கேள்வி: என்ன தான் காஷ்மீரில் பிரச்சனை. அந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்க என்ன காரணம்? -ஜெகநாதன், சேகர், சந்திரா இன்னும் சிலர்
1
சில பொதுவான வரலாற்றை நுட்பமாக தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. ஏன் என்றால் தமிழ் நாட்டில் கடந்த 50 வருடம் மேலாக திராவிட கட்சிகள் தங்கள் இஷ்டம் போல வரலாற்றை பள்ளிகளில் திரித்து உண்மையை உணராமல் செய்துவிட்டமையால் இங்கே பலருக்கு வரலாறு ஒழுங்க தெரியாது.
2
அதிகபட்சம் தெரிந்தால் இந்த பகுத்தறிவு பெரியார், தாத்தா காந்தி , மாமா நேரு என்று சுத்த முட்டாள்தனமான வரலாறு தான் இவர்கள் படித்து வளர்ந்தது.
இதோ கொஞ்சம் வரலாறு. அதன் பின் உண்மை விளங்கும்.
3
1937 பிரிட்டன் பெரும்பாலான அதிகாரங்களை இந்தியர்களுக்கே ஆட்சியில் பகிர்ந்தளிப்பது என்று முடிவை அறிவித்தது. அதன் படி அதிகாரம் யார் பக்கம் செல்ல வேண்டும் என்பதற்க்கு 1937ல் தேர்தல் நடத்துவதாக அறிவித்தது பிரிட்டிஸ்(INDIAN PROVINCIAL ELECTIONS, 1937).
4
அந்த தேர்தலில் மொத்தம் 1585 இடங்கள். அதில் காங்கிரஸ் 707 , முஸ்லீம் லீக் 106 இடங்களில் வெற்றி. (இங்கே நமது அன்றய மெட்ராஸ் 59ல் காங்கிரஸ், 9 இடத்தில் முஸ்லீம் லீக் வெற்றி.)
5
இந்த தேர்தலில் தான் ஜின்னா மிகப்பெரிய அளவு கருத்துவேறுபாடு உருவானது. ஏன் என்றால் அன்று காங்கிரஸ் ஜின்னாவை முஸ்லீம்கள் பிரதிநிதியாக சேர்த்து கொண்டிருந்தால் அவருக்கும் ஒரு அங்கீகாரமாக இருந்திருக்கும்.
6
ஆனால் காங்கிரஸ் அபுல் கலாம் ஆசாத் அவர்களை கொண்டு JAMIAT ULEMA HIND நட்பு பாராட்டினார். இது முஸ்லீம்களை பெரும்பான்மையாக அங்கீகாரம் பெற்ற ஜின்னாவை அவமானம் செய்வது போல் ஆகிவிட்டது. இது மிகமுக்கிய காரணம் பாகிஸ்தான் உருவாக. இது ஏன் நடக்கவேண்டும்?
7
அதற்கு முன்னர் 1935களில் ஆரம்பித்தே மக்களிடம் சுதந்திரம் கிடைக்க போவதாக செய்திகள் உலாவ தொடங்கின. இந்திய விடுதலை.விடுதலை அடுத்து? இப்படியான விவாதங்கள் சென்றன.
சுதந்திரத்திற்க்கு முன்பே எப்படியான சூழல் நிலவியது என்றால் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையாக இருக்கவே முடியாது.
8
சுதந்திரம் கிடைத்தால் அதில் பெரும்பான்மையான ஹிந்துகள் நிச்சயம் வரலாற்றை காட்டி இஸ்லாமியரை ஒடுக்க முற்படுவர் என்று எண்ணம் பரவலாக முஸ்லீம் சமூகத்திடன் இருந்தது. அதற்கு காரணம் 18ஆம் நூற்றாண்டில் வந்து போன அலிக்கார் இயக்கம் ஆரம்பித்து இஸ்லாமியரிடயே பிரபலமான சையது அகமது,
9
பின்னல் 1906களில் தொடங்கபட்ட முஸ்லீம் லீக் உருவாக்கியர்களில் ஒருவரான NAWAB VIQAR UL MULK போன்றவர்களில் எண்ணத்தின் பிரதிபலிப்பு அப்படி தான் இருந்தது. எனவே பெரும்பாலான முஸ்லீம்கள் தனி நாடு ஆதரவு இருந்தது.
10
குறிப்பு: ஹிந்துகள் மீது- கஜினி முகமது , முகமது-பின்-காசிம் என்று 1000களில் தொடங்கிய இஸ்லாமியர்கள் தாக்குதல் முகாலாயர் ஆட்சி 1700கள் வரை மிக கொடுமைகள் நீடித்தது. இந்த காலகட்டத்தில் எல்லா கோவில்களும் இடிக்கபட்டு, அதன் செல்வங்கள் கொள்ளையடிக்கபட்டு , அந்த இடத்தில் மசூதிகள் வந்தன. 11
இந்த வரலாற்றில் ஏறக்குறைய 2கோடி ஹிந்து,பெளத்த, சீக்கிய மதத்தினர் கொலை செய்யபட்டனர். அவர்கள் கோவில்கள் சூறையாடபட்டு அந்த இடத்தில் மசூதிகள் வந்திருந்தன. இது வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய உண்மை. அசைக்க முடியாத உண்மை.
12
இந்த வரலாறு தான் தாங்கள் விடுதலை கிடைத்தால் ஹிந்துகளுடன் இனக்கமாக வாழமுடியாது என்று தோன்றகாரணமும் ஆகும். இதை தமிழகத்தில் உணர முடியாது இந்தியா முழுவதும் சென்று வந்தால் மிக எளிதில் உணரலாம். சில மாநிலங்கள் தவிர எந்த மாநிலத்திலும் ஆயிரம் வருடம் பழமையான கோவில் 99% இருக்காது.
13
இது வருந்ததக்க உண்மை. இதனால் இயற்கையாகவே ஹிந்து,சீக்கியர், பெளத்தர்களுக்கும்- இஸ்லாமியருக்கும் பகை தலைவர்கள் மத்தியில் இருந்தே வந்தது.
ஹிந்துகளுக்கோ இந்திய வரைபடம் என்பது ஆப்கன் , பாகிஸ்தான், இந்தியா, வங்காளாதேசம் இவை அனைத்தையும் கொண்ட ஒரு ஹிந்து தேசம்.
14
அது 5000 வருடம் மேலாக வேதம் உருவான காலம் முதல் இருந்த தேசம் இது. மதமாற்றம் நடந்து பெரிய அளவு கோவில்கள்,செல்வங்கள் இழந்து நின்ற மக்களுக்கு அந்த இழந்த சுதந்திரம் மீண்டும் பெறபோகிறோம் என்ற ஆனந்தம்.
15
இந்த சுதந்திரம் மீண்டும் இந்த தேசத்தை ஹிந்து தேசமாக உருவாக்க சரியான வாய்ப்பு என்று ஒரு பக்கம் ஹிந்து சமய பெரியவர்கள், ஹிந்து இயக்கங்கள், தலைவர்கள் ஆசை. அப்படி பார்த்தால் உலகத்திலேயே மிக பெரிய நாடாக இந்தியா ஹிந்துகள் தேசமாக உருவாகும்.
16
எனவே பாகிஸ்தான் பிரிவினை பேச்சு ஒருபக்கம், ஒன்றுபட்ட பரந்து விரிந்த ஹிந்துகள் தேசமாக இந்தியா என்ற ஆசையில் இன்னொருபக்கம். ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான விருப்பம். இதுவே போதும் இந்தியாவில் 1000வருட பகை வெடித்து சிதற.
17
எனவே பாகிஸ்தான் பிரிவினை பேச்சு ஒருபக்கம், ஒன்றுபட்ட பரந்து விரிந்த ஹிந்துகள் தேசமாக இந்தியா என்ற ஆசையில் இன்னொருபக்கம். ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான விருப்பம். இதுவே போதும் இந்தியாவில் 1000வருட பகை வெடித்து சிதற.
18
1947 ஜீலை மாதம் மவுண்ட்பேட்டன் அறிவித்தார் இந்தியா பிரிவினையுடன் புதிய நாடாக உருவாக போகிறது என்று. தேதி 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 என்று குறிப்பிட்டார்.
19
இந்திய பாகிஸ்தான் விடுதலை சார்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய விடுதலை சட்டம் இயற்றப்பட்டது என்று பெயர். 1947 ம் வருடம் ஜீலை மாதம் 4 விவாதிக்கப்பட்டு ஜீலை மாதம் 18 தேதி இந்த சட்டத்திம் இயற்றபட்டது. இந்தக் சட்டப்படி மவுண்ட்பேட்டன் அறிவித்தார்.
20
இனி முழுவதும் கலவரம் ஆரம்பம் ஆகும்.ஹிந்து முஸ்லீம் கலவரம், சீக்கியர் முஸ்லீம் கலவரம். உலகத்தின் மிகபெரிய பாகபிரிவினைக்கு நாடு தயாரான நேரம்.
21
பிரிவினையை தவீர்த்திருக்கலாமா?
இந்த முடிவை முதலில் காந்தியிடம் மவுண் பேட்டன் கேட்ட போது பிரிவினை வேண்டாம், நாட்டை இஸ்லாமியரே ஆட்சி செய்யட்டும். அதில் எனக்கு பிரச்சனை இல்லை என்றார். ஆனால் ஆரம்பத்தில் ஏற்றாலும் ஜின்னா பின்னர் மறுத்துவிட்டார்.
22
குறிப்பு : 1947 ஏப்ரல் மாதம் மட்டும் பலமுறை சந்தித்து மவுண்ட்பேட்டன் ஜின்னா சந்திப்பு நடந்தாலும் ஜின்னா உறுதியாக இருந்தால் பாகிஸ்தான் வேண்டும் இஸ்லாமியருக்கு. 1913ல் தான் முஸ்லீம்லீக் கட்சியில் சேர்ந்தாலும் காங்கிரஸ் மீது அவருக்கொன்று அப்போது பகை இல்லை.
23
1916ல் லக்னோ உடன்படிக்கை வரை அப்படியே. அந்த நேரம் தான் காந்தியும் பிரபலம் அடையும் நேரம் , ஜின்னாவும் பிரபலம் அடையும் காலம். ஹிந்துகள் காந்தி – ஜின்னா முஸ்லீம்கள் என்று சொல்லபடாத தலைவர்களாக நின்றனர்.
24
1920 முதலாம் உலக போர் மூண்ட நேரத்தில் ஒட்டமான் ராஜியம் வீழ்ச்சியை எதிர்த்து உருவான கிலாபத் இயக்கத்திற்க்கு காந்தி ஆதரவு கொடுத்தார். ஒட்டமான் அரசை காப்பாற்ற , பிரிட்டீஸ் அரசை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பமானது. இதனால் இஸ்லாமியர்களிடமும் காந்தி பிரபலாமாகவே ஆகிவிட்டார்.
25
ஜின்னாவை விட இப்போ காந்தி பிரபலமான நபர்.
தேசதலைவர்கள் என்ன செய்தனர்?
1947ல் ஆங்கிலேயர் இந்தியா பாகிஸ்தான் என்று பிரித்து விடுதலைதர போவதாக அறிவித்ததும், கொஞ்சம் நஞ்சம் அல்ல முழுமையாகவே காந்தியின் பெயர் கெட்டது.
26
முன்னரே சில முக்கியமான காரணங்களால் காந்தி ஹிந்துகளிடமும் கெட்ட பெயரை சம்பாதித்திருந்தார். முதலாம் உலக போரின் போது பிரிட்டீஷ் படைக்கு ஆதரவாக நின்றது,1922 செளரி செளரா பின்னர் , 1928ல் சுதந்திரம் கேட்காமல் DOMINION STATUS கேட்டதால் சுபாஸ் சந்திர போஸ் கோபம் கொண்டு
27
காங்கிரஸைவிட்டு வெளியேறியது,1931ல் பகத் சிங், ராஜ குரு , சுகதேவ் காப்பாற்றாமல் விட்டது, சுதந்திரத்திற்க்கு இன்னொரு வாய்ப்பாக வந்த 1939 இரண்டாம் உலக போரின் போது எந்த போராட்டமும் நடத்தாமல் பிரிட்டீஷுக்கு ஒத்துழைப்பு வழங்கியது இப்படி சிலபல காரணங்களால்
28
காந்தி வெகுவாக மதிப்பிழந்தார் என தெரிகிறது. இத்தோடு இந்தியா பிரிவினைக்கு இவரும் ஆதரவு அளித்துவிட்டார் என்றதும் சொல்லவே வேண்டாம் பெரிய அளவு அதிர்வு உருவாகிவிட்டது. இனி காந்தியை நம்புவது தவறு. ஆனால் காந்தி உண்மையில் பிரிவினைக்கு கடைசிவரை ஆதரவு தரவில்லை.
29
1947ல் காந்தியை நம்பகதன்மை இல்லை , ஜின்னாவின் மீது பகையாக ஒருபக்கம் என்று ஹிந்துகள்,இன்னொருபக்கம் பிரிந்து போவதே ஒரே குறிக்கோளாக நாட்டை பிளவுபடுத்த ஜின்னாவுடன் முஸ்லீம் தலைவர்கள்.
30
பிரிவினை கேட்டு முஸ்லீம் லீக் – ஹிந்து இயக்கங்களிடயே தொடர் கலவரங்கள் காரணமாக தான் அன்றைய தேதியில் காங்கிரஸ் பிரிவினையை ஏற்றுகொண்டது.
எனவே தலைவர்கள் கையில் எதுவும் இல்லை. வேறுவழியும் இல்லை.
ஹிந்துகள் கனவு தேசம் உடைந்தது – முஸ்லீம் லீக் நினைத்ததை சாதித்தது.
31
இனி பாகபிரிவினை.?
ராணுவம் முதல் ரிசர்வ்பேங்க் பணம் தொட்டு ஆபீஸ் சேர்கள்வரை அனைத்தையும் கணக்கிட்டு பிரித்து கொள்வது. இதில் பிரச்சனை இல்லை. ஹிந்துகள் சார்பாக (HIRUBHAI M. PATEL) HM படேல், முஸ்லீம்கள் சார்பாக சவுத்திரி முகமது பிரிவினைக்கான வேலைகளை இறங்கினர்.
32
இந்த வேலை இனிதே முடிந்தது நடந்தது.
அடுத்து எல்லையை பிரிப்பது. இனி தான் நாட்டில் மிக பெரிய வன்முறை மூண்டுவிடும். இனி அடுத்த மூன்று மாதம் வரை தொடர் கலவரமும் கொலையும் கற்பழிப்புமாக பெரும் கொடுமைகள் உச்சத்தை தொடும்.
33
1947 ஜீன் SIR CYRIL RADCLIFFE என்பவர் தலைமையில் BOUNDARY COMMISSION உருவாக்கினர். உண்மையில் இந்த கமிட்டி இந்தியா என்ற தேசத்தை பிரச்சனை இல்லாமல் பிரிக்க தேவையான காலகட்டம் அவர்களிடம் அப்போது இல்லை.
34
ஜீன் மாதம் நெருங்கிய 2மாதத்தில் ஆகஸ்ட் உள்ளாக இந்த எல்லை பிரிவினையை முடிக்க முடியுமா என்ற நெருக்கடியில் SIR CYRIL RADCLIFFE காலவகாசம் இருந்தால் நல்லது என்று கேட்க. ஜின்னா கட்டாயம் பிரிவினையை முடித்தே தீரவேண்டும் என்று பிடிவாதமாக நின்றுவிட்டார்.
35
எனவே பிரிவினை கோடு போட ஆரம்பித்தனர்.
இதன்படி 1947ல் ஜீலை மாதம் வங்காளம், சிந்து , பஞ்சாப் மற்றும் பலூகிஸ்தான் இந்த பகுதிகளை கொண்ட நாடாக பாகிஸ்தான் வரையறை செய்யபட்டது.
36
சிந்து பகுதியில் நடக்கும் கலவரங்களால் காஷ்மீர் சேர்த்து எல்லை வகுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றது அந்த கமிட்டி. சரி உறுதியாக இருந்ததால் ஆகஸ்ட் மாதமே சுதந்திரம் கொடுக்கபட்டது. ஆனால் எல்லை தெளிவாக வரையரையாகாமல் தான் சுதந்திரம் கொடுக்கபட்டது.
37
அடுத்த பிரச்சனை கொஞ்சம் குழப்பமானது.. அது 565 சமஸ்தானங்களை (PRINCELY STATES OF BRITISH INDIA) இணைப்பை நல்லபடியாக முடிக்க வேண்டும். அது ஏன்?
38
இந்தியா என்றாலும் பிரிட்டீஸ் ஆட்சியாளார்கள் ஆட்சி நடத்த அனுமதியை அரசர்கள், ஜவாங்கள் என்று சமஸ்தானங்களிடம் இருந்து பெற்று போதுமான வருவாயை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு தான் ஆட்சி செய்தனர்.
39
எனவே சமஸ்தானம் எல்லாம் அன்றும் கூட அந்த அந்த ஜாவான், அரச குடும்பம் போன்றவருக்கே அதிகாரம் இருந்தது. அப்படி தான் பிரிட்டீஸ் அவர்களுடன் உடன்படிக்கை செய்து இருந்தனர்.
40
இதை தீர்க்க 565 சமஸ்தானங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினார் என்றாலும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலரை ராணுவம் காட்டி, சிலரை புரியவைத்து என்று அனைத்துவழிகளிலும் 552 சமஸ்தானங்களில் இணைத்தார் சர்தார் வல்லபாய் பட்டேல்.
41
ஜீனாகட் , ஹைதராபாத் , காஷ்மீர் இவை மட்டுமே ஆரம்பத்தில் பிரச்சனையாக இருந்தது. இதில் எல்லை தெளிவுபடுத்தாத ஒரே சமஸ்தானம் காஷ்மீர். மற்றவை ராணுவ நடவடிக்கை மூலம் இணைத்தோம் என்று தான் கூறவேண்டும். அதற்க்கு வலுவான பூலோக ரீதியான காரணம் இருந்தது.
42
ஹிந்துகள், சீக்கியர்கள் தங்கள் அனைத்து சொத்துகளையும் விட்டு இந்தியாவை நோக்கி தங்கள் நாட்டை நோக்கி பெரும் பயணத்தை தொடங்கினர் மனதில் மரணவலியுடன். இந்த பக்கம் தங்கள் புதிய தேசத்தை ஜின்னா வடிவமைத்துவிட்டார் என்ற ஆசையில் முஸ்லீம்கள் பாகிஸ்தானை நோக்கி கிளம்பினர்.
43
ஜின்னா மாற்றுமதத்தினர் யாருக்கும் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று தெரிவித்துவிட்டார். இது பாகிஸ்தான், முஸ்லீம்கள் தேசம் என்று தெளிவாக கூறிவிட்டார். ஆனால் இங்கே பட்டேல் முஸ்லீம்கள் கட்டாயம் செல்லவேண்டும் என்று இல்லை.
44
இந்தியா பிடித்தால் இருந்து கொள்ளலாம், இது அனைவருக்குமான நாடு தான். ஹிந்துகள் பரந்த மனபான்மையோடு ஏற்கிறோம். ஆனால் பாகிஸ்தான் பிடித்தால் செல்லலாம் என்று அறிவித்தார்.
45
ஏறக்குறைய 2 இருபக்கமும் சேர்த்து 2 கோடி மக்கள் இடம்பெயர்ந்தனர். படுகொலைகள் மிகபெரிய அளவில் நடந்தது. உலகமே அதிர்ச்சியில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்த நேரம்.
46
மிக பெரிய குழப்பம் எங்கே உருவானது என்றால் சிந்து மாகணத்தில் தான். லாகூரில் சீக்கியர் பெரும்பான்மை கொண்ட சிந்து மாகணம் இரண்டாக பிரிந்து போனது. புனித நகரமான அமிர்தரஸ் இந்தியாவுடன் வந்தது. ஆனால் லாகூர்???
47
அவசரகதியில் எல்லை பிரிவினை வேகம் காட்டியதால் சிந்து மகாணம் முழுவதும் சீக்கியர்களுக்கும்,முஸ்லீம்களுக்கு ஆகபெரிய அறிவிக்கபடாத போர் நடந்தது. தினமும் சில ஆயிரம் உயிர்கள்,பெண்கள் கற்பழிப்பு, குழந்தைகள் கொலை என்று உச்சகட்ட.
48
(இதை நான் முழுவதும் விளக்க விரும்பவில்லை. இதை ஒரு வரியில் கூறிவிடமுடியாத மிகபெரிய வன்முறை.)
49
இந்த பெரும் குழப்பம், வன்முறைக்கிடையே நேரமும் இல்லாததால் சரியாக காஷ்மீர் எல்லை பிரிக்கபடவில்லை. ஏன் என்றால் குருதாஸ்ப்பூர் உட்பட முக்கியமான 3 தாலுக்காகள் சரியாக பிரித்தால் மட்டுமே காஷ்மீரில் நிர்வாகத்தை இந்தியா எளிதில் மேற்கொள்ளமுடியும்.
50
சுதந்திரம் – ஆகஸ்ட் மாதம் 15 தேதி நல்ல நாள் இல்லை அதனால் 14 இரவு வாங்கிகொள்வது நாட்டுக்கு நல்லது என்று புரோகிதர்கள் கூற இரவில் வாங்கிகொண்டோம்.
51
பிறந்துவிட்டது சுதந்திரம். கொண்டாடுவதற்க்கு ஒன்றும் இல்லை. எல்லை பிரச்சனை தீர்க்கபடவில்லை. அத்துடன் ஊரெல்லாம் கலவரம். இந்தியாவை நோக்கி வரும் மக்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். இதை தொடர்ந்து சட்டங்கள் உருவாக்கவேண்டும்.
52
இது ஹிந்துகள் தேசமாக தான் பாகபிரிவினை நடந்தது புரிகிறதா?. ஆக விருப்பம் இருந்தால் பாகிஸ்தான் செல்ல அனுமதியும் அழிக்கபட்டது. யாரையும் கட்டாயமும் படுத்தவில்லை. ஏன் என்றால் ஹிந்துகள் சீக்கியர் இணைந்து வாழ்வதில் பிரச்சனை இல்லை என்று தலைவர்கள் முடிவு செய்தனர்.
53
இதில் கஷ்மீர் பிரச்சனையாக இன்றுவரை நீடிக்க காரணம் ?
நேரு தான்.
நேரமின்மையும் , குருதாஸ்ப்பூர் இந்தியாவுடன் இணைக்கும் விவகாரமும், சிந்து மகாணத்தில் நிலவிய பெரும் வன்முறை அது மேலும் குழப்பம் உருவாக்காமல் இருக்க விடுதலைக்கு பின்னர் வகுத்துகொள்ள முடிவானது.
54
தெளிவான எல்லை வகுக்காமல் போனதன் காரணம் இதுவே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்த நிலையில் எதற்க்கு காஷ்மீருக்கென்று சிறப்பு அதிகாரம்? 552 சமஸ்தானங்களுக்கு இல்லாத சிறப்பு என்ன வேண்டி இருக்கு காஷ்மீருக்கு?
55
552 சமஸ்தானமும் இந்திய ஒன்று பேசி , இல்லை ரானுவத்தை காட்டி தான் இணைத்தனர்.உண்மையில் இணைப்பின் போது இந்தியா சமஸ்தான ஜவான்கள், நாவாப் , மன்னர்களுக்கு என்று சில சலுகைகள் வழங்கினோம், அது பின்னர் நீக்கிவிட்டு எல்லாருக்கும் ஒரே சட்டமாக மாறிவிட்டது.
56
ஆனால் இன்று வரை காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துடன் இருப்பது காரணம் இந்த ஆர்டிக்கல் 370.
அதன்படி
தனி கொடி , தனி சின்னம்.
மற்ற மாநிலங்கள் போல் ஆட்சியை கலைக்க முடியாது, குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவர முடியாது.
57
எந்த சட்டமும் நேரடியாக இந்திய பாரளுமன்றம் இயற்றமுடியாது.அதற்கு காஷ்மீர் சட்டசபை அனுமதி வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்றவை பொருந்தாது. அங்கே கிடையாது.
58
காஷ்மீர் பெண் வேறு மாநில ஆண்களை திருமணம் செய்தால் காஷ்மீர் உரிமையை இழந்துவிடுவார்.
நாட்டில் அவரசநிலை பிரகடனம் செய்யும் போது காஷ்மீர் மாநிலத்தில் செய்ய முடியாது.
பிற மாநிலத்தவர் யாரும் அங்கே நிலம் வாங்க முடியாது.
59
இவ்வளவு சலுகைகள் ஏன் காஷ்மீருக்கு மட்டும்? ஏன் என்றால் மற்றவை பட்டேல் இணைத்தார் நமக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.
60
ஆனால் நான் பெரிய நடுநிலையாளன் என்று நேரு எதோ அவர் வீட்டு சொத்தை பிரிப்பது போல ரெம்ப பெருந்தன்மையாக நடப்பதாக நினைத்துகொண்டு இந்த 370 சிறப்பு அங்கீகாரம் தரும் சட்டத்தை கொண்டுவந்தார்.
மிக முக்கியம் அரசியல் ஷரத்து 370 தற்க்காலிகமானது என்று தான் நேரு கூறினார்.
61
இதை சிலர் அது 90% முஸ்லீம்கள் உள்ள சமஸ்தானம் என்கின்றனர். ஆம் இல்லை என்று யார் கூறினார். ஆனால் 90% ஹிந்துகள் பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்துவிட இஸ்லாமியருக்கு என்று தனி நாடும் கொடுத்தாகிவிட்டதே. சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்துவிட்டது.
62
பின்னர் என்ன? பிடித்தால் இந்தியா இல்லை பாகிஸ்தான் செல்லலாமே. அப்படி தானே ஹிந்துகள், சீக்கியர்கள் இங்கே வந்தனர்.
விருப்பம் இருந்தால் இந்தியாவுடன் இருக்கலாம் இல்லை என்றால் தாரளாமாக கிளம்பலாம் என்று இன்று காம்பீர் முதல் அனைவரும் சொல்வது இதனால் தான்.
63
இது போதாதென்று ஆண்டுக்கு இந்த காஷ்மீருக்கு செலவு செய்யும் தொகை மிக அதிகம். இது தேவையா?
இதனால் இன்றுவரை பிரச்சனை முடியாமல் தொடர்கிறது. ஆர்டிக்கல் 370 முழுமையாக ரத்து செய்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் நாடுகடத்துவது தான் சிறந்த வழி. ஜம்மு பிரச்சனை இல்லை.
64
காஷ்மீர் மட்டும் தான் பிரச்சனை.
இந்த நிலையில் அங்கே பாகிஸ்தான் உதவியுடன் போதுமான தீவிரவாத நடவடிக்கையும் அதிகம் ஆகிவிட, இன்று சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு போகிவிட்டது பிரிவினைவாதிகள் கூத்து.
65
இந்த பிரிவினைவாதிக்கு இங்கே நாம் தமிழர் திரு.சீமான் போன்ற துரோகிகள் ஆதரவு வேறு. நீ தனி காஷ்மீர் கேளு , நான் தனி தமிழ் நாடு கேட்கிறேன். இவர்கள் கூட்டணி எப்படி இருக்கு?
இது போல் நாலு பேரால் நல்ல நாட்டுபற்றுள்ள கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கெட்டபெயர்.
66
“ஒரு இனத்தினரை திருப்திபடுத்துவது என்பது வேறு, அவர்களுடன் இணக்கமாக வாழ்வது வேறு. ஆனால் இங்கே ஹிந்துகள் அனைத்து மதத்தவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். கொஞ்சம் வரலாறை படித்தால் யார் யாரை திருப்திபடுத்த வேண்டும் என்று புரியும்”.
67
இன்னொரு உண்மை சொல்லவா அப்படி வந்த காஷ்மீரில் மூன்று பகுதியில் ஒரு பகுதி தான் நம்மிடம் உள்ளது. ஒரு பகுதி பாகிஸ்தான், ஒரு பகுதி சீனாவிடம் உள்ளது. இப்போ மிச்சம் இருக்கும் பகுதியும் இருக்ககூடாது என்று சொல்வது என்ன சரி.
68
1971ல் பங்களாதேஷில் ஹிந்துகள் படுகொலை செய்யபட்டதும் எந்த நாடும் ஏற்க கண்டிக்க முன்வரவில்லை. இந்தியா மட்டுமே முன்வந்தது. மற்ற மதத்தினருக்கு ஒரு டஜன் நாடு இருக்கு. ஹிந்துகளுக்கு இருப்பது ஒரே நாடு இந்தியா(நேபாளம் மிக சின்ன நாடு).
69
தெற்காசியா முழுவதும் பரந்து விரிந்த தேசமாக கனவுடன் இருந்த ஹிந்துகளுக்கு மிச்சம் இருப்பது இந்த இந்தியா- அதுவும் ஒழிய வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் மதமாற்றம் வேலை வேறு.
எல்லா மதமும் இணைந்து வாழ்வோம் என்று கூறியது தான் தவறா?
70
இது என் தனிபட்டு கருத்து அல்ல, ஒரு கூட்டுமனசாட்சியாக கேட்கிறேன். எனக்கு ஹிந்துகள் மட்டும் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் அறவே கிடையாது. ஆனால் அனைவரும் இந்தியராக இருக்கவேண்டும் என்று கட்டாயம் எதிர்பார்ப்பேன்.
– மாரிதாஸ்
இது காஷ்மீரை நம்மோடு சேர்ப்பதற்க்கு முந்தய பதிவு.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பிரண்டை அல்லது #வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது.
முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
#செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும்.
இது கிழக்கு ஆசியாவில்
தோன்றிய ஒரு தாவரமாகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது
மருத்துவக் குணங்கள்
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
#திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.
ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும்.
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான
கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
#சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica)
என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய
பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார்,
மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.
சித்தரகத்தின் இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட, மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ. அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது.
#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.