My Authors
Read all threads
சோழர்களுக்கு முன் பார்ப்பனியத்தை அதிகாரத்தில் அமர்த்தியது சேரர்கள் தான்!முதலாம் பராந்தகன் காலத்தில், சேர நாட்டில் அரசனை விட அதிக அதிகாரம் படைத்த ஆளுமைகளாக இருந்தது பார்ப்பனர்கள் தான். சேர நாட்டுடனான உறவின் வழியாக தான் பார்ப்பனியம் சோழ அதிகார வட்டத்துக்குள் நுழையுது.
செம்பியன் மாதேவியின் பங்கும் இதில் முக்கியமானது. ராஜ ராஜன் அதிகாரத்துக்கு வர முன்னமே பார்ப்பணியத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. ராஜ ராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்குட்பட்ட நிலங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, பார்ப்பனியமும் பரவியது.
பார்ப்பனியத்தை ராஜ ராஜனும், சோழர்களும் தான் கண்டுபிடித்தார்கள் என்றார் போல் கதை விடுவது எல்லாம் வரலாற்று திரிப்புகள். பார்ப்பனியத்தை சோழர்கள் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் சேரர்களிடம் செலுத்திய அதிகாரத்தை சோழர்களிடம் பார்ப்பனர்களால் செலுத்த முடியவில்லை.
சோழர்கள் பார்ப்பானை கோவிலுடன் நிறுத்திவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். Practically speaking பார்ப்பானின் கட்டுப்பாட்டில் சோழர்கள் இருந்திருந்தால், அவர்கள் பேரரசாகியிருக்க முடியாது. Let me prove this case.
வரலாற்றில் சோழ தேசம் மீண்டெழ காரணமாக இருந்தது விஜயாலயன். விஜயாலயன் ஆட்சி செய்த காலத்தில் சேர நாட்டில் என்ன மாதிரியான அதிகார கட்டமைப்பு இருந்தது என்று முதலில் பார்ப்போம்.
விஜயாலயன் நிலங்களை வென்று மீண்டெழுந்து சோழ அரசின் முதல் அரசனாக ஆட்சியில் அமர்ந்த காலத்தில், சேர நாட்டை ஆண்ட குலசேகர அரசனின் பெயர் 'ஸ்தான ரவி வர்மா'.
2018இல் வெளிவந்த History and historiography in constituting a region: the case of kerala என்ற ஆய்வு கட்டுரையில் "One of the factors responsible for the formation of the state and the peculiar character it had as distinct from the rest of South India was the rise of Brahmanical
Settlements in the river valleys of Kerala" என்கிறது. மற்ற தென்னிந்திய அரசுகளிடம் இருந்து சேர நாட்டை வேறுபடுத்திய அதன் அரச உருவாக்கத்தில் பார்ப்பானுக்கு இருந்த பங்கு தான் என்கிறது வரலாறு. அப்ப விஜயாலயன் ஆட்சி காலத்தில் சேர நாடு ஒரு Brahmin oligarchyஇன் கட்டுப்பாட்டுக்குள்
இயங்கி வந்தது. இன்னும் சொல்ல போனால், பார்ப்பான் தான் சேர நாட்டில் அரசாண்டான். விஜயாலயனுக்கு பிறகு வந்த ஆதித்தன், சேர நாட்டுடன் உறவு வைத்திருந்தான், நெருங்கி பழகினான், இது பராந்தகன் காலத்திலும் தொடர்ந்தது.
இந்த உறவின் ஊடாக தான் பார்ப்பனியம் சோழ தேச அதிகார வட்டத்துக்குள் நுழைகிறது. திராவிட இயக்க தோசை மாறன்கள்,சுபவீக்கள் இதை எல்லாம் விவரிக்க மாட்டார்கள். சரி அலுவலாக இருக்கிறேன், will continue this thread later.
பராந்தகன் காலத்தில் அதிகாரம் பரவலாக்கப்படுகிறது. ஊர்களில் நிர்வகிக்க, ஊர் சபைகள் உருவாக்கப்படுகிறது. சோழ நாட்டு மக்கள் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுகிறது. சோழர்கள் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில் புது தலைமுறைகள் தோன்றுகின்றன. அந்த ஆட்சியின் வழக்கங்கள் தேச வழக்கங்கள் ஆகிறது.
43 வருடங்கள் ஆண்ட பராந்தகனின் ஆட்சியில் ஒரு நிலையான ஒரு அதிகார கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. சோழ அரசர்கள் மெல்ல மெல்ல தென்னிந்தியாவின் வலிமை மிக்க அரசாக மாறுகிறார்கள். சேரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் இழக்க ஆரம்பிக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் இந்த காலகட்டத்தில் சிங்கள அரசு, மற்றும் பாண்டிய சேர அரசுகளுக்குள் தங்கள் வேலையை ஆரம்பிக்கிறார்கள். சோழர்கள் எதிராக செயல்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் மய்யத்தில் நின்றே பார்ப்பனர்கள் செயல்படுகிறார்கள்.
சேரர்களின் வீழ்ச்சி உறுதியான பிறகு தான் சோழ தேசத்துக்குள் தங்கள் காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறது பார்ப்பனியம். சேர நாட்டை போல் சோழ நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நோக்கமாக இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு போதும் சோழ அரசு இடம் கொடுக்கவில்லை.
The highest authority was always the Non-Brahmin Cholas! பார்ப்பான் கோவிலுடன் நிறுவனமயமாக்கபடுகிறான். அதுவரை சேர நாட்டில் அனுபவித்த கட்டற்ற அதிகாரத்தை இழக்கிறான் பார்ப்பான். இங்கே தான் வைணவ-சைவ வேற்றுமை அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும்.
சேரர்கள் வைணவத்தின் பிரதிநிதிகளாக அந்த காலகட்டத்தில் இருந்தார்கள். குலசேகர வர்மன் was the culprit. ஐந்து நூற்றாண்டுகளாய் காணாமல் போன சேர அரசை, பார்ப்பான் மீண்டும் உருவாக்குகிறான், பௌத்தத்தை விரட்டி, வைணவத்தை நிலைநிறுத்துகிறார்கள். இது முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு
திக திமுககாரன் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ள திராவிடத்தை சுருக்கி பார்ப்பானுங்க, அதை தாண்டி நடந்த எதுவுமே இவனுங்க கண்ணுக்கு தெரியாது. அதனால் இந்த சேர நாட்டு வரலாற அவனுங்க பேச மாட்டாணுங்க.. இந்த வைணவ கட்டமைப்பின் ஊடாக சோழர்களின் அதிகாரத்துக்குள் ஊடுருவ பார்ப்பானால் முடியவில்லை.
பராந்தகன் ஆட்சி காலம் வரை பார்ப்பானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குழப்பம், சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தான். போர் காலங்களில் தொடர் மரணங்கள் நிகழ்ந்தது சோழ அதிகார வட்டத்துக்குள் குழப்பங்கள் தொடங்கின.
கண்டராதித்ய சோழன் காலத்தில் இருந்து உத்தம சோழன் காலம் வரை சோழ பேரரசு தாக்கு பிடிக்க காரணமாய் இருந்தது சோழப்பேரரசி பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார்(910-1001) தான். (கண்டராதித்தரின் மனைவி)
செம்பியன் மாதேவியின் சைவப்பற்று பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அரசி வளர்ப்பில் வந்த சோழர்கள் தான் சோழ அரசை பேரரசாக மாற்றியவர்கள். இவரின் சைவப்பற்று ஊடாக தான் பார்ப்பான் சோழ தேசத்துக்குள் தன்னை நிறுவனப்படுத்துகிறான்.
கோவில் நிர்வாகம் ஒழுங்குப்படுத்தப்பட்ட காலம் இது, பார்ப்பான் நிலங்களை இலவசமாக பெற்றுக்கொள்வது நடைமுறையான காலமும் இது தான்.
Will continue later.
சேர அரசை மீள் உருவாக்கம் செய்த பார்ப்பனர்கள், அங்கு வீழ்ச்சியை சந்திக்கிறார்கள், பாண்டிய, சிங்கள அரசுகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.சோழனை வீழ்த்த துடித்த பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்தது சிங்கள அரசனும்,பிறகு சேர நாடும் தான்.பிறகு சேர நாடு சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது
அந்த processஇல் பார்ப்பான் என்ன மாதிரியான bakery dealingஇல் ஈடுபட்டான் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் சேர நாட்டின் அரச குடும்பம் போல் பார்ப்பான் செயல்பட்டிருக்கிறான். வைணவம் கொண்டு சேர நாட்டில் அவன் பௌத்தத்தை வெற்றிக்கரமாக வீழ்த்தியிருக்கிறான்.
அப்ப அவனின் baseஆ இருந்தது சேர நாடு, சோழ நாடு அல்ல. சோழர்கள் வளரும் போது பார்ப்பான் கோவில் எனும் நிறுவனத்தின் பிடியில் வளர்ந்தான். அதன் பின் பார்ப்பான் கோவிலை ஒரு அதிகார மய்யமாக மாற்றித்தான், சோழர்களின் ஆட்சியில் பலன் அடைந்தான்.
பார்ப்பான் மட்டும் அல்ல, பிற வணிக குழுக்களும், ராணுவ குழுக்களும் கூட அதிகாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினார்கள். சிங்கள அரசில் பௌத்த பார்ப்பனியம் செலுத்திய ஆதிக்கத்தை சோழ அரசில் பார்ப்பானால் செலுத்த முடிந்ததா, ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்.
சேர நாட்டை ஆண்ட பார்ப்பானால், சோழ நாட்டை ஆள முடிந்ததா? இல்லை, அது ஏன்? சேர அரசு, குலசேகர மன்னர்கள், வைணவ-பௌத்த போர், செம்பியன் மாதேவியின் சைவம் எல்லாத்தையும் விட்டுட்டு என்ன மயி..பாஜகவுக்கு நீ ராஜ ராஜனில் இருந்து தொடங்குற? திக, திமுகவினரே உங்களிடம் தான் கேட்கிறேன்!
ராஜ ராஜனும் அவன் புலிக்கொடியும் தமிழர்களின் ஓர்மையின் குறியீடாக இருப்பது உனக்கு பிரச்சனையா இருக்கா? ஏன் பார்ப்பான் appropriation of Tamil history நீ பைத்தியக்காரன் மாதிரி உதவுகிறாய்?
சோழர்களும் பார்ப்பனியம்
Article வடிவில்.
mrpaluvets.com/2019/12/blog-p…
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Mr.பழுவேட்டரையர்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!