்தரவிட்டான்,சிற்றரசரும்,
"பெரியோர்களே,நான் இந்த உலகின் சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காகவோ, மாசிடோனியா பெரும் வல்லரசு ஆகவேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை தொடங்க போவதில்லை
என்னிடம் பலமான ராணுவம் உண்டு,ஆயினும் பாரசீகர்கள் அதாவது நம் 200 ஆண்டுகால எதிரிகள் பலமானவர்கள், அவர்களை வீழ்த்த உங்கள்
இந்த அணுகுமுறை கிரேக்கர்களை யோசிக்க வைத்தது,நிச்சயமாக இவன் வீரன்,இதுவரை வெற்றிதான் பெற்றிருக்கின்றான்,அந்த பாரசீகர்களுடன் மோதும் தைரியம் கிரேக்கத்தில் இவனிடம்தான் இருக்கின்றது,சரி அப்பல்லோ மீது பாரத்தை போட்டு அனுப்பி வைப்போம்
காலை வெயிலில் ஒய்யாரமாக படுத்திருந்தார் டயாக்னிஸ்,வந்து அவர்முன் நிழலாக நின்றான் அலெக்ஸாண்டர்,அவர் ஏன் வரவில்லை என கேட்டான்,தன் நோக்கத்தை எடுத்து சொன்னான்
"நீ வெயிலை மறைக்கின்றாய், தள்ளிபோ"
சுற்றி நின்றவர்கள் வாளை உருவினார்கள்,சிரித்துகொண்டே தடுத்தான் அலெக்ஸாண்டர், இம்மனிதர் எவ்வளவு பெரும் அறிவாளி தெரியுமா?
இதுதான் அலெக்ஸாண்டர்,மிக நிதானமானவன்,தொலைக்க வேண்டியவர்களை தொலைத்தான்,தொழ வேண்டியவர்களை தொழுதான்.
சரி,அந்த டயாக்னிஸ் ஏன் அப்படி சொன்னார்? என்ன இருந்தாலும் ஞானி அல்லவா? இது ஏன் வேண்டாத வேலை,கிரேக்க பெருமையினை வாள் முனையிலா பரப்புவது என
கொஞ்சமும் அசரவில்லை அலெக்ஸாண்டர்,பெரிய அறிவாளியிடம் ஆலோசனை கேட்டோம்,அவர் சொல்லவில்லை அதனால் என்ன நம் பலத்தோடு இறங்கலாம் என தீர்மானித்தான்
பெரும் படை திரட்டபட்டது, அலெக்ஸாண்டர் குதிரைபடையினை பலமாக வைத்திருந்தார்.
அந்த குதிரைகளுகு அனுபவமும், பலமும் அதிகம்
அடுத்து ஈட்டிபடை,அதில் இருவகை இருந்தது எடை குறைவான அதிக தூரம் வீசகூடிய
இன்னும் மருத்துவபடை , உளவுபடை எல்லாம் தயாராயின. உளவுபடைக்கு மிக தந்திர பயிற்சிவழங்கபட்டது,உளவு தகவல்தான் பாதிவெற்றி
மிக நுட்பமான இன்னொரு காரியத்தை செய்தான்,
அலெக்ஸாண்டர் சொன்னான், வீரர்களே,நாம் வெற்றிபெறும் நாட்டில் கிடைக்கும் பொருள் எல்லாம் உங்களுக்கே,
வீரர்கள் அலெக்ஸாண்டர் பின்னால் அணிவகுத்துவரவும், உற்சாகமாக போரிடவும் இந்த தந்திரம்தாம் காரணம்.
அதுவரை யாரும் செய்யா தந்திரம்
யுத்தம் என வந்துவிட்டால் தகவல் தொடர்பு மிக முக்கியம்,
எல்லாம் சரி,இனி பாரசீகததில் நுழையலாம்,ஆசியா மைனரை தாண்டினால் பாரசீகம்
செல்லலாம் அதற்கு முன் தெய்வத்திடம் அனுமதி கேட்பது முக்கியம்,கடவுளே பிராதானம்
டெல்பியும்,அப்பல்லோவும் அவர்கள் பிராதன கடவுள்,அந்த ஆலய சந்நிதியில் பூசாரிகளிடம் குறி கேட்டான் அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் கேட்டான், இதுவரை யாரும் முயற்சித்திருக்கின்றார்களா?
இல்லை என பதில் சொன்னார்கள் பூசாரிகள்
மன்னன் பேச்சிற்கு மறுபேச்சு ஏது, ஆனாலும் மூத்த பூசாரி மனதிற்குள் சொன்னார், அலெக்ஸாண்டரை கடைசியாக
(அது பலித்தது என்பது வேறு விஷயம்)
படை ரெடி,அதற்கான சப்ளைசெய்யும் ஆட்களும் ரெடி, மருத்துவகுழு ரெடி இனி கிளம்பவேண்டியதுதான்,எங்கே பாரசீகம்?
அதற்கு முன் கிரேக்கத்தை கடைசியாக பார்த்து சொன்னான், அலெக்ஸாண்டர்,
அப்பொழுது அவனுக்கொரு நுட்பம் புலபட்டது,நாம் வெளியேறிவிட்ட பின் அந்த தைரியத்தில் யாராவது மாசிடோனியாவினை கைபற்றிவிட்டால்?
ஆண்டிபேட்டர் இங்கிருக்கட்டும், பார்மீனியோ என்னோடு வரட்டும்
புக்கிபேலேசில் அலெக்ஸாண்டர் செல்ல,கூடவே பிரியாமல் பார்மினியோவும் சென்றார்,
சொல்லிவிட்டு தன் புக்கிலேசில் துள்ளி ஏறினான்,அதுவும் உற்சாகமாக கிளம்பிது.
(பாகுபலி கட்டப்பா எனும் பார்த்திரத்தில் நீங்கள் எதனை கண்டீர்களோ தெரியாது,
அலெக்ஸாண்டர் படை கிளப்பிய புழுதி மேகமாய் திரண்டிருந்தது, பாரசீகம் தன் நிம்மதியினை தொலைக்க தயாராகி கொண்டிருந்தது
(தொடரும்..)