, 23 tweets, 10 min read Read on Twitter
எது கடவுள்!?
பெரும்பாலான ஆத்திகர்களின் நம்பிக்கை, கடவுளுக்கு உருவம் இல்லை, அவன் அனைத்து இடங்களிலும் வியாபித்து நிறைந்திருக்கிறான், அவனை யாரும் உருவாக்கவில்லை, அழிக்கவும் இயலாது என்பதாகும்.
#அறிவியல், மேற்கூறியவை அனைத்தும் மிகக் கச்சிதமாக பொருந்தும் விதமாக ஆற்றலை விவரிக்கின்றது
"பகுத்தறிவில் படிந்த பாசி" என்ற தலைப்பில் நான் எழுதிய தொடரின் சாரத்தை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
அறிவியல், ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது என்கிறது, ஆற்றல் ஓருருவிலிருந்து வேறுருவிற்கு மாறும் தன்மை உடையது, ஆற்றல் உயிருள்ள உயிரல்லாத அனைத்திலும் வியாபித்திருக்கும்.
ஆற்றல் கடவுளா👇
ஆற்றல் ஆற்றல் தான், அது தனக்குள் ஊடுருவுவதை உணரவும், உற்று நோக்கவும், நிலைபெறச் செய்து பெருக்கவும், அதற்குக் "கடவுள்" என்று பெயரிட்டான் தமிழன். இவ்வுலகம் ஆற்றலை மின்சாரமாக இயந்திரமாக அணுவாக இரசாயனமாக வெப்பமாகவும் மின்காந்த அலைகளாக பார்க்கையில் தமிழன் வேறு விதமாகப் பார்க்கிறான் 👇
ஆற்றலை நீராக நெருப்பாக காற்றாக நிலமாக வெட்டவெளியாக பகுத்துப் பார்த்தான் தமிழன். ஆற்றல் அனைத்தும் இதற்குள் அடங்கும், ஒட்டுமொத்த அண்டமும் இதற்குள் அடங்கும். இவை மின்காந்த அலைகளால் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. தமிழனின் பகுப்பாய்வு வியக்கத்தக்கது, காலப்பகுப்பு👇
காலத்தை வெல்ல இயலுமா!? முயற்சித்தது இந்த பகுத்தறிவுச் சமூகம். ஒரு வருடத்தை ஆறு பெரும்பொழுதுகளாகவும், ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகவும் பிரித்தான். நிலங்களை ஐந்தாக பகுத்து, அதனொடு வெட்டவெளியையும் கூட்டி இந்த ஆறு பெரும் சிறு பொழுதுகளோடு பொருத்தி, திணை திருத்தி, காலத்தை வென்றான்👇
சாத்தியமா!? ஒரு எடுத்துக்காட்டு, ஏற்பாடு என்னும் சிறு பொழுதும் முதுவேனில் என்னும் பெரும் பொழுதும் நெய்தல் திணைக்குரியது. குறிப்பிட்ட சிறு பெரு கால மாற்றம் நெய்தல் திணை திரிந்திருப்பதை உணர்த்துவதால், நெய்தல் திணையை திருத்துவதால் அந்தக் காலத்தையே சரி செய்ய இயலும்.
புகைப்படங்கள்👇
கடல் அழுவும்(ஆழிப் பேரலைக்குக் காரணி), ஆகையால் அழுவம் என்றொரு பெயரும் அதற்குண்டு. அப்படி அழுவும் இடத்தில் ஈட்டி எறிந்து (Resetting unsettled tectonic plates) ஆழிப்பேரலை வராமல் தடுத்து, கால மாற்றத்தையும் சமன் செய்திருக்கிறார்கள். இப்பொழுது கூட இப்படியொரு நடைமுறை கிடையாது👇
வியப்பு கூட்டலாம், சாத்தியமற்றதாக எண்ணத் தோன்றலாம். இந்த நெறியாளுகை தெரிந்தவனே வேந்தனாக இயலும் தமிழ் மண்ணில், சிலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை. இதன் பெயர் செந்நெறி, அப்படியெனில், இயற்கையை உணர்ந்து, அதன் போக்கு கெடாது பாதுகாத்து, நாமும் பாதுகாப்பாக வாழும் நெறி எனப் பொருள்👇
கடவுள் குறித்த தலைப்பில் இந்த விளக்கங்கள் எல்லாம் ஏனெனில், தமிழ் வேந்தர்களின் திறன் என்னவென அறிந்து கொள்ளத் தான். இரண்டும் குறித்து நீண்டு விளக்க முற்பட்டால் இடம் கொள்ளாது.
#ஆற்றல்/கடவுள்
ஆற்றலை உள்வாங்கும் திறன் அனைவருக்கும் இருந்த போதிலும், அது குறித்த தெளிவில்லாதோர் அதிகம்👇
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் " என்பதே தமிழர் நிலைப்பாடு (அக்காலத்தில்). தன்னால் பெற முடிந்த ஆற்றலை பிறரும் பெறும் வகையில், ஐம்பெரும் ஆற்றல்களும் நிறைந்திருக்கும் நீர் நிலைகளை, ஆற்றலைக் குவித்து வைத்து பிறர் பயன்பட வைக்க எத்தனித்தான். எப்படி ஆற்றலைக் குவித்தான் தமிழன்!? 👇
ஏன் நீர்நிலைகளில் குவிக்க முடிவு செய்தானெனில், அங்கே தான் ஐம்பெரும் ஆற்றல்களும் நிறைந்திருக்கும். ஆற்றலில் நேர் எதிர் என்று இரு ஆற்றல்கள் உண்டு, அதுவே சமநிலை. ஆகையால் எதிர் மின்காந்த ஆற்றலை உள்வாங்கி நேர்மின்காந்த ஆற்றலை வெளிவிடும் மரங்களில் சிறந்த மரத்தடியில் குவிக்க எண்ணினான்👇
அப்படிக் குவியும் ஆற்றலை சேமித்து வைக்கும் பொருட்டே சொரசொரப்பான கல்லை வைத்து,அதன் மீது உயிரோட்டமுள்ள பிசுபிசுப்பான திரவங்களை பூசி வைத்தான். இந்தப் பூச்சு தான் பூசையானது, உயிரோட்டமுள்ள திரவங்கள் நேர்மின்காந்த ஆற்றலை ஈர்க்கும் தன்மையுடையது. எனினும் சிறிது நேரத்தில் கெட்டுப்போகும்👇
கெட்டுப் போனால், எதிர் மின்காந்த அலைகளை ஈர்க்கத் துவங்கி விடும், ஆகையால் ஆறு காலப் பூச்சு தேவைப்பட்டது. தைலங்கள் கெட்டுப் போக நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் தைலத்தை பூசும் வழக்கமும் உண்டு. பழநியில் இருக்கும் சிலைக்கு பூச்சே தேவையில்லை, அதனால் தான் அது சுரண்டப்பட்டது.👇
விசத்தன்மை நிறைந்த மூலிகைகளை சுத்திகரித்து செய்யப்பட்ட சிலை பழநியில் இருப்பது. இது ஏதோ ஒரு மதம் குறித்த பதிவல்ல, தமிழ்ச் சமூகம் எளிமைப்படுத்த எண்ணியதை, ஆற்றலாளர்களை உருவாக்க உருவாக்கியதை, அபகரித்து, அவர்களுக்கே அதை நெருங்கும் உரிமை இல்லாமல் செய்த சூழ்ச்சியை விளக்கும் பதிவிது.👇
பல்வேறு சமூகங்களில், பல்வேறு விதமாக ஆற்றல் சேகரிப்பு முறைகள் கையாளப் பட்டிருக்கிறது. அவையெல்லாம் மதங்களாக உருவெடுத்தது முதல் அதன் நோக்கங்கள் திசை மாறி, அர்த்தமற்றும் போயிருக்கிறது. தமிழர்கள் எந்த மதத்திற்கும், சமயத்திற்கும் உட்பட்டவர்கள் அல்ல, அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவாளர்கள்👇
அப்படி வைக்கப்பட்ட சிலைகளைச் சுற்றி, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதும் ஆலயங்களாயின. பெண்களே அதனைப் பராமரித்தும் வந்தனர், பெண்ணுரிமை அவ்வளவு சீரிய முறையில் பேணப்பட்டு வந்திருக்கிறது. அவர்கள் தான் தேவரடியார்கள், பார்ப்பனியத்தின் நீண்ட நெடிய சூழ்ச்சி தான் பரத்தையாக்கி வெளியே வீசியது👇
தேவரடியார் வேறு தேவதாசி வேறு என்று வகை பிரிப்போர், தேவடியான்னு பரத்தையர் அழைக்கப்படும் காரணத்தை விளக்கவியலுமா? தேவரடியார்/தேவதாசிகள் தான்,பார்ப்பனர்களால் இழிபெயர் சுமத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள். ஏன்? அவர்களை விரட்டாது எப்படி ஆலயங்களைக் கைப்பற்ற முடியும்? ஆதித்தமிழர் கதையிது👇
ஏன் இதனை ஆதித் தமிழர் கதையென்கிறேன், இது கி.மு.வில் துவங்கி, இராஜராஜன் காலத்தில் வலிமை பெற்று, தற்போது வரை தொடரும், சூழ்ச்சி மிகுந்த திரிப்பு வேலை. இராஜராஜன் காலத்துக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயங்கள் மேற்கூறிய காரணங்களுக்காகவும், இராஜராஜன் கொலைகளை கலைக்குள் புதைப்பதற்காகவும்👇
அதனால் தான் தஞ்சை பெரிய கோயில் பாடல் பெற்ற தலமாகவில்லை. ஆற்றலை நீ உணர்ந்து, அதனை ஈர்க்கும் கலையை அறிந்து கொண்டால், அதற்கு ஆண்டெனா(கோயிலும் சிலையும்) தேவையில்லை.
'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்'
ஒழுக்கம் தான் ஆற்றலை சேகரிக்க உதவும் இறைத்துவம்👇
புகைப்படத்தை கவனித்து படித்தால் தான் கொஞ்சமேனும் விளங்கும். முழுமையாக விளக்க போதுமான இடமும் நேரமும் தற்போது இல்லை. சந்தேகங்கள் இருப்பின், கேட்கலாம், அறிந்துணர்ந்த வரையில் விளக்குகிறேன்.
கடவுள் இல்லை, சாதி மத பிரிவினைகள் எதுவும் இயற்கையிடம் இல்லை. இயற்கையை நேசி, வாசி, சுவாசி.
ஆதி மனிதன் பேசிய மொழியை பண்படுத்தி பயன்படுத்தியது தமிழ், அது உலகின் மூத்த மொழி என்பதில் ஐயமில்லை. தமிழிலிருந்து பிற மொழிகள் பிறந்ததாகச் சொல்வதை விட தமிழை வேறு யாரும் இழிவு செய்திட முடியாது. தமிழில் அப்படி என்ன குறை, பிற மொழிகளை உருவாக்கிப் பயன்படுத்த!? சுயபரிசோதனை செய்து பார்👇
தமிழால் இணைவோம், பிரிவினைவாதம் முறியடிப்போம். இயற்கையின் மிக முக்கியமான சிலவற்றுக்கே தமிழ்ச்சொல் மறந்து போய் விட்டோம்👇📷... தொன்மை வாய்ந்த தமிழினம், ஆலயத்துக்குள் இறைத் தொண்டு செய்ய தேவரடியாரை/தேவதாசிகளை பணித்திருக்குமா!? பரத்ததைத் தொழில் செய்யப் பணித்திருக்குமா!?
இப்பொழுது புரிகிறதா, ஆரியம் எதற்காக நம்மை ஆலயத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து, கல்வி கிடைக்காது தடுத்து வந்தனர் என்று!? ஆற்றலையும் அறிவையும் நாம் பெறுவதைத் தடுக்கத் தான். அதனால் தான் கடவுள் இல்லை என்று சொன்ன #பெரியார் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார். கடவுள் இல்லை எனும் நான்☝📝
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to SOMASUNDARA PRABHU M
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!