அவர்களின் கொள்கையான இந்துத்துவத்தை அதாவது பார்ப்பனியத்தை வலுவாக எதிர்த்த கொள்கைகள். மதசார்பின்மை, பொதுவுடமை(கம்யுனிசம்), திராவிடம்.
முறையே இந்த மூன்றுக்கொள்கைகளையும் முன்னெடுத்த கட்சிகள்
கம்யுனிஸ்ட் கட்சிகள்,
திமுக.
இந்துத்துவா இன்று இருக்கும் பலத்திற்கு அவர்கள் அடித்தளம் போட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது. தங்களை வலுவாக எதிர்க்கும் கருத்தியல்களை நீர்த்துப்போகச்செய்வது அவர்களின் முதல் வேலை.
காங்கிரசின் மூலக்கொள்கையான மதச்சார்பின்மை என்பதை
கம்யுனிசம் என்பதையும் இந்துத்துவம் அடியோடு வெறுக்கும். கம்யுனிசத்தின் மூலக்கொள்கை மதங்களையும், முதலாளித்துவத்தையும் எதிர்ப்பது தான். மதமும் முதலாளித்துவமும் இந்துத்துவத்தின் இரண்டு கண்களாக இருக்கிறது. ஆகவே, கம்யுனிசத்திற்கு எதிரான பரப்புரைகளை ஆழமாக விதைத்தார்கள்.
- ராஜராஜன். ஆர்.ஜெ