1
*சயன கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்*
*அனைவரும் சென்று அருள் பெறுவோம்*
*அடுத்த தரிசனம் 2059ல் நாற்பது ஆண்டுகளுக்கு பின் தான் கிடைக்கும்.*
40 ஆண்டு ஒரு முறை மட்டுமே 🙏சேவிக்க முடியும்….
2
நம் கண்களுக்கு புலப்படாத தண்ணீருக்கு அடியில்.
கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின்
கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள்.
3
அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
பெருமாளின் தாருமயமான திருமேனி (மரத்தினால்
செய்யப்பட்டது).
மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
4
பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.
5
பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.
6
வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள்,
7
ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.
வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு 🙏சேவை சாதிப்பார்…
நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.
8
பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.
1939ம் ஆண்டு சேவை சாதித்தார்..
1979ம் ஆண்டு சேவை சாதித்தார்..
9
*17.07.2019* ஆண்டு
சேவை சாதிக்க உள்ளார்…
அனைத்து பக்தர்களுக்கும்
தெரியபடுத்துங்கள்.
10
மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்
11
12
13
* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
14
🇮🇳🙏🇮🇳