Mr.பழுவேட்டரையர் Profile picture
தமிழன். அகதி. Atheist/Rationalist. Belongs to the Tamilian Stock.
இ.பு.ஞானப்பிரகாசன் | E.Bhu.Gnaanapragaasan Profile picture P.T.T.T Profile picture மணிகண்டன் Profile picture மயூரன்🟨🟥 Profile picture நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264 Profile picture 5 subscribed
Jul 12, 2022 10 tweets 2 min read
கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும்.

▪️அரசியல்வாதிகளின் இடப்பெயர்வு:

தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது.
Apr 18, 2022 12 tweets 2 min read
Tamil Nationalism's social justice history starts from the abolishment of the Adimai-Kudimai system.
👁️‍🗨️ Caste was criminalised by the Tigers.
👁️‍🗨️The Jaffna Youth Congress & the Federal party spoke of Caste abolishment.
#அறிவோம்ஈழம் 👁️‍🗨️The ITAK/Federal Party was formed championing the citizenship rights of the Upcountry Tamils.
👁️‍🗨️The Federal Party and the Tamil Tigers used the term 'Tamil speaking people' instead of Tamils in order to accommodate the Muslims, who wanted to identify themselves as Muslims
Apr 16, 2022 5 tweets 2 min read
I cant understand the negative reviews. I thoroughly enjoyed #Beast. It is doing well here in Australia. The only thing i felt the movie lacked was a pakka intro song.
The climax jet fight chase down all could have been avoided,but that doesnt weigh down the movie. So it was fun. As a movie, as an entertainer it works. We go to a Vijay movie expecting larger than life heroism, crazy stunts, great dance numbers and some tharmaana comedy. #Beast ticks all the boxes.
Mar 8, 2022 20 tweets 6 min read
Thread: #அறிவோம்ஈழம்

ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO,EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.
Full Article link: mrpaluvets.com/2022/03/child-… PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.
Mar 7, 2022 14 tweets 5 min read
'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. #அறிவோம்ஈழம்

mrpaluvets.com/2022/03/blog-p… அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.
Jan 21, 2022 22 tweets 4 min read
எங்கள் ஊடகங்களும், மக்களும் 13ஐ பற்றியும், அது தொடர்பான அந்த கடிதத்தை பற்றியும் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லியும் கொழும்பும் இன்னொரு 'இந்திய-இலங்கை ஒப்பந்தம்' சம்பந்தப்பட்ட செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

The Story behind the Trincomalee Oil Tank deal.
#அறிவோம்ஈழம் தெற்காசியாவின் புவி சார் அரசியலின் மிக முக்கியமான geopolitical spotஆக திருக்கோணமலை துறைமுகம் இருக்கிறது. திருக்கோணமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக வல்லாதிக்கங்கள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் யாவரும் அறிந்ததே. இதில் டெல்லியின் நகர்வுகள் பற்றிய ஒரு சிறு பதிவு தான் இது.
Jun 4, 2021 4 tweets 1 min read
/ பிரபாகரன் தமிழகத்துக்கு என்ன செய்தார்?

நாம் தமிழர் ஈழத்துக்கு என்ன செய்தது? /

திராவிட தரப்பு என்னிடம் அதிகம் கேட்கும் 2 கேள்விகள்.

தமிழ்நாடு,ஈழம் இரண்டுக்கும் இடையிலான 'எல்லைகள்' இந்த கேள்விகளில் காணாமல் போகிறது. அதான்,அந்த solidarity அரசியல் தான், அவர்கள் சாதித்தது! ஈழத்துக்கான நாம் தமிழரின் பங்களிப்பு, தமிழ்நாட்டுக்கான புலிகளின் பங்களிப்பு பற்றிய கேள்விகளில் எல்லைகள் கடந்த தமிழின ஒற்றுமை குறித்தான ஒரு எதிர்ப்பார்ப்பு தென்படுகிறது.

That is the solidarity politics that they built.
Jun 2, 2021 5 tweets 1 min read
நான் கடைசியாக உங்கள் வங்கிக்கு தான் 200 கோடி + ₹23,754.50 ரூபாய் January மாசம் 4ஆம் திகதி அனுப்பி வைத்தேன்

நீங்க கூட அந்த பணத்துல ஒரு வெள்ளி bracelet வாங்கி போட்டு கொண்டதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது பொய் என்றால் உங்கள் Jan மாச வங்கி statementஅ காட்டுங்க! That வெள்ளி bracelet. 😏 Image
Jun 2, 2021 9 tweets 2 min read
Who said China doesn't want to engage with the Tamils? If India and West thinks China doesn't understand the ethnic issues in the island they are wrong. It is the Eelam Tamil's pro-West, Pro-Indian stand that is still giving the International community a presence in Ceylon. China is invoking the historical relationship they have with the Tamils in the island. China will not make the name board mistakes again. They are not in the island to impose a language or to confront the locals. They are not that foolish.
Jun 1, 2021 4 tweets 1 min read
twitter.com/i/spaces/1DXxy… ▪️தமிழ் அரசன் ஒருவனுக்கும் சீனர்களுக்கும் இடையில் தமிழர் கடலில்(ஈழத்தில்) நடந்த கடைசி போர்(வரலாற்றில் இருந்து)
▪️சீனாவின் சிங்கள தேச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
▪️சிங்கள அரசியலில் சீனாவின் ஆதிக்கம்
▪️பழைய கொழும்பின் அழிவு
▪️கொழும்பு துறைமுக நகர் + ஹம்பந்தோட்ட.. etc..
May 29, 2021 5 tweets 1 min read
அந்த உரையாடலில் எந்த கட்சி தொடர்பாகவும் பேசுவதில்லை என்ற முடிவோடு தான் ஆரம்பித்தோம். இன்னொரு spaceஇல் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, மதிமுக, விசிக, என்று அனைத்து கட்சிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு விவாதிப்போம் வாருங்கள். அப்பறம் நான் பேசுவது உங்களுக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் அந்த spaceஇல் சீமானை தாக்க வேண்டும் என்ற முன்முடிவுடன் கலந்து கொண்டீர்கள். நான் அந்த உரையாடலில் நாம் தமிழர் மட்டும் அல்ல, திமுக தொடர்பாகவும் கூட தான் பேசவில்லை. உங்கள் நோக்கம் அந்த
May 29, 2021 17 tweets 2 min read
இன்றைய Spaceஇல் பகிரப்பட்ட கருத்துக்களை இங்கே summarize செய்கிறேன்

▪️பாலியல் தொல்லைகள் தொடர்பாக பெண்கள் தைரியமாக முன்வந்து பேசக்கூடிய சூழல் வேண்டும் என்றால், அரசியலிலும், சமூகத்திலும், அதிகாரமிக்க இடங்களில் பெண்கள் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாக Decision makersஆக, பெண்கள் இருக்கும் போது, அந்த சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளை பற்றி பேச, அதற்கெதிராக போராட தைரியமாக முன்வர கூடிய ஒரு சூழல் இருக்கும்.
May 28, 2021 9 tweets 2 min read
Sexual harrasments, indecent advancesக்கெல்லாம் எல்லா நேரங்களிலும் ஆதாரங்கள் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் நடப்பது ஒரு பாலியல் தொல்லை என்று புரிந்து கொள்ளவே பலருக்கு பல வருடங்கள் எடுக்கும். Sexual harassment, கேலியாக, கலாச்சாரமாக, இயல்பாக, ஆண்மையாக normalise செய்யப்பட்ட ஒரு சூழலில் தான் பெண்கள் வாழ்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் உடனடியாக வெளியே கொண்டு வர கூடிய சூழல் இந்த சமூகத்தில் கிடையாது, வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு சின்மயி எனும் ஒரு பெண்ணிடம் இருந்து மட்டும் வரவில்லை. பலரிடம் இருந்து வந்திருக்கிறது.
May 28, 2021 4 tweets 1 min read
This song is not Poetry, this is some pathetic justification of Pedophilia. பள்ளிச் சீருடையில் ஒரு பிள்ளை, ஒரு முதியவர் மீது காதல் கொள்வது போன்ற பாடல்களை ஊக்குவிக்கும் சூழலிலா நாம் இருக்கிறோம்? அதுவும் இந்த பாடலில் நியாயப்படுத்தப்படும் 'வயதறியா முத்தம்',
வழங்கியதாக குற்றம், அல்ல குற்றங்கள், குற்றச்சாட்டுகள் பல இந்த வக்கிர வரிகளை வடித்த கவிஞர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அதற்கு சரியான நீதி வழங்கப்படாது,
அதில் பாதிக்கப்பட்ட பெண்கள், சமூகத்தின் பார்வையில் நித்தமும் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில்,
May 27, 2021 9 tweets 6 min read
இன்றைய Spaceஇல் நான் சொன்ன செய்திகளின் ஆதாரங்களை இந்த threadஇல் பதிவிடுகிறேன்.

Year:1844
'அடிமை, குடிமை' கொடுமைகளை ஒழிக்க ஆறுமுக பிள்ளை குமாரசாமி அவர்கள் முன்னெடுத்த போராட்ட வரலாறு.

Image 2, அவரது போராட்டத்தை ஆதரித்து கையொப்பமிட்ட அன்றைய பிற தலைவர்களின் பெயர்கள்
#அறிவோம்ஈழம் ImageImage Tree Tax வரலாறு பற்றி நான் சொன்ன செய்திகள் எல்லாம் 'Report of the Special Committee to Investigate the Working of the Tree Tax System in Jaffna, 1954' அறிக்கையில் இருந்து எடுத்த செய்திகள். I have highlighted the points that i said in the Space
#அறிவோம்ஈழம் ImageImageImage
Apr 29, 2021 4 tweets 1 min read
அண்ணன் திருமாவை திராவிடர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் தலைமையேற்க மாட்டார்கள். திராவிடத்தின் அடுத்த கட்ட தலைவர் உதயநிதி தான். இங்கே அண்ணன் திருமா சொற்ப அதிகாரத்தை அடைய வேண்டும் என்றால் கூட, திராவிடத்தின் ஆசியை பெற்றால் தான் முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலையை உருவாக்கியது, சமூகத்தை தாண்டிய அரசியல் கட்டமைப்புகள் தான். விசிகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது திராவிடத்துடனான கூட்டணி மட்டும் தான். ஆதிக்க சக்தி என்பது ஆரியத்தின் வடிவில் மட்டுமா இருக்கிறது? தமிழகத்தில் அதிகாரம் யாரிடம் குவிந்திருக்கிறது.
Apr 29, 2021 15 tweets 3 min read
ஈழ விடுதலைக்கான அண்ணன் கொளத்தூர் மணியின் பங்களிப்பை பற்றி தமிழ்த்தேசியம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் திராவிடம் அதை பற்றி ஏன் பேசுவதில்லை? அண்ணன் கொளத்தூர் மணியின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், அவரை பேட்டி எடுக்கும் திரு @Makizh_nan என்பவர், ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார். அண்ணன் கொளத்தூர் மணியை பார்த்து அவர் "நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே தேசியத் தலைவர் பிரபாகரனை கொண்டாடிவிட்டீர்களோ"? என்றாற்போல் ஒரு கேள்வியை கேட்கிறார். அண்ணன் மணியும் அதற்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்.
Apr 28, 2021 5 tweets 2 min read
அண்ணன் சீமானை பற்றி பேசுவதன் ஊடாக, திராவிட இளைஞர்கள் மத்தியில் அண்ணன் கொளத்தூர் மணி போய் சேர்கிறார் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திராவிட இளைஞர்களே மதிமாறன்கள், பிரசன்னாக்களை விட முக்கியமானவர் அண்ணன் கொளத்தூர் மணி, அவரிடம் இருந்து நிறைய வரலாற்று செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம், சீமான் அண்ணன் பற்றிய அவரது விமர்சனங்களை பார்ப்பதோடு நிறுத்தி விடாமல், மணி அண்ணனின் மற்ற காணொளிகளையும் தேடி தேடி பாருங்கள்.
Apr 27, 2021 8 tweets 1 min read
நான் இங்கே அண்ணன் திருமாவையோ, அண்ணன் வைகோவையோ யாரிடமும் விட்டு கொடுத்து பேசியதில்லை. ஆனால் மதிமுகவினரும், விசிகவினரும் என்னை எதிர்த்து பதிவிடுவார்கள். அதற்கு காரணம் peer pressure. ஆனால் திமுககாரன் ஒரு போதும் விசிக மதிமுகவுக்காக வந்து நிற்க மாட்டான். ஒரு விசிக தோழரோ, அல்லது மதிமுக தோழரோ என்னை எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்கள் திமுகவுக்காக எடுக்கும் ஒரு நடவடிக்கை. அவர்கள் என்னை தரம் தாழ்ந்து பேசுவதற்காக நான் அவர்களுடன் அதிகம் சண்டை பிடித்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் தொடர்பான எனது விமர்சனங்களும் அதிகமாக இருக்காது.
Apr 25, 2021 8 tweets 2 min read
மக்களுக்கு சேவை செய்வது என்பது ஒரு அரசியல்வாதியின் அடிப்படை job description. அதிகாரம் வரும் போது,அந்த சேவை கடமையாகிறது.It's a social contract.திமுகவினரும் அதிமுகவினரும் தங்கள் சொந்த பணத்திலா மக்களுக்கு சேவை செய்கிறார்கள்?அது உங்கள் பணம்!
#டுபாக்கூர்திராவிடம் திராவிட கட்சிகள் தங்கள் பணத்தை வைத்து உருவாக்கியது சன் டிவி, ஜெயா டிவி, மற்ற பல டிவிகள், மது ஆலைகள், மணல் கொள்ளை கம்பெனிகள், real estate, அப்பறம் இலங்கையில் 26,000 கோடி முதலீடு etc etc. Hospital, பாடசாலை எல்லாம் கட்டினது மக்களின் பணத்தை வைத்து தான், கட்சி பணத்தை வைத்து அல்ல!
Apr 23, 2021 8 tweets 1 min read
தமிழ் அடையாளத்தை விட திராவிட அடையாளத்தின் மீது தான் சாதியவாதம் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இங்கே சாதிய கட்சிகள் எல்லாம் திராவிட கட்சிகளை நம்பி, அதன் கூட்டணி கூடார நிழலில் தான் இயங்குது. இங்கே தமிழுக்கு அதிகாரமும் இல்லை, ஆதிக்கமும் இல்லை. சாதியை உற்பத்தி செய்தது சனாதனம், சாதியை வளர்த்து விடுவது இந்து மதம்,அரசியல் களத்தில் சாதியை சந்தைப்படுத்துவது திராவிடம், ஆனால் பழி மட்டும் தமிழ் எனும் அடையாளம் மீது சுமத்தப்படுகிறது. தமிழர்கள் என்று சொன்னால் பார்ப்பானும் உள்ளே வந்துவிடுவானாம், இது என்ன பித்தலாட்டம்?