தனக்கென ஓர் அடையாளம் உடையவனே மனிதன், அந்த அடையாளத்தைக் கொண்டு ஊருக்கு உழைப்பவனே மனிதர்களின் தலைவன்..
3 subscribers
Mar 11, 2023 • 7 tweets • 4 min read
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...
அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...
கலகக்காரர்களான #பெரியார்#அண்ணா#கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇
(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦♂️) 1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!? #GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇 2/7
Mar 10, 2023 • 4 tweets • 2 min read
தனக்கு வாக்களிக்க வருகிறவர்களையே வடிகட்டும் அரசியல் செய்யும் #சீமான், பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், சமயத்தில் பெரும்பான்மையினருக்கே எதிராகவும் செயல்படும் வரை டெபாசிட்டுக்கே முக்கிக்கிட்டு தான் இருக்கணும்.
இவனை எதிரியாகக் கருதுவதும், தலைவனாகக் கொள்வதும் பெரும் மடைமை
தமிழ்நாட்டில் வலிமையாக இருந்த காங்கிரசை, ஒன்றிணைக்கும் திராவிட அரசியலைக் கொண்டே வீழ்த்த இயன்றது.
இந்திய அளவில் காங்கிரசு வலிமை இழந்து பல காலம் கழித்தே, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வேரூன்ற வைக்க இயன்றது.
நேரு முன்வைத்த அரசியலை, காங்கிரசு கடைப்பிடித்தாலே பாஜக காணாமல் போகும்.
Feb 28, 2023 • 9 tweets • 3 min read
#புலிகள்_கொலை_பாதகர்கள்
ஈவு இரக்கமற்ற கூட்டம் விடுதலைப் புலிகள், சக போராளிகள், சக புலிகள், சக தமிழ் இசுலாமியர்கள், சக உயிர்கள் எதையுமே உயிர்களாக மதிக்காத வெறி பிடித்த கூட்டம் விடுதலைப் புலிகள்.
*கொடுமையான காணொளிகள், அப்பாவிகள் பலியாகாமல் உணரும் பொருட்டு பகிரப்படுகிறது🔞💣🔴
#புலிகள்_கொலை_பாதகர்கள்
வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை வாங்கிக் கொத்தடிமைகளாக வதைத்தெடுத்தனர்.
இதற்கு அனுமதிக்காத வடக்குக் கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக பிள்ளைகளைக் கொடுக்க வைத்தனர்.
நீங்க உங்க பிள்ளைய கொடுப்பீங்களாடா போலித் தமிழ்தேசியத் தும்பிகளா?
Oct 24, 2022 • 5 tweets • 2 min read
யார் அசுரர்கள்!?
அப்படி யாரும் இல்லை எனினும், புனையப்பட்ட கதையில் கூட வஞ்சிக்கப்பட்டவர்களே அசுரர்கள்.
பாற்கடலில் அமுது கடைய, ஐந்து தலை நாகத்தின் தலைப்பக்கம், விசுணு வஞ்சகத்தோடு அசுரர்களை நிறுத்த, நாகமோ விடம் கக்க, சிவன் அசுரர்களைக் காக்க விடம் உண்டானாம்.
சைவ வைணவச் சண்டை இது👊👇
ஆரிய சூத்திரச் சண்டை இதுன்னு மேம்போக்காப் படிச்சாக் கூட புரிந்து கொள்ளலாம். அதனால தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா படிக்க விடல.
அசுரர்கள் சிவன்/ பிரம்மாவைத் தொழுதவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள், விசுணுவை அல்ல என்பதே சமய அரசியல் குப்பைகள் இவை என்பதற்குச் சான்றாகும்👇
இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
Apr 30, 2021 • 20 tweets • 9 min read
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
இந்தக் கற்கள் குறிப்பிட்ட உணவுமுறையால் வருகின்றது என்பதை விட, சரியான சிறுநீர்க் கழிவு வெளியேற்றம் இல்லாததால் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
என்ன செய்யனும்!?👇
சரியாக சிறுநீர்க் கழிவை நாம் வெளியேற்றாத போது, சிறுநீரில் இருக்கும் தாது உப்புக்கள் உள்ளேயே படிவதாலும், சிறுநீரின் அளவு குறுகி அமிலத்தன்மை அதிகமாவதாலும், கற்கள் உருவாகின்றன. முறையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு, இந்த கற்களும் வராது, சிறுநீரகத் தொற்றுக் கிருமிகளும் வராது👇
Nov 4, 2019 • 13 tweets • 8 min read
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம். #BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர். #அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும், #ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும். #BJPInsultsThiruvalluvar 👇
Oct 23, 2019 • 6 tweets • 3 min read
#அல்சர் எனும் இரைப்பைப் புண், வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. கவனிக்காது விட்டால், இரைப்பைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இவற்றை எப்படி இயற்கையாக, எளிமையான முறையில், உடனடியாக #குணமாக்கலாம் என்று பார்க்கலாம்👇
இந்த வயிற்றுப் புண், அமிலத்தன்மை/கொழுப்பு மிகுந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, பித்தப்பையில் இருந்து, அதிக அளவில் வெளிவரும் பித்த நீரால்(அமிலத்தன்மை மிகுந்தது) ஏற்படுவது. இந்தப் புண், குணமாகாது நீடிப்பதற்குக் காரணம், ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா(நுண்ணுயிரி)👇
Oct 5, 2019 • 25 tweets • 9 min read
#கற்பனைக்குள்_மெய்யியல்பு
அறிவியல் உண்மைகளையும், முற்றுப் பெறாத அல்லது பெற முடியாத உண்மைக்கு அருகாமையில் உள்ள கற்பனைகளையும் கொண்டு இயங்குவது.
ஆன்மீகம் நேரெதிர், இதிலே அனைத்துமே கற்பனை தான்.
விளையாட்டே இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் கற்பனைக்குள் புகுந்து தான்.
Fa(ith)ct👇
எந்தக் கற்பனையை ஆய்வுக்கு உட்படுத்தலாம், எதைக் கூடாது!? இருக்கலாம் என்பது அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை, மற்றவை புறந்தள்ள வேண்டியவை.
கற்பனைக்கு எல்லை இல்லாத காரணத்தால் அது இரண்டு திசைகளிலும் பயணிக்கும்.
Logic/ possibility matters
எதற்கு வாய்ப்புள்ளது என்று உணர்வது பகுத்தறிவு👇
Aug 13, 2019 • 20 tweets • 6 min read
#ரஜினி
இவரைப் பெரிதாகக் கடிந்து கொள்ள ஏதுமில்லை...
சாதாரண மனிதனின் மனம் எப்படி மாறிக் கொண்டே இருக்குமோ அப்படி மாறிக் கொண்டே இருக்கும் மனம் தான் இவருடையதும். இவர் இதற்குச் சரிப்பட்டு வருவார் என்று நம்பும் மக்களும் சாதாரண மக்கள் தான். அவர்கள் மீதும் குற்றமில்லை. எது தான் குற்றம்?👇
இவர் வந்து எதையாவது மாற்றுவார் என்ற ரசிகர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒரு புறம், இவர் அரசியலில் வளர்ந்தால் நாமும் வளரலாம் என்ற ஆசை மறு புறம். இதற்குத் தலைவனான ரஜினி எப்பொழுதோ செவி மடுத்திருக்க வேண்டும், அவருக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை, ஆசையோடு தயக்கமும் இருந்தது ரஜினிக்கு👇
Jul 30, 2019 • 12 tweets • 2 min read
#உணவுப்பழக்கம்
சர்க்கரை வியாதி, இருதய அடைப்பு முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் அடிப்படை, தவறான உணவுப்பழக்கம் தான்.
எப்படி நம் உணவுப்பழக்கத்தை அமைத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்?
எல்லோரும் சொல்வது தானே என்று எண்ண வேண்டாம், அதற்குரிய விளக்கங்களையும் நீங்கள் இங்கே காணலாம்👇
நோய் எனப்படுவது யாதெனின், உடல் உள்ளமைப்பு முறைமையில் கேடோ, பெரும் மாற்றமோ ஏற்படுவது தானே! அப்படி ஆவது ஏன்!? அவை இயங்கத் தேவையானதை வழங்காததும், இயக்கத்தைத் தடை செய்வதை வழங்குவதும் தானே. சுருங்கச் சொல்வதானால், நல்லது விடுத்து அல்லதுக்கு அந்த நாவே அடிமையானது தான் முதன்மைக் காரணம்👇
Jul 7, 2019 • 7 tweets • 4 min read
திருப்பதியின் வரலாறு எளிமையாக..
சுமார் 1500-2000 வருடங்கள் முன்பு, வன தெய்வமாக ஒரு பெண் தெய்வத்தை வைத்து மலை வாழ் மக்கள் வழிபட்டு வந்தனர். கீழிருந்தும் சென்று வந்த கொஞ்ச மக்கள் வாயிலாக கேட்டறிந்த சைவர்கள், மலை வாழ் மக்களை வார்த்தைகளால் மயக்கி ஏய்த்துத் தன்வயப் படுத்துகிறார்கள்👇
இதற்குச் சான்றாக இன்றளவும் அங்கே பெண் தெய்வத்துக்கு உரிய சிம்ம வாகனம்,சிலைக்குப் பின்னால் இருக்கின்றது. சிறிது ஆண்டுகள் பூசை செய்து வந்த சைவர்கள், நாளடைவில் அதை ஆண் தெய்வமாக மாற்றி விடுகின்றனர். எதிர்த்துக் கேட்ட மலைவாழ் மக்களை சமரசம் செய்ய ஏற்படுத்தப்பட்டது தான் மொட்டை போடுதல்👇
அரசியல் பேசுபவர்கள் பேசாதவர்கள், அரசியல் அறிந்தவர்கள் அறியாதவர்கள், என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. #தயவுசெய்து #முழுமையாக_படிக்கவும்
தமிழை ஒதுக்குவது அல்ல திராவிடம், மாறாக, தமிழ் மொழியை, தமிழ் மொழியின் அடையாளத்தை, தமிழர்களை வலிமைப்படுத்த👇
ஏற்படுத்தப்பட்ட சொல்லே #திராவிடம்
திராவிடம் என்றால் என்ன? #ஆரியத்தின்_எதிர்ப்பதம்
ஆரியத்தால் பிரித்தாளப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல்
திராவிடத்தின் அவசியம் என்ன?
சமூகத்தில் படர்ந்திருக்கும் இருளை நீக்கி ஒளியேற்றும் தீப்பொறி தான் திராவிடம்
ஆணென்ன பெண்ணென்ன!? அடிமையென்றான பின்னே,
ஆணவமாய் அடக்கியாண்டால் உனக்கென்ன!?
அடிவயிறு மானம் தின்றே, ஆண்டியாய் ஆண்டையிடம் அல்லலுற்றால் உமக்கென்ன!?
ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற, பெரியாரை நீ பற்றியதேனோ!?
ஆட்டுவித்தோரை அடக்கி👇
ஆட்டுவித்தோரை அடக்கி வென்ற, அண்ணாவின் இதயத்தை நீ இரவலாய்ப் பெற்றதுமேனோ!?
ஆரூரில் வந்து பிறந்ததுமேனோ!?
ஏன் பிறந்தீர் கலைஞரே!?
இம்மொழி எம்மொழி யென்று பிறமொழி தேசம் தாவியவனும், வன்மொழியாய்ச் சூழுரைக்க, தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிட்ட தீஞ்சுவை மொழியே, இங்கு வந்து ஏன் பிறந்தீரோ!?👇
May 25, 2019 • 18 tweets • 4 min read
#தமிழ் #கோ
தமிழால் ஒன்றுபடாமல் பிரிவினைவாதம் பேசும் சிலருக்கு எளியவர்களின் கேள்விகள்.
1)தமிழ் தான் ஆதி மொழியெனில், எல்லோருமே பேசியது தமிழ் தானே!? பிறகு ஏன் இந்த இன வெறி!?
2)தமிழ் என்பது வெறும் மொழியென்று சுருக்கும் முன் அந்தத் தமிழை நீங்கள் முழுமையாக உள்வாங்கியிருக்கிறீர்களா!?
பிழையின்றி எழுதவாவது தெரியுமா!?
*தமிழில் மெய்க்கு(18) தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பொய்க்கு அல்ல.
உயிரற்ற(12) மெய்யும்(18), மெய்யற்ற உயிரும் மேன்மையற்றுப் போகும் என்பதை உணர்த்தவே, உயிரையும் மெய்யையும் பிணைத்துப் படைத்த மொழி தமிழ்👇
May 19, 2019 • 23 tweets • 10 min read
எது கடவுள்!?
பெரும்பாலான ஆத்திகர்களின் நம்பிக்கை, கடவுளுக்கு உருவம் இல்லை, அவன் அனைத்து இடங்களிலும் வியாபித்து நிறைந்திருக்கிறான், அவனை யாரும் உருவாக்கவில்லை, அழிக்கவும் இயலாது என்பதாகும். #அறிவியல், மேற்கூறியவை அனைத்தும் மிகக் கச்சிதமாக பொருந்தும் விதமாக ஆற்றலை விவரிக்கின்றது
"பகுத்தறிவில் படிந்த பாசி" என்ற தலைப்பில் நான் எழுதிய தொடரின் சாரத்தை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
அறிவியல், ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது என்கிறது, ஆற்றல் ஓருருவிலிருந்து வேறுருவிற்கு மாறும் தன்மை உடையது, ஆற்றல் உயிருள்ள உயிரல்லாத அனைத்திலும் வியாபித்திருக்கும்.
ஆற்றல் கடவுளா👇
May 11, 2019 • 8 tweets • 5 min read
புலிகள் கொலை பாதகர்கள்.
சொந்த இன மக்களை பலி கொடுத்துத் தப்பிக்கப் பார்த்த புலிகளின் #கையாலாகாத தனத்தை உலகம் கேலி செய்திடக் கூடாது என்றே, திட்டமிட்டு பிறர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். அரசியல் தீர்வு கிடைக்காதுன்னு தானே டா ஆயுதம் எடுத்து ஆயுதத்தாலேயே அழிஞ்சானுக. #ஆய்வோம்_ஈழம்
புலிகள் அப்பாவி மக்களை கொல்ல மாட்டார்கள் என்று கதை உட்டுக்கிட்டு இருக்கானுக. எத்தனை எத்தனை கொலை பாதக செயல்களை செய்திருக்குறானுக தெரியுமா? குறிப்பாக இசுலாமியர்களைக் கடத்தி பணம் பறிப்பது, மசூதியிலே தாக்குதல், இறுதியில் மொத்தமாக உடமைகள் அனைத்தும் பிடுங்கப் பட்டு விரட்டப்பட்டனர்.
Apr 30, 2019 • 13 tweets • 4 min read
#கலைஞரின்_உண்ணாவிரதம்
இது லூசுத் தும்பிகளுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அல்ல
தும்பிகளால் ஏய்க்கப்பட்டு கலைஞரை தவறாக புரிந்து கொண்டவர்களுக்காக மட்டுமே.
அந்த 9மாதங்களில் என்னென்ன நிகழ்ந்தது, கலைஞர் என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
கலைஞரின் உண்ணாவிரதத்துக்கு முந்தைய பிந்தைய நிலை?
விடுதலைப் புலிகள் போர் நிறுத்தமென 26/04/09 அன்று அறிவிக்கின்றனர்.
அன்று இரவு முழுவதும் உறங்காத கலைஞர், 27/04/09 அதிகாலையில் உண்ணாவிரதத்தை துவங்கினார். உடனடியாக கைவிட வேண்டும் என்று பிரதமர் உட்பட பல தலைவர்கள் கேட்டுக்கொண்ட போதும், முடியாதென மறுத்து விட்டார்.