இன்றைய சில ஊடகங்களின் செய்திகளின்,உண்மை தன்மைகள்.
கீழே,இதை முழுதுமாக படியுங்கள்.
இது சிறு துளிகள் மட்டுமே.
எவ்வளவோ நல்லவே இருக்க,சில திருட்டு ஊடகங்கள் அவைகளை மறைத்து,நம்மை திசைதிருப்பும் வேலைகளை செய்யும்.
உன்மையை உன்மையா தெரிந்துகொள்வோம்.

1
கேள்வி: தற்சமயம் ரஜினி அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து கூறியுள்ள இந்தச் செய்தி ஊடகங்கள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன? – நிர்மல்

Headline Strategies Psychology அப்படின்னு ஒன்னு இங்கே இருக்கு. அது என்னவென்று கூறும் முன் ஒருவிஷயம்:

2
தீபாவளி அன்று ஜீ தொலைக்காட்சியில் வெளியான ரஜினி அவர்களின் பேட்டி மிக எதார்த்தமாக இருந்தது என்றும் – அதில் ரஜினி அவர்களின் பேச்சு அருமையாக மிகவும் வெளிப்படையாக இருந்தது என்றும் “BMW கார் வச்சுருக்கேன், ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடுகிறேன், வீடு போயஸ் தோட்டத்தில் இருக்கு —-

3
நான் எப்படிங்க எளிமையா இருக்கேன்னு சொல்ல முடியும்? என்று கூறியது மிக மிக எதார்த்தமான உண்மை பேச்சு” என்று என் அம்மா, அண்ணா அனைவரும் கூறினர். “இப்படி வெளிப்படையாக தங்கள் வாழ்க்கையைக் கூறிவிட்டால் மக்களும் ரசிகர்களும் எதார்த்தம் புரிந்து வாழ்வார்கள் என்று”

4
அந்தப் பேட்டியை பார்த்த அனைவருமே இதே கருத்தை தான் கூறினர்.

அப்போது என் அம்மாவிடம் நான் கூறினேன் “ரஜினி அவர்களுக்கு இந்தப் பேட்டி மக்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றால் இன்னும் இரண்டு நாளில் அவர் பெயரைக் கெடுக்கக் கண்டிப்பாக எதாவது செய்தியை செய்தி நிறுவனங்கள்

5
அதுவும் புதிய தலைமுறை, நீயுஸ்7, ஆனந்த விகடன், தி ஹிந்து போன்ற செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியிடுவார்கள்”. கொஞ்சம் பாருங்கள் என் கணிப்பு சரியாக இருக்கும் என்றேன்.

அதே போல் விரைவு செய்திகள் வந்தன:

6
நியூஸ் 7 செய்தி————— “7 பேரை தெரியாதவர் 7 கோடி பேருக்கு தலைவர் ஆவாரா”? 
சன் டீவி —————- “பாஜக ஆபத்தான கட்சி தான் என்று ரஜினி கூறினார்”. 
புதியதலைமுறை ————-“7 பேர் யார் என்றே தெரியாது என்றார் ரஜினி”. பரபரப்பு செய்திகள்.

7
இந்தச் செய்திகளைக் கொஞ்சம் விட்டு விட்டு அந்தத் தலைப்புகளை அனைவரும் கொஞ்சம் கவனிக்கவும். அதில் தான் செய்தி நிறுவனங்களின் எண்ணமே இருக்கிறது. இது எல்லாமே செய்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் Headline Strategies Psychology என்ற கேடுகெட்ட தந்திரம்.

8
செய்தியை வெளியிடாமல் – தங்கள் எண்ணத்தை எப்படி மக்கள் மனதில் விதைப்பது என்று அதற்குத் தக்க செய்தியின் தலைப்பை உருவாக்குவது பரப்புவது தான் அது.

9
“2016ல் கேரளா மாநிலத்தில் கொச்சியில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த தலித் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 30 இடங்களில் சரமாரி வெட்டுக் காயங்கள். இந்தச் செய்தி பெரிய அளவில் விவாதமாக மாறவே இல்லை. காரணம் கேரளா கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் –

10
கொலை செய்த நபர் அமீர் உல் இஸ்லாம் என்பவர்”. இது விவாதம் அல்ல செய்தியாக கூடப் பெரிய அளவில் வரவில்லை. இதே நிகழ்வு உத்திரபிரதேசம் குஜராத் என்றால்? கடந்த ஆண்டுகளில் திரிபுரா பற்றி என்றாவது செய்தி வந்தது உண்டா பாருங்கள்? இப்போது வாரம் நாளு கெட்ட செய்தி வரும்,.

11
காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது அங்கே பிஜேபி வந்தாகிவிட்டது எனவே இனி கெட்ட செய்தி மட்டுமே வரும். பெரும்பாலான செய்தி ஊடகங்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள்/ தமிழகத்தில் திராவிட சிந்தனையாளர்கள் வசம் இருப்பதால் தான் வரும் வினை இது.

12
சென்ற மார்ச் மாதம் குஜராத்தில் குதிரை வைத்திருந்ததால் தலித் தாக்கப்ட்டு உயிர் இழந்தார் என்று செய்தி வெளியிட்டது ஞாபகம் இருக்கும் அனைவருக்கும்.

13
ஆனால் அது உண்மை அல்ல இரண்டு நாட்களில் அந்த இளைஞர் குதிரை வைத்திருந்ததால் அல்ல மாறாக அந்தப் பகுதி பெண்களிடம் வரம்பு மீறி நடந்தார் அதனால் தாக்கப்பட்டு இறந்தார் என்று விசாரணையில் வெளியானது. ஆக வெட்ட வெளிச்சமாக பிஜேபி மீது தலித்,

14
இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்று தூண்டுவது தான் நோக்கமே அன்றி வேறு இல்லை இதில்.

எல்லோரும் ஹைதராபாத் ரோகித் வெமுலா தற்கொலை மட்டுமே பெரும் செய்தியாக்கினர் – ஆனால் பெங்களூர் அபிசேக் தற்கொலை செய்தியாக மாறேவே மாறாது.

15
ஏன்? எப்படி? காரணம் ரோகித் கம்யுனிஸ்ட் மாணவரணியில் இருந்தார் – அபிசேக் வலதுசாரி மாணவர்கள் அணியில் இருந்தார். எனவே ரோகித் வெமுலாவுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் ஆரம்பித்து எந்த யோக்கியனும் அபிசேக் இறப்புக்குக் குரல் கொடுக்கவே இல்லை.

16
இதை ஏன் கூறுகிறேன்? செய்திகள் எப்படி பெரிதாக்குவது எதனால் பெரிதாக்குவது எல்லாமே இங்கே உள் நோக்கங்களுடனே திட்டமிடப்படுகிறது. அது போல் வேலையைத் தான் ரஜினி அவர்களின் பேட்டியிலும் செய்துள்ளார்கள் செய்தி நிறுவனங்கள். இதை முதலில் நாம் மக்கள் உணரவேண்டும்.

17
விஜயகாந்த் அவர்கள் எப்படி வீழ்த்தப்பட்டார்? அதே பாணியில் ரஜினி அவர்களை வீழ்த்தத் திராவிட இயக்கங்கள் செய்தி நிறுவனங்களைப் பின்புலமாக கொண்டு நகர்கிறார்கள். ஒன்று கேலி செய்வோம் – இல்லை வெறுப்பைப் பரப்புவோம் இது தான் இவர்கள் செய்தி நிறுவனம் நடத்தும் தொழில் தர்மம்.

18
இங்கே தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தாண்டி எவரும் அரசியல் செய்ய முடியாது. அப்படி அரசியல் செய்தால் எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொண்டு உங்களை நிர்மூலம் ஆக்குவது எப்படி என்ற கலையும் இங்கே இருக்கும் திராவிட கூட்டத்துக்கு இது நன்கு தெரியும்.

19
ரஜினி அவர்கள் கூறிய “அது எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் அப்படி நினைக்கிறார்கள் என்றால் அப்படி தானே இருக்கும்” இந்த இரண்டு கூற்றை வைத்துக் கொண்டு எப்படி அவர் மீதே வெறுப்பை மக்களிடம் பரப்பலாம்?

20
அதைத் தான் புதிய தலைமுறை முதல் நியூஸ்7 வரை செய்தி நிறுவனங்கள் இங்கே செய்துள்ளார்கள். வேறு ஒன்றும் இல்லை.

{திக, கம்யுனிஸ்ட் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் நடத்தும் அனைத்துச் செய்தி ஊடகங்களும் இன்று ரஜினி முதல் எதிரி. காரணம் அவர் “ஆன்மீக அரசியல் – அவர் ஒரு தேசியவாதி”.}

21
முக்கியமான உண்மையை அனைவரும் கட்டாயம் உணர வேண்டும்.

01) 2012ஆம் ஆண்டு இரண்டு தலைமை பத்திரிக்கையாளர்கள் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்கள். காரணம் ஒரு தொழில் அதிபரை 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்கள் என்று.

22
அந்தத் தொழில் அதிபர் ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்பது தகவல். அதற்கான ஆதார வீடியோ இந்தச் செய்தியாளர்களிடம் உண்டு. அந்த வீடியோவை வைத்து மிரட்டி முதலில் சில லட்சம் பணம் பரித்துள்ளார்கள். அதன் பின் மீண்டும் பணம் கேட்டு மிரட்ட – புகாரின் பேரில் கைது.

23
இதில் முக்கியமான விசயம் என்ன தெரியுமா? இரண்டு செய்தியாளர்களுமே வேறு வேறு செய்தி நிறுவனந்தை சார்ந்தவர்கள் ABP News, India TV. அதாவது நொய்டாவை தலைமையிடமாக கொண்ட India TV பத்திரிக்கையாளரும் –

24
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ABP News என்ற இரண்டு வேறுபட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கைது.

25
இது தான் இங்கே முக்கியும். இதற்குப் பெயர்: Investigative Journalism. தொடர்ந்து ஒரு விவகாரத்தைப் பின் தொடர்ந்து முழுக் கதையையும் தெரிந்து மக்களுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டு செய்தியின் முழு உருவத்தை உடைத்துக் காட்டுவது.

26
ஆனால் இந்தியாவில் இதற்குப் பெயர் “சமூகத்தில் பெரிய நபர்கள் பின்புலம் அவர்கள் ரகசியம் அவர்கள் கள்ள உறவு என்று தேடி அலைவது. இதன் மூலம் அந்த நபர்களை மிரட்டி காசு பிடுங்குவது.

27
உங்கள் வாழ்க்கையையே நாசம் செய்வோம் என்று வெளிப்படையாக மிரட்டி காசு பறிப்பது தான் இங்கே Investigative Journalism. இதற்கு ஒரு குரூப் News Agencies என்ற முழு நேரம் வேலை செய்கிறது.

28
இது ஒரு கூட்டாக உழைக்காமல் எப்படி அடுத்தவன் வீட்டு விவகாரத்தை வைத்து காசு சம்பாரிப்பது என்ற கூட்டம். பல விவகாரம் வெளியில் வரவே வராது. ஏன் என்றால் அனைத்துச் செய்தி நிறுவனங்களும் இந்தவிதமான கூட்டம் உண்டு. ஒருத்தருக்கு ஒருத்தர் இசைந்து போவது ஒரு தந்திரம்.

29
இரண்டு விசயம் இது தனி ஒரு பத்திரிக்கையாளர்கள் தவறு என்று நினைக்காதீர், அடுத்து 20 லட்சம் தானே என்று நினைக்காதீர்.

30
Zee TV குரூப் இந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் கூட்டம் ஜிண்டால் குழுமம் மீது தவறான விதமான செய்திகளை பரப்புவது மூலம் பெரும் முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டினர். முதல் தவணையாக 20 கோடி வேண்டும் என்றும்.

31
அடுத்து 100 கோடி மதிப்பிலான விளம்பரங்களை தங்களுக்கு தரவேண்டும் என்றும் மிரட்டினர். ஒருகட்டத்தில் செய்வதரியாது இந்த விவகாரம் வெடித்து வெளிவந்தது.

32
100 கோடி?

இங்கே இதே போல் தான் நித்தியானந்தர் வீடியோ விவகாரம் எல்லாம். இப்படி வீடியோ வைத்து காசு பறிக்க முய்ச்சிப்பது முடியாது என்றால் வெளியிட்டு அவமானம் செய்து அதன் மூலம் தங்கள் பிடியில் இருக்கும் மற்ற நபர்களை மிரட்டுவது.

33
1 கோடி இரண்டு கோடி எல்லாம் இல்லை, கைமாறினால் பல 100 கோடிகளைப் பறிப்பது. இங்கே நக்கீரன் எல்லாம் மிக மிகக் கொடூரமான செய்தி கூட்டம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம் யார் மீது வேண்டுமானாலும் எழுதுவோம்.

34
செய்தியே தேவை இல்லை ஸோர்ஸ் சொன்னது என்ற என்ன செய்தி வேண்டுமானாலும் எழுதுவது கேட்டால் கருத்து சுதந்திரம் பேசுவது.

சமூக ஆர்வலர் என்று திரிபவன் பலர் பின்புலத்தில் இந்தச் செய்தி நிறுவனங்கள் கூட்டு உண்டு.

35
இயற்கை ஆர்வலர் என்ற பெயரில் போய் எதையாது சொல்லி போராட்டம் தூண்டலாம் – அதை ஆனந்த விகடன் போன்றவர்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டு மிரட்டுவர்.

36
பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை முதலீட்டாளர்கள் மீது அச்சம் கொண்டு ஒரு காலத்தில் இவர்களுக்கு பெரும் தொகையை வழங்கி வந்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் இப்போது ஒன்று இரண்டு என்றால் சரி.

37
ஒரு டஜன் கூட்டமே செய்தி நிறுவனம் என்ற பெயரில் இறங்கி விட்டதால் நிறுவனங்கள் விலகி நிற்கிறார்கள். இங்கே இந்த இயற்கை ஆர்வலர்கள் என்று உழைக்காமல் சொகுசாக திரிந்து எந்நேரமும் இயற்கை என்று பேசி கதை அளப்பவனை நம்பாதே.

38
எனவே செய்தி நிறுவனங்கள் / பத்திரிக்கையாளர்கள் முதல் வியாபார நோக்கமே.

“சமூகத்தில் அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள் – நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என்று பிரபலமானவர்கள், தொழில் அதிபர்கள் இப்படி பிரபலமான மனிதர்கள் பின்னால் இருக்கும் ரகசியத்தைத் தேடி தெரிந்து கொள்ள வேண்டும்.

39
அதை வைத்து மிரட்டி காசு பார்க்கவேண்டும். இது நீக்கமற இந்த நாடு முழுவதும் எல்லாச் செய்தி ஊடகத்திலும் நடக்கிறது என்பது தான் உண்மை”. இதில் பெண் பத்திரிக்கையாளர்கள் தனி ரகம்.

பணம் பரிப்பது மட்டும் தான் பணம் சம்பாரிக்கும் வழியா?

40
இல்லை அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அனைவரிடமும் அவர்களுக்கு ஆதரவாகச் செய்திகள் வெளியிடவும் பணம் பெறுகிறார்கள். பொதுவாகச் செய்தி நிறுவனங்கள் நல்ல விசயம் சொல்வதை விடக் கெட்ட விசயம் வேகமான எளிதாக மக்களுக்குப் பரப்ப முடியும்.

41
நாளு குடும்பம் நல்லா இருக்கு என்று செய்தி போட்டா பார்ப்பவர் விட நாடு குடும்பம் நாசமா போச்சு என்று போட்டால் பார்ப்பவர் அதிகம்.

எனவே இந்த எதிர்மறை பிரச்சாரம் தான் செய்தி ஊடகங்களின் பலமே தவிர நல்ல விசயங்கள் பேசுவது அல்ல.

42
எந்தக் கட்சிகளுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்பது விஷயம் அல்ல. எந்தக் கடைசிக்கு எதிராகப் பேச வேண்டும் என்பது தான் முக்கியம். இதை முடிவு செய்வது இந்த டீவி முதலாளிகள் –

43
அதற்கு அந்த முதலாளிகளுக்கு அவர்கள் வீட்டு நாய்க் குட்டி போல் வேலை செய்யும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் செய்தியாளர்கள் வேலை”. தேர்தல் நேரங்களில் முதல் செய்தி முதல் முடிவு செய்தி வரை அனைத்துக்கும் காசு வாங்கும் கூட்டமே இங்கே இருக்கு.

44
{தேர்தல் வந்தால் மக்கள் குஷியாக இருப்பார்களோ இல்லையோ ஆனால் செய்தி நிறுவனம் அனைத்துமே செய்ய வருமானம் தான்.}

இது மட்டும் அல்ல சேர் மார்கெட் முதல் IPL கிரிக்கெட் போட்டி வரை அனைத்திலும் இவர்கள் செய்தி பரப்பி காசு சம்பாரிக்கும் யுக்தி அடக்கம்.

45
வெறும் விளம்பரம் மட்டும் தான் இவர்கள் வருமானம் என்று நினைக்க வேண்டாம். பல ஆயிரம் வழி இருக்கு இங்கே செய்தி நிறுவனம் நடத்தி காசு பார்க்க. 

46
இன்னும் ஒரு எடுத்துக்காட்டு:

செய்தி: 2016ல் இந்தியா முழுவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் தக்குதல்கள் சம்பவம் காரணமாக (Crime/Atrocities against Scheduled Castes) சுமார் 40,743 வழக்குகள் பதிவாகியுள்ளது.

47
இதில் 10,426 வழக்குகள் பதிவாகியுள்ளது உத்திரபிரதேசத்தில் – கேரளாவில் 810 வழக்குகள் பதிவு.

இதே செய்தி எப்படி வெளியிடப்பட்டது?

“உத்திரபிரதேசத்தில் அதிகம் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதல் சம்பவம் என்பது போல்- கேரளாவில் குறைவு என்பது போல்”.

48
உண்மையில் கேரளாவில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 30.4 லட்சம் என்றால் உத்திரபிரதேசத்தில் அது 4.13 கோடி மக்கள். எனவே முதலில் இப்படி மொட்டையாக ஒப்பிடுவதே தவறு அல்லவா? அதைவிடக் கொடுமை இந்தத் தகவல் வெளியானது 2017 தீபாவளி நேரத்தில்.

49
அப்போது தான் பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்கும் நேரம். ஆக 2016 வரை புள்ளி விவரம் கூறுவது அக்கிலேஷ் ஆட்சியின் நிர்வாகம் பற்றியது. அதைக் எடுத்து முன்வைக்கத் தெரியாத அளவிற்குச் செய்தியாளர்கள் வெறுப்பு பிரச்சாரம் இருக்கிறது இங்கே.

50
இதன் மூலம் பிஜேபி ஆளும் மாநிலங்களில் தாக்குதல் அதிகம் கம்யுனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் குறைவு என்பது போல் தோற்றத்தை உருவாக்கிவருகிறார்கள்.

அதனால் கூறுகிறேன் “இந்த நாட்டின் கேவலமான ஒரு கூட்டம் இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் தான்”.

51
இங்கே தமிழகத்தில் செய்தி நிறுவனம் நடத்தும் நபர்கள் யார் யார் அவர்கள் பின்புலம் கொஞ்சம் தேடி பாருங்கள்.

01) புதிய தலைமுறை – கல்வி தந்தை நடத்தும் செய்தி நிறுவனம். (கல்வியை வைத்து கொள்ளை அடித்தவர் எல்லாம் இன்று கல்வி உலகின் தந்தையானது ஒரு சமூகத்தை கேவலமே தவிர வேறு என்ன!)

50
இந்த புதிய தருதலை என்றாவது SRM பல்கலைக்கழகம் இத்தனைவருசமாக அடித்த கல்வி கொள்ளையைப் பற்றி பேசுமா? இத்தனை வருடங்களாக சில நுறு கோடி மெடிக்கல் சீட்கள் விற்பனை செய்ததன் மூலம் அடித்த கொள்ளையை பற்றி விவாதம் நடத்துமா? நடத்தாது.

51
பின் இதில் வேலை செய்பவர்கள் எந்தப் பத்திரிக்கை துறையின் தர்மத்தின் கீழ் வேலை செய்கிறார்கள்? ஒரு நல்ல நேர்மையான மனிதன் என்றால் அதைச் செய்தியாக வெளியிட வேண்டும் விவாதம் செய்ய வேண்டும் தானே?

52
அப்போ இந்தச் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் செந்தில், காத்திகேயன், கார்த்திகை செல்வன் எல்லோரும் தங்கள் முதலாளி கொடுக்கும் பணத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் தவிர அதைத் தாண்டி எதுவும் இல்லை.

53
அப்போ அவர்கள் என்ன செய்தி வெளியிடுவர்? தங்கள் முதலாளி கண் அசைவுக்குக் காத்திருக்கும் ஒரு வளர்ப்பு நா.க்கும் இவர்களுக்கு என்ன வித்தியாசம்? {என்று மக்கள் நினைக்க மாட்டார்கள்}

54
02) நியுஸ்7 – மணல் மாஃபியா வைகுண்ட ராஜன் அவர்களின் செய்தி நிறுவனம்.

வாய்கிழிய வசனம் பேசும் இந்தச் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் நெல்சன் சேவியர், சுகிதா, மனோஜ் கோபாலன் என்று எவரையாது

55
ஒரு நாள் வாயைத் திறந்து இவர் முதலாளி நடத்தும் இடங்களில் நடந்த IT ரெயிட் பற்றிப் பேச சொல்லுங்கள்? வராது வாயில் வார்த்தையே வராது. காரணம் வார்த்தைகள் இல்லை என்பதால் அல்ல – வயிற்றுக்கு வேறு பிழைப்பு இல்லை எனவே இந்த பிழைப்புக்கு ஏற்ற வேடம் போட வேண்டும் அல்லவா அதான்.

56
வேறு எதுவும் இல்லை.

எனவே இப்படி இங்கே உள்ள செய்தியாளார்கள் என்ற பெயரில் பெரும்பாலும் ஒரு வெக்கம் கெட்ட கூட்டம் தான் வாயை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை. 

57
இறுதியாக:

இந்த விரைவு செய்தி – தற்போதைய செய்தி இதற்கெல்லாம் மக்கள் ரியாக் செய்வது சமூக வலைதளங்களிக் கொஞ்சம் நிறுத்துக் கொள்ளவும். வெளிப்படையாகக் கூறவேண்டும் என்றால்

58
பொதுவாக இங்கே வசதிவாய்ப்பு கிடைத்த நபர்கள் செய்தி நிறுவனங்களை ஆரம்பிக்க ஆசைப்படுகிறார்கள் அதன் மூலம் அரசை, சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்களை, அரசியல் கட்சிகளை, தொழில் அதிபர்களை என்று அனைவரையும் மிரட்டி வாழமுடியும்.

59
ஒரு தனி அரசங்கமே இவர்களால் நடத்த முடியும் எவனும் கேள்வி கேட்பேன் எவன் பேரையும் கெடுப்பேன் என்ற திமிர் பிடித்த அழைக்கிறார்கள் செய்தி நிறுவனம் நடத்தும் முதலாளிகள். ஆனந்த விகடன் எல்லாம் தனி ரகம்.

60
தாங்கள் சொல்வது தான் செய்தி என்றும் தங்களை மீறி இங்கே எவனும் இருக்க முடியாது என்ற பச்சை கேவலமான அருவருப்பான எண்ணம் காரணம் தான் பத்திரிக்கை துறை நடத்தத் தவிர வேறு நாட்டின் எந்த நலனும் பற்றி அக்கறையல்ல காரணம்.

61
நேரடியாக இந்த செய்தியாளர்களைச் சந்திப்பதைவிட ரஜினி அவர்கள் கருணாநிதி போன்று கேள்வி-பதிலாக தானே உருவாக்கி வெளியிடுவது தான் நல்லது. {வீடியோவாக கூட வெளியிடலாம்.}

62
{மிக எளிமையாக கூறினால் இங்கே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அதை நேர்மையாக எதிர்கொள்ள இந்த திமுக, திக கூட்டத்துக்கு என்றுமே வக்கு இருக்காது. அதன் வெளிப்பாடு தான் இன்றய செய்தி திரிப்புகள். இது மட்டும் 100% உண்மை.}

63
இந்தத் தேசத்தை பிடித்த வியாதி செய்தி நிறுவனங்கள் – அவை வெளியிடும் விரைவு செய்திகள்.

-மாரிதாஸ்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!